என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajendrabalaji"

    • ராஜேந்திரபாலாஜியின் தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    சிவகாசி

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம் ஆச்சாரி உடல்நல குறைவால் கடந்த 17-ந் தேதி காலமானார்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியின் இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்து ஆறுதல் தெரிவித்தார். கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், டாக்டர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, காமராஜ், ராஜலட்சுமி, இன்பத்தமிழன், மருதுசேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மான்ராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கடையநல்லூர் எம்.எல்.ஏ. குட்டியப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.க சந்திரபிரபா, எதிர்கோட்டை சுப்பிரமணியன், சிவசாமி.

    விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×