என் மலர்
நீங்கள் தேடியது "Ramajepa Worship"
- திசையன்விளை அப்புவிளை மாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நவமியை முன்னிட்டு நேற்று மாலை ராமஜெப வழிபாடு நடந்தது.
- மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை அப்புவிளை மாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நவமியை முன்னிட்டு நேற்று மாலை ராமஜெப வழிபாடு நடந்தது.
சிவகாமி குத்து விளக்கு ஏற்றிவைத்தார். ராமநாம சிறப்பு பற்றி முத்தரசி, சுயம்புகனி ஆகியோர் பேசினர். மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேனகா, கஸ்தூரி, பிரிந்தா, அமுதா ஆகியோர் சுலோகங்கள் சொல்லி ராமர் சிலைக்கு மலர்களால் அர்சனை செய்தனர். பராசக்தி முருகேசன் ஆரத்தி எடுத்தார்.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை திசையன்விளை இந்து முன்னணி தலைவர் ஜெயசீலன், துணைத்தலைவர் கொடி ராஜகோபால், செயலாளர் மணிமண்டன், செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.