search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Project"

    • ரெயில்வே திட்டங்களை மேம்படுத்த வேண்டும்
    • அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினர்.

    ராஜபாளையம்

    ரெயில்வே திட்டங்கள் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் ரெயில்வே அதிகாரிகள், மாவட்ட வருவாய், காவல்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி உச்சநீதிமன்ற வக்கீலும், ராஜபாளையத்தை சேர்ந்தவருமான ராம் சங்கர் ராஜா கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தார். அதன்படி இரவு நேர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மைசூருக்கு தென்காசி, ராஜபாளையம் வழியாக இயக்க வேண்டும். அதேபோல் இரவு நேர சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு தென்காசி, ராஜபாளையம், மதுரை, பழனி, கோயம்புத்தூர், திருப்பூர் வழியாக இயக்க வேண்டும்.

    எம்.இ.எம்.யு. என்ற சிறப்பு ரெயில் செங்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், மதுரை, செங்கோட்டை, கொல்லம் வழியாக இயக்க வேண்டும். சிலம்பு விரைவு ரெயிலை தினந்தோறும் இயக்க வேண்டும்.

    மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க ராஜபாளையத்தில் இருந்து காலை நேர ரெயில் இல்லை. எனவே அந்த ரெயிலில் பயணம் செய்வதற்கு ஏதுவாக ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு ரெயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

    ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கரிவலம்வந்தநல்லூர் கிராசிங்கில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய வேண்டும். ராஜபாளை யத்தில் ரெயில்வே சப்-வே அமைக்க வேண்டும். ராஜபாளையத்தில் ரெயில்வே திட்டங்களை மேம்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை ராமசங்கர் ராஜா முன் வைத்தார்.

    கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×