என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajya Sabha chairman"

    • காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் எழுதினார்.
    • அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மோடி மீறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    கடந்த 2-ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, '2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத்தலைவர் எதிர்ப்புறத்திற்கு ஆதரவாக இருந்தது' என்றார். பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல.

    பிரதமர் மோடி செய்ததைப் போல் வேறு எந்தப் பிரதமரும் மக்களவை சபாநாயகரையோ, மாநிலங்களவை அவைத்தலைவரையோ விமர்சித்துப் பேசியது இல்லை.

    அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவின் ஜார்ஜ் சோரோஸ் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு என பாஜக குற்றச்சாட்டு.
    • எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    மாநிலங்களவை தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவின் ஜார்ஜ் சோரோஸ் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்திய பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    ×