என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rainbow"
- வானவில் என்பது மழை பெய்வதற்கு முன்னும், பின்னும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும்.
- இரட்டை வானவில் என்பது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது.
சென்னை:
நீல வானம்.. அண்ணாந்து பார்த்து கண்களை ஓடவிடும் கவிஞர்களுக்கு கவிதைகள் படைக்கும் மைதானமாக விளங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து தான் எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலை பொழுது.." பாடல் வரிகளிலேயே, "வானம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கது சேதி தரும்" என்று சிலாகித்து இருப்பார்.
நீல வானில், இரவு நேரத்தில் நிலா, நட்சத்திர கூட்டங்கள் அலங்கரித்தாலும், பகல் நேரத்தில் பஞ்சு போன்ற வெண் மேகக் கூட்டங்கள் மட்டுமே காட்சி அளிக்கும். ஆனால், எப்போதாவது தோன்றும் வானவில், வானில் வர்ணஜாலம் காட்டி கண்களுக்கு விருந்து படைப்பது பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். அதுவே, இரட்டை வானவில்லாக தோன்றினால், இரட்டை சந்தோஷம்தான். அப்படியொரு காட்சி நேற்று மாலை சென்னையில் தோன்றி மக்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.
பொதுவாக வானவில் என்பது மழை பெய்வதற்கு முன்னும், பின்னும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். அதாவது, காலையில் மேற்கு திசையிலும், மாலையில் கிழக்கிலும் தோன்றும். நண்பகல் நேரத்தில் வானவில் தோன்றாது.
இனி வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை பற்றி பார்ப்போம். சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச் சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகி 7 வண்ணங்களாக (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு) வில்போல் வளைந்து வானவில்லாக தோன்றுகிறது.
இரட்டை வானவில் என்பது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது. இரட்டை வானவில் தோன்றும்போது இரண்டாவது வானவில்லில் ஊதா நிறம் வெளியேயும், சிவப்பு நிறம் உட்புறமாகவும் இருக்கும்.
அப்படியொரு காட்சியைத்தான் நேற்று சென்னைவாசிகள் தூறிய சாரல் மழைக்கும், மிதமான வெயிலுக்கும் இடையே வானில் கண்டு ரசித்து பரவசம் அடைந்தார்கள்.
இதற்கு முன்பு சென்னையில் இரட்டை வானவில் கடந்த மே 16, ஜூன் 10 ஆகிய தேதிகளிலும், கோவையில் ஜூன் 8-ந் தேதியும், பெங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதியும் இதேபோல் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
- வானவில் மன்ற கருத்தாளர்கள் சுமார் 61 பேர் கலந்து கொண்டனர்.
- இயற்பியல் வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள் 61 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியை தஞ்சைமாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறை உதவித்திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் பேராசிரியர் சுகுமாரன், மாவட்டச்செயலர் முருகன் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலகருத்தாளர்கள் ராஜபாண்டி, சங்கரலிங்கம், அறிவரசன், பாரதிராஜா மற்றும்அருண்குமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு, இழுத்தல் மூலம் விசையின் செயல்பாடு, பலூன் செயல் முறை மூலம் அழுத்தம் தொடர்பான பயிற்சி, கூடைப்பந்து விளையாட்டு மூலம் குழந்தைகளின் கவனத்தை ஒருங்கிணைத்தல் மேலும் இயற்பியல் வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கினர்.
பயிற்சியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, மாவட்டங்களை சார்ந்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஸ்டெம் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தஞ்சைமாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை ஸ்டெம் ஒருங்கி ணைப்பாளர் சவுமியநா ராயணன் நன்றி கூறினார்.
- நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
- தற்போது ராஷ்மிகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், இந்தியில் அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கவிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'ரெயின்போ' என்று பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதாநாயகனாக சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ள நடிகர் தேவ் மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Today marks the start of a colourful journey. Join us as we bring the world of #Rainbow to life! ? @iamRashmika @ActorDevMohan @bhaskaran_dop @justin_tunes @thamizh_editor #Banglan @sivadigitalart @Shantharuban87 @prabhu_sr#RainbowFilm #RainbowPooja pic.twitter.com/puANA99qWM
— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 3, 2023
- கடாரங்கொண்டான் அரசு பள்ளியில் வானவில் மன்றம் நடைபெற்றது
- ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி கலந்து கொண்டு அறிவியல் நுட்பங்களை விளக்கி பேசினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் நுட்பங்களை விளக்கி பேசினார். புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் உற்று நோக்கங்களின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களிடையே எடுத்துரைத்தார். கல்வித் துறை சார்பில் அறிவியல் தூதுவராக கலந்து கொண்ட சதீஷ்குமார், அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்திய பெர்னௌலி தத்துவம், ஸ்பிரேயர் செயல்படும் விதம், நீர் சூழல் மற்றும் அதன் தாக்கம், வாயுக்களில் அழுத்தம் வேறுபாடு, பருமப்பொருள்களில் அழுத்தம் போன்ற செயல்பாடுகளை செய்து காட்டி மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் புஷ்பவல்லி, சவேரியம்மாள், இளமுருகு ஆகியோர் செய்திருந்தனர்.
- ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவை புரிந்த மருத்துவம், காவல்,தீயணைப்பு, பத்திரிக்கை துறையினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொதுசெயலாளர் வரதராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், உதவி ஆளுநர் ராமகிருஷ்ணன்,ரெயின்போ ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் தங்கலட்சுமி நடராஜன், கவிதா சுந்தர்ராஜன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்