என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raiders arrested"

    • ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளோம்.
    • மாநகரில் 444 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.

    கோவை

    கோவை மாநகரில் நேற்றுமுன்தினம் இரவு சத்தியா பாண்டி என்ற வாலிபரும், நேற்று காலை கோர்ட்டு அருகே கோவில் பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவரும் ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

    அடுத்தடுத்து அரங்கேறிய இந்த கொலை சம்பவங்கள் கோவையில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவை மாநகரில் 2 நாட்கள் நடந்த ெகாலை சம்பவத்தில் ரவுடிகள் கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    கோவை மாநகரில் 6 குழுவாக ரவுடிகள் கும்பல் செயல்பட்டு வருகிறது. மாநகர் முழுவதும் மொத்தம் 153 ரவுடிகள் இருப்பது பட்டியல் இடப்பட்டுள்ளது.

    கோவையில் ரவுடிகளை ஒழிக்க ரவுடி கும்பல் ஒழிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

    அதன்படி மாநகரில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களில் யாராவது தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    முதற்கட்டமாக நேற்று ரத்தினபுரி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும். ரவுடிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ரவுடிகள் இல்லா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்.களில் அடுத்து கொள்ளை சம்பவம் நடந்தை அடுத்து, ேகாவை யிலும் ஏ.டி.எம். மையம் இருக்கும் பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவி ட்டுள்ளோம்.

    மாநகரில் 444 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.

    இந்த பகுதிகளில் போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×