என் மலர்
நீங்கள் தேடியது "Rajiv Gandhi Birthday"
- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வீர் பூமி என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி பிறந்த நாள் விழாவை யொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள், மும்மத பிராத்தனைகள் நடைபெற்றது
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி பிறந்த நாள் விழாவை யொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கலெக்டர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், போலீஸ் சூப்பி ரண்டு சுப்பிரமணியன், சமாதான கமிட்டி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட, ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள், மும்மத பிராத்தனைகள் நடைபெற்றது.