search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajakopura vasal"

    • 108 சிவதாண்டவ கலை வேலைப்பாடுகளுடன் நிலைக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் முன்பு 108 அடி உயரத்தில் 9 நிலை முழுவதும் கருங்கற்களால் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    நேற்று ராஜகோபுரவாசல் கல்நிலை விடும் விழா நடந்தது. 22 அரை அடி உயரம் 12 அரை அடி அகலத்தில் 108 சிவதாண்ட வகலை வேலைப்பாடு களுடன் நிலைக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலைவாசல் விடும் விழாவை முன்னிட்டு சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது.

    தொடர்ந்து கோபூஜை நிலை கல்லுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வஸ்திரங்கள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு கிரைன் மூலம் நிலைவிடப்பட்டது.

    விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், கவுரவ தலைவர் லங்கால்லிங்கம், செயலாளர் வெள்ளையா நாடார், பொருளாளர் சுடலை மூர்த்தி, துணைத்தலைவர் கனகலிங்கம், ராஜகோபுர கமிட்டி உறுப்பினர்கள் ராஜாமணி நாடார், சுந்தர், மணி, பாலகிருஷ்ணன், தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், வணிகர் சங்க பேரமைப்பு மாநில இணைச்செயலாளர் தங்கையா கணேசன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், ராஜகோபுர ஸ்தபதி சந்தானகிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

    ×