என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raja mla"

    • தி.மு.க. சார்பில் சங்கரன்கோவிலில் சட்டமன்ற அலுவலகத்தின் முன்பு பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.
    • நகரக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பேராசிரியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவிலில் சட்டமன்ற அலுவலகத்தின் முன்பு பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே நகரக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பேராசிரியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பரமகுரு, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், நகர அவைத்தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கேஎஸ்எஸ் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், போக்குவரத்து தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல்நெல்சன், இளைஞர் அணி சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ்அலி, முன்னாள் சேர்மன் பாலசுப்ரமணியன், மூத்த உறுப்பினர் சந்திரன், நிர்வாகிகள் வீரா, ஜிந்தா, ஆறுமுகம், மற்றும் தீன்மைதீன், அன்சாரி, ரகுமான், வக்கீல் சதீஷ், ஜெயக்குமார், பிரகாஷ், ஜான், வைரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • சங்கரன்கோவில் தொகுதியில் மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சாகுபடி காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை விவசாயம் என்பது மிக முக்கிய பிரதான தொழிலாகும்.சங்கரன்கோவில் தொகுதியில் மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தி்ல் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. திருவேங்கடம் வட்டம் அ.கரிசல்குளம் பழங்கோட்டை குறுவட்ட விவசாயிகள், நடுவக்குறிச்சி பிர்க்கா விவசாயிகள் 2020 - 21, 2021-22-ம் ஆண்டுகளில் மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய உரிய உரிமை தொகை கட்டியுள்ளனர்.

    அந்த சாகுபடி காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரண தொகை அறிவிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படாமல் ஒருசில கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உத்தரவான தொகை விவசாய உயர் அதிகாரி களால் முழுமை யாக வழங்கப்படாமல் இருப்ப தாக விவசாயிகளிடமிருந்து புகார் வரப்பட்டுள்ளது.

    எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து வறட்சி நிவாரண தொகை வழங்கப்பட வேண்டிய அனைத்து விவ சாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

    • தி.மு.க. சார்பில் உச்சினி மாகாளியம்மன் கோவிலுக்கு கிரீடம், வேல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நலத்திட்ட உதவிகளை ராஜா எம்.எல்.ஏ. மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் வழங்கினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் 27- வது வார்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் புனிதா அஜய் மகேஷ் குமார் ஏற்பாட்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கிரீடம் மற்றும் வேல் மற்றும் கருப்பசாமி கோவிலில் 1,000 லிட்டர் குடிநீர் தொட்டி வழங்குதல், கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா, நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அஜய்மகேஷ்குமார் வரவேற்றார்.

    நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் சுப்புத்தாய், முத்துக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் அலமேலு, புஷ்பம், செல்வராஜ், வேல்ராஜ், 27-வது வார்டு அவை தலைவர் முப்பிடாதி, வார்டு துணை செயலாளர் ராசு, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

    • சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதல் வகுப்பறை வசதி செய்து கொடுக்கபட்டுள்ளதாக ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.


    சங்கரன்கோவில்:


    சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெல்லை மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், பெங்களூர் குழந்தை உரிமையும் நீங்களும், மக்கள் நல்வாழ்வு இயக்கம் இணைந்து குழந்தைகளுக்கான நல வாழ்வு மேம்பாட்டிற்கு சமூக நலத்துறை, சுகாதார துறை மற்றும் கல்வி துறை ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


    கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் லாலா சங்கர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரிமுத்து, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை களம் ராதா வரவேற்று பேசினார். மனித உரிமை களம் இயக்குனர் பரதன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.


    கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-


    குழந்தைகள் தான் நம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க கூடியவர்கள். அவர்களுக்கு நல்ல சத்துணவு, மருத்துவம், தரமான கல்வி ஆகிய மூன்றும் கிடைப்பதற்காக இந்த 3 துறையில் உள்ளவர்கள் சிறப்பாக பணி செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பை அரசு முழுமையாக நடைமுறை ப்படுத்தி வருகிறது.


    ஒவ்வொரு பள்ளியிலும் சென்று கூடுதல் வகுப்பறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கபட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறை மூலம் இணைந்து செயல் படுகிறது. குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 அனைத்து பாட புத்தகத்தில் அச்சிட்டுவழங்கப்படுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறை பாட்டை போக்க சட்ட மன்றத்தில் குரல் எழுப்பபடும்.


    இவ்வாறு அவர் பேசி னார்.


    தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, மக்கள் நல்வாழ்வு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், , சங்கரன் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சந்திரா, கரிவலம்வந்தநல்லூர் அரசு மருத்துவர் சரவண குமார், குருவிகுளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா, மேலநீலிதநல்லூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி, ஊர் நல விரிவாக்க அலுவலர் பானு ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.


    இதில் தலைமை ஆசிரி யர்கள், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவி குளம் ஆகிய ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், சுகாதார மேற் பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெண்கள் பாதுகாப்பு துறை பணியாளர்கள், கிராம வார்டு உறுப்பினர்கள், சங்க பெண்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொண்டனர்.


    ஏற்பாடுகளை நெல்லை மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், மக்கள் நல்வாழ்வு இயக்கம், பெங்களூர் குழந்தை உரிமையும் நீங்களும் அமைப்பினர் செய்திருந்தனர். மனித உரிமை களம் பணியாளர் வேலம்மாள் நன்றி கூறினார்.


    • தலையணை மற்றும் கோட்டமலையாறு பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 140 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • எம்.எல்.ஏ.விடம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தலையணை மற்றும் கோட்டமலையாறு பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 140 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    கடந்த நவம்பர் 27-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பழங்குடியின மக்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பழங்குடியின மக்கள் தங்களுக்கு வீட்டு வசதி, வீட்டுமனைபட்டா, அங்கன்வாடி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அவரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ராஜா எம்.எல்.ஏ. அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தார்.

    இந்நிலையில் தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழியை சந்தித்து வாசுதேவநல்லூர் தொகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அந்த பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • தென்காசி வடக்கு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி அமைச்சர் சக்கரபாணியிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    • 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்காக அமைச்சருக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவ நல்லூர், புளியங்குடி, திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் மிகப் பிரதான தொழிலாகும். இங்கு அனைத்து பகுதிகளிலும் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது நெல் உற்பத்தி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தென்காசி வடக்கு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துக் கொடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதை வலியுறுத்தி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் தனது தொகுதியில் 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார். மேலும் ராஜா எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சக்கரபாணி விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    • புத்தாண்டை முன்னிட்டு ராஜா எம்.எல்.ஏ., கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிர்வாகிகள் 2 பேருக்கு நிதி உதவி வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் நகர தி.மு.க. மூத்த முன்னோடியும், தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நகர செயலாளருமான பரமபால்பாண்டியன், மற்றும் முன்னாள் வார்டு செயலாளர் ஆறுமுகம் ஆகியோரது வீடுகளுக்கு நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, நிதி உதவி அளித்தார்.

    இதில் நகர செயலாளர் பிரகாஷ், நகரத் துணை செயலாளர் மாரியப்பன், மாணவரணி கார்த்தி, வார்டு செயலாளர்கள் வீரச்சாமி, சிவா மற்றும் வெங்கடேஷ், ஜான்சன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • சமத்துவ பொங்கல் விழாவுக்கு கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார்.
    • விழாவில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசினர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வணிகவியல் துறை தலைவர் வேணுகோபால் வரவேற்றார்.விஜிலா ஜாஸ்மின் தொகுத்து வழங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    சமத்துவ பொங்கல் என்பது அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுகின்றது முன்பெல்லாம் சிறிய அளவில் நடந்து வந்த நிகழ்ச்சி தற்போது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

    உயர்கல்வி துறையில் மிகப்பெரிய புரட்சி செய்த வர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். 1989-ல் தமிழகத்தில் மாவட்ட அளவில் ஒரு கல்லூரி என இருந்த நிலையில் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உருவாக காரண மாக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

    மேலும் காமராஜர் வழியில் கல்விக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000-மும் ஊக்க தொகை வழங்கி மாணவிகளின் கல்வியை ஊக்குவித்து வருகின்றார்.

    தற்போது சங்கரன் கோவில் தொகுதியில் 30 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. மாணவ , மாணவிகளான நீங்கள் கல்வி விளையாட்டு மட்டுமல்லாமல் நமது தொகுதி முன்னேறவும் உங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் யூனியன் சேர்மன் அன்புமணி, மூத்த உறுப்பினர் சந்திரன், சார்பு அணி பத்மநாபன், பிரேம்குமார், இளைஞர் அணி சரவணன், ஆதிதிராவிடர் அணி யோசேப்பு, சூரியநாராயணமூர்த்தி, வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, வைரவேல், வெள்ளத்துரை, சிவா மற்றும் மாரிகுட்டி, ஜான், பாரதிராஜா, பில்லா கணேசன், வக்கீல் சதீஷ் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் துறை தலைவர் கலாகோபி நன்றி கூறினார்.

    • சங்கரன்கோவில் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.68 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டுவத ற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தினசரி மார்க்கெட் கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.68 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டுவத ற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் ஹரிகரன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட துணை செயலாளர் புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தினசரி மார்க்கெட் கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்து பேசினார்.

    இதில் காஞ்சிபுரம் பட்டு நூல் கழக சேர்மன் மணிவண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யதுஅலி, இளைஞர் அணி சரவணன், மார்க்கெட் சங்க நிர்வாகி கணேசன், யோசேப்பு, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், கே.எஸ்.எஸ். மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் குருப்பிரியா, அலமேலு, புஷ்பம், செல்வராஜ், ராமுராமர், வேல்ராஜ், ராஜாஆறுமுகம், சாகுல் ஹமீது, வக்கீல்கள் சதீஷ், ராம்குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், மூத்த நிர்வாகி சந்திரன், நகராட்சி கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து, மற்றும் ஜிந்தா மைதீன், சிறுபான்மையர் அணி அப்துல் காதர், அரசு ஒப்பந்ததாரர் நிஜார் மற்றும் வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, வைரவேல், சரவணன், தங்கவேலு, தாஸ், விக்னேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    • சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது
    • கேரளா மாநிலத்தில் வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றி நீக்கப்பட்டது.
    சங்கரன்கோவில்:

    அமைச்சர் மதிவேந்தனை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் உள்ளதாகவும், காட்டுப்பன்றிகள் தொடர்ந்து விவசாய நிலங்களை பெரும் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது எனவும், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் இதை வலியுறுத்தி காட்டு பன்றிகளை வன பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அப்போது இருந்த வனத்துறை அமைச்சர் நீக்கி தருவதாகவும் கூறி இருந்தார்.

    அருகிலுள்ள கேரளா மாநிலத்தில் வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றி நீக்கப்பட்டது போல தமிழகத்திலும் வனவிலங்கு பட்டியலில் காட்டு பன்றியை நீக்க முதல்வரிடமும் வலியுறுத்தி அதை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். வாசுதேவநல்லூர் பகுதியில் ஆடு-மாடு மேய்ச்சலுக்கு குறிப்பிட்ட நேரம் அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • தென்காசி மாவட்டத்தில் மேலகரம், குருக்கள்பட்டி, வாசுதேவநல்லூர், ஊத்துமலை, சிவகிரி, வன்னிக்கோனேந்தல் கிராமங்களில் இருந்து செயல்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டு உள்ளது.
    • இதனால் இரவு நேரங்க ளில் உயிருக்கும் போராடும் நோயாளிகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது.

    சங்கரன்கோவில்,:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் மேலகரம், குருக்கள்பட்டி, வாசுதேவநல்லூர், ஊத்துமலை, சிவகிரி, வன்னிக்கோனேந்தல் கிராமங்களில் இருந்து செயல்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் இரவு நேரங்க ளில் உயிருக்கும் போராடும் நோயாளிகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது.

    இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கிராமங்களில் இயங்கி வரும் 108 ஆம்பு லன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின் போது வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன்திருமலைகுமார் உடன் இருந்தார்.

    • சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
    • மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, மாவட்ட துணைச் செயலாளர் புனிதா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சங்கரன்கோவில் 4, 7,15, 16, 29 ஆகிய வார்டுகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து கழுகுமலை ரோடு காளியம்மன் கோவில் அருகில் உள்ள நுழைவு வாயிலை திறந்து வைத்தார். மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மூத்த உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், சந்திரன், கணேசன், நகர அவைத் தலைவர் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதிகள் செய்யதுஅலி, முத்துக்குமார், டைட்டஸ், நகர பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், கார்த்தி, அப்பாஸ்அலி, வக்கீல் சதீஷ், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைப்பாண்டியன், முத்துக்குமார், வைரவேல், வீராசாமி, வீரமணிகண்டன், பழனிச்சாமி, ஜிந்தா மைதீன், தடிகாரன், மற்றும் அணி சிறுபான்மையினர் அணி அப்துல்காதர், அஜய்மகேஷ்குமார், சங்கர், விக்னேஷ், பிரகாஷ், ஜெயகுமார், அன்சாரி, ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×