என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ramanathapuram"

    ராமேசுவரம், கீழக்கரையில் நாளை மின்தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன்-1 பீடரில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி பீடரில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால்  காஞ்சிரங்குடி, கோரைகூட்டம், கல்லகுளம், செங்கள்நீரோடைஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள நாகச்சி பீடரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால்  பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம்,  கழுகூரணி, குடிசை மாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி)அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை  ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

    ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் தங்கச்சிமடம் பீடரில்  அவசரகால பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (4-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, சந்தியாநகர், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என்று  ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
    • எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    முகமது நபியை அவதூறாக விமர்சித்து பேசியதாக கூறி பா.ஜ.க நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் சந்தைத் திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜெமிலுன்னிசா, மாநில செயலாளர் நஜ்மா பேகம் ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், செயலாளர்கள் அப்துல் கலாம், ஆசாத், நஜ்முதீன், பொருளாளர் ஹசன் அலி பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. ராமேசுவரத்தில் 75.20 மி.மீ. கொட்டியது.
    • தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ராமநாதபுரம்

    தென் கடலோர பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சூழச்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

    ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மாலையில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த கன மழையால் குளுமையான சூழல் காணப்பட்டது.

    மழை காரணமாக தாழ்வான பகுதியில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8மணி வரை அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 75.20 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக கமுதியில் 7.60 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.

    வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. போக்குவரத்து மிகுந்த சாலைகள், தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ராமநாதபுரம்-8, மண்டபம்-23.60, ராமேசுவரம்-75.20, பாம்பன்-37.30, தங்கச்சிமடம்-40.20, பள்ளமோர்குளம்-20, திருவாடானை-24.80, தீர்த்தாண்டதானம்- 40.20, தொண்டி-19.70, வட்டாணம்-23.50, ஆர்.எஸ்.மங்கலம்-67.20, பரமக்குடி-58.80, முதுகுளத்தூர்-28, கமுதி-7.60, கடலாடி-35.20, வாலிநோக்கம்-21.60.

    • ராமநாதபுரம் மாவட்ட தடகள போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் சீதக்காதி ஸ்டேடியத்தில் சங்க செயலாளரும், மாநில சங்கத்தின் இணைச் செயலாளருமான இன்பாரகு ஏற்பாட்டில் நடந்தது. டாக்டர் ஆசிக் அமீன் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஹாசித், ஆடிட்டர் ராமகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வருகிற 15-ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் இன்பா ரகு தெரிவித்தார்.

    • ராமநாதபுரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • தனியார்துறை வேலை இணையம் “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதேபோல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இவ்விணையதளத்தில் பதிவு செய்து பயன் பெற லாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு செய்யப்படமாட்டாது எனவும் அலுவலக அரசுத் பதிவு எக்காரணத்தை கொண்டும் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா, உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகுபர் சாதிக், செயற்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துராமன் வரவேற்றார்,

    புகையிலை, குட்கா, கஞ்சா, மது போதைப்பொருட்களால் இளைஞர்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருவதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் ஆயிஷா பேசினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆடிட்டர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணைத் தலைவர் (திருவாடானை தொகுதி) முகமது அலி, மாவட்ட துணைத் செயலாளர் திருஞானம், பசுமைத் தாயகம் மாவட்ட செயலாளர் கர்ண மகாராஜா, மாவட்ட தலைவர் ஸ்டாலின், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் கவின் ராகேஷ், மாவட்ட தலைவர் சத்யா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ராமநாதபுரம் நகரத் தலைவர் ராஜா ரபீக், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் கனகு, மண்டபம் ஒன்றிய அமைப்பாளர் ஜாகிர் உசேன்.

    கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், நகர தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க தலைவர் கார்த்திக், ஆர், எஸ், மங்கலம் ஒன்றிய செயலாளர் ஜிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்பாலமுருகன் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் பட்டிணம்காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமாவூர், சோழந்தூர், காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், ரமலான்நகர், மேலக்கோட்டை, மாடக்கொட்டான், இளமனூர், தில்லைநாயகபுரம், தேவிபட்டிணம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம், எம்.ஜி.ஆர். நகர், எம்.எஸ்.கே.நகர், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குதரவை, எல்.கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குத்தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கானேந்தல், பால்கரை, பேராவூர், நாகநாதபுரம், இந்திராநகர் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டார்.
    • கடந்த 2 ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டு, 5-வதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த சங்கா் லால்குமாவத் மாற்றப்பட்டார். புதிய கலெக்டராக ஜானி டாம் வா்கீஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களாக வீரராகவ ராவ், சந்திரகலா, தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சங்கா் லால் குமாவத் ஆகியோா் பணியாற்றினா். தற்போது ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டு, 5-வதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 68 மி.மீ. மழை பதிவானது.
    • தொண்டி கடலோரப்பகுதியில் நேற்று நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப்பகுதியில் நேற்று நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. ஓட்டு வீடு, கூரை வீடுகளில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தொண்டி சத்திரம் தெரு, வெள்ளை மணல் தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு தலைமையில் சுகாதார மேஸ்திரி கோவிந்தராஜன் பேரூராட்சி பணியாளர்களுடன் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 68 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் இப்பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொழிலாளியை விரட்டிச் சென்று படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நாகநாதன் (வயது 32). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    ராமநாதபுரம் பழைய பஸ் நிலையப்பகுதியில் இன்று பிற்பகல் 11 மணியளவில் நாகநாதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 மர்ம நபர்கள் நாகநாதனை கொலை செய்ய முற்பட்டனர். இதைப்பார்த்த நாகநாதன் அவர்களிடம் தப்பிப்பதற்காக ஓடினார்.

    ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று பிடித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவர் இறந்ததை உறுதி செய்தபின் அந்த கும்பல் சர்வ சாதாரணமாக அங்கிருந்து சென்றது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலையால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகநாதன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான மாம்பழம் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. அதனை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
    ராமநாதபுரம்:

    மாம்பழங்கள் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், கொடைக்கானல், நத்தம், திருச்சி, பகுதிகளிலிருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தினமும் 10 டன் வரை விற்பனைக்கு வருகிறது.

    வெளி மாநிலங்களிலிருந்து வரும் மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்க பல நாட் கள் ஆகும் என்பதால், காய் பருவத்திலே பறித்து வியாபாரிகள் ரகசியமான இடத்தில் பதுக்கி வைத்து கார்பைட் கற்களை பயன்படுத்தி ஒரே நாளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கின்றனர்.

    இந்த மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாலையோர வியாபாரிகளும் தலைச்சுமை வியாபாரிகளும் மாம்பழத்தின் நிலை தெரியாமல் மொத்த வியாபாரிகளிடம் மாம்பழங்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். எனவே கார்பைடு கற்களை கொண்டு பழுக்க வைப்பவர்கள், அதனை விற்பனை செய்பவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ராமநாதபுரம்:

    கீழக்கரை அருகே திருப்புல்லாணி செக் போஸ்ட் மெயின் ரோட்டில் ராமநாதபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் முரளிதரன் தலைமையில் இன்று காலை வாகன சோதனை நடந்தது.

    அப்பேபாது ராமேசுவரத்தில் இருந்து கீழக்கரை நோக்கி வந்த பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.53,600த்தை பறிமுதல் செய்தனர்.

    டிரைவர் கீழக்கரை முத்துசாமிபுரம் முருகன் மகன் கண்ணன்(வயது 36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் கோபால் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி குழுவினர், திருப்புல்லாணி செக் போஸ்டில் மேற் கொண்ட சோதனையில், கேரளாவில் இருந்து மீமிசல் நோக்கி சென்ற வாகனத்தில் ரூ.77 ஆயிரம் இருந்தது.

    சரியான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கைப்பற்றி வண்டியின் ஓட்டுநர் மீமிசல் அய்யப்பன் (52) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அந்த வழியாக வந்த ஏர்வாடி அருகே உள்ள சடைமுனியன்வலசையைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துக்குமார் என்பவரின் காரை சோதனை செய்தனர்.

    அப்போது அவர் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    சத்திரக்குடி டோல்கேட்டில் பறக்கும் படை அலுவலர் பானுபிரகாஷ் சோதனை நடத்தினார். அப்போது காரில் வந்த நாகநாதபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த ராவூத்தர் கனி (30) என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். #LSPolls

    ×