என் மலர்
நீங்கள் தேடியது "Ramanathapuram robbery"
- பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 12 பவுன் தங்க நகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
- சக்திவேல் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டிற்குள் பட்டப்பகலில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏ.நாகனேந்தல் பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல் (வயது 58). இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர்.
மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் சக்திவேல் தனது மனைவியுடன் ஏ.நாகனேந்தலில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே உள்ள புழுதிக்குளம் உறவினர் ஒருவரது துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக, சக்திவேல் நேற்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியை அழைத்து கொண்டு சென்றார். பின்னர் மாலையில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அப்போது அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அறைகளில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 12 பவுன் தங்க நகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. சக்திவேல் வீட்டில் ஆள் இல்லாதததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டிற்குள் பட்டப்பகலில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சக்திவேல் வீட்டின் கதவு, பீரோக்களில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளைப்போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டியிருந்த வீட்டில் பட்டப்பகலில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 62). இவர் ராமநாதபுரத்திற்கு பொருள்கள் வாங்கி விட்டு, ஊருக்கு செல்வதற்காக புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.
கூட்ட நெரிசலில் பின்புறம் கம்பியோரம் நின்று கொண்டு இருந்த போது 2 பெண்கள் நெருக்கடித்து கொண்டு நின்றனர்.
இவர்கள் பாரதி நகர் பஸ் நிறுத்தம் வந்தவுடன் அவசரமா இறங்கி சென்று விட்டனர். சிறிது தூரம் சென்றதும் ஜெயலட்சுமி தனது கழுத்தை பார்த்த போது அதில் இருந்த 6¾ பவுன் நகையை காணவில்லை.
இதே போல் முத்துப்பேட்டை தலைதோப்பு கிராமத்தைச் சேர்ந்த பானுமதி (54). இவர் ராமநாதபுரம் சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு பஸ்சில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை யாரோ திருடி விட்டனர்.
மேற்கண்ட இரு சம்பவங்கள் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள எட்டியத்திடல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேத சூசைமாணிக்கம் (வயது 81). விவசாயியான இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
மாலையில் வீடு திரும்பிய வேத சூசைமாணிக்கம் நகை, பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில், எட்டியத்திடலை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தானில் உள்ள மீனாட்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 60). தனியாக வசித்து வந்த இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
போலீஸ் தகவல் அறிக்கையில் கொள்ளைபோன நகை, பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 500 என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது47). இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.
புது பஸ் நிலையம் வந்த அவர்கள் அங்குள்ள கடையில் பழம் வாங்கினார். அப்போது கருப்பசாமியின் பேத்தி ஸ்ரீநிதி (2½) கழுத்தில் கிடந்த நகையை ஒரு பெண் அபேஸ் செய்ய முயன்றார்.
அப்போது ஸ்ரீநிதி அழத உடனேயே உறவினர்கள் பார்த்தபோது ஒரு பெண் நகையை திருட முயற்சித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பொதுமக்கள் பிடித்து கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கைது செய்தார்.
விசாரணையில் அவரது பெயர் ரதிதேவி (43) என்பதும், பரமக்குடி மஞ்சள்பட்டணத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.