என் மலர்
நீங்கள் தேடியது "ramanathapuram"
சாயல்குடி:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கனிமொழி எம்.பி. சாயல்குடி, கமுதி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
பா.ஜ.க. அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் பினாமியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நலன் கருதாமல் ஆட்சி தொடர வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.
இந்த பாரளுமன்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக உள்ளது. மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவ-மாணவிகள் படிக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி ஆட்சி செய்த மோடி எந்தவிதமான முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்று கூறிய பா.ஜ.க. ஆட்சியில் தான் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் ஆண்டுக்கு சராசரியாக 21,000 பேர் தற்கொலை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி வேதாந்த நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து மூவாயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கியாஸ் மானியம் வழங்குவேன் என்று கூறிய மோடி, ஆட்சிக்கு வரும் போது சிலிண்டர் விலை 300 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.1,000.
பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் நம் நாட்டை காப்பாற்ற முடியாது. ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் முகம் தான் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வாக்களியுங்கள்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். #LSPolls #DMK #Kanimozhi
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பனைக்குளம் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட 28 லட் சத்து 50 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்த பனைக்குளத்தைச் சேர்ந்தவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
திருவாடானை கைகாட்டி அருகே வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 14 லேப் டாப், 160 கடிகாரம், ரூ.2 லட்சம் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் முகமது யூசுப்பிடம் விசாரணை நடைபெறுகிறது.
சென்னையில் இருந்து கீழக்கரை வந்த ஆம்னி பஸ்சில் சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமக்குடி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் தலைமையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த 4 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 22 ஆயிரத்து 145 பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே 5 துணை மின் நிலையங்களில் நாளை (16-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (16-ந்தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று உதவிச் செயற் பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.
மினி வினியோகம் தடைபடும் பகுதிகள் வருமாறு:-
ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், அரண்மனை, கேணிக்கரை, பாரதி நகர், சக்கரக்கோட்டை, கலெக்டர் அலுவலகவளாக பகுதிகள், பட்டினம்காத்தான், அச்சுந் தன்வயல், சின்னக்கடை மற்றும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பகுதிகள்.
ராமநாதபுரம் துணை மின் நிலையத்தில் திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி, ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் ரெகுநாதபுரம், பெரிய பட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணான்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனாமரைக்கான்.
தேவிபட்டினம் துணை மின் நிலையத்தில் காட்டூ ரணி, அண்ணா பல்கலைக் கழகம், தேவிபட்டினம், பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை.
ஆர்.காவனூர் துணை மின் நிலையத்தில் முதலூர், கிளியூர், ஆர்.காவனூர், தேத்தாங்கால், குளத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் லோத் தம்ஸ் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
சுமார் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது இந்த தண்ணீர் தொட்டி. இங்கு இன்று காலை வந்தவர்கள் துர்நாற்றம் வீசுவதை அறிந்தனர்.
இதுபற்றி ராமநாதபுரம் பஜார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து தண்ணீர் தொட்டியை பார்த்தனர்.
அப்போது தண்ணீருக்குள் ஆண்பிணம் மிதப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர்.
அதன்பின்னர் உடல் மீட்கப்பட்டது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவர் யார்? தண்ணீர் தொட்டிக்குள் எப்படி பிணமாக மிதந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
நீரேற்று நிலைய குடிநீர் தொட்டியின் கீழ்பகுதியில் ஒரு ஜோடி செருப்பும், 2 பிளேடுகளும் கிடந்துள்ளன. அதனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடின. அலுவலகங்களில் பணிகள் நடைபெறாததால் பணி நிமித்தமாக வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நாடு முழுவதும் தொழிற் சங்க கூட்டமைப்பினர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட் டத்தை அறிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலக ஊழியர்கள், ஊராட்சித் துறை வளர்ச்சி மேம்பாட்டு துறையினர், காப்பீடு திட்ட அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டனர்.
மாவட்ட அளவில் வரு வாய்த்துறையில் அனை வரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங் களும் வெறிச்சோடி காணப் பட்டன.
மின்வாரிய துறையில் மாவட்ட அளவில் 743 பேரில் 330 பேர் பணிக்கு வரவில்லை. போக்குவரத்து துறையில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேசு வரம், முதுகுளத்தூர் என அனைத்து பகுதிகளிலும் சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட சங்கத்தினர் 150-க்கும் மேற் பட்டோர் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் அனைத்தும் இயங்கியது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மழை பெய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை மட்டுமே கைகொடுத்து வந்துள்ளது. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த விவசாயிகள், மழை பொய்த்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பருவமழை காலங்களில் பனி பொழிந்தால், மழை குறைந்துவிடும். சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. பருவம் தவறி மழை பெய்தாலும் நிலத்தடி நீராவது பெறுகும்.
பருவம் தப்பினால் புயல் சின்னம் உருவானால் மட்டுமே மழை பெய்யும். பனி குறைந்து மழை பெய்ய வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதம் சராசரி மழை பெய்யாததால், மானாவாரி பயிர் சாகுபடியும், மகசூலும் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் விவசாயம் இல்லாமல், கடன் வாங்கியதை திருப்பி கொடுக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மானாவாரி பயிருக்கு 10 நாட்களுக்கு இடைவெளியில் மழை பெய்தால் மட்டுமே, மகசூல் கிடைக்கும். கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு தவிர்க்கப்படும். குறிப்பாக ராமேசுவரம் தீவு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் மாவட்ட முழுவதும் பரவலாக சராசரி மழை கிடைக்கவில்லை.
சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு உள்ளதால், இனியும் மழை பெய்யுமா என்ற கேள்விக்குறியுடன் விவசாயிகள் வருணபகவானின் கருணைக்கு காத்து இருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பனைக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். கிராமத்தில் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுரு கூறியதாவது:-
மருத்துவ குழுவினர் பனைக்குளம் கிராமத்தில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். என்ன காய்ச்சல் என்பது பற்றி ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே சனவெளி கிராமத்தைச்சேர்ந்த பூசாரி சிவசங்கர பாண்டியன். இவர் வீட்டில் இல்லாதபோது பூட்டை உடைத்து 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு, 1,000 ரூபாய் ரொக்கம் திருட்டுப்போனது.
இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்தோஷ்குமார் (வயது28) என்பவரை ஆர்.எஸ். மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சந்தோஷ் குமார் தப்பியோடி தலைமறைவானார். போலீசார் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், வீடு புகுந்து திருடிய சந்தோஷ்குமார் தப்பி ஓடும்போது சனவெளி கண்மாய் அருகே அடையாளம் தெரியாத 10 பேர் பிடித்து தாக்கி உள்ளனர். இதில் அவன் பலத்த காயம் அடைந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு பாதுகாப்புக்கு 4 போலீசார் காவலில் இருந்தனர்.
அவர்களிடம் கழிவறை செல்வதாக கூறிச் சென்ற சந்தோஷ்குமார், அங்கிருந்த ஜன்னல் வழியாக தப்பி ஓடி உள்ளான். அவனை பிடிக்க திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காவல் பணியில் கவனக்குறைவாக இருந்த 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் மது விலக்கு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மீலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி பலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கூர் பகுதியில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரனாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 148 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மது பாட்டிகளை கடத்தி வந்தது தெற்கூரை சேர்ந்த மூர்த்தி மகன் பிரபாகரன் (வயது 29), முனியாண்டி மகன் பூசைத்துரை (30) என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் சோதனை சாவடியில் கூடுதல் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து வந்த தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது பஸ்சில் 25 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பஸ்சுடன் அதனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சீனிவாசன் (வயது40) மற்றும் நாகூரை சேர்ந்த கிளீனரை கைது செய்தனர்.
இதேபோல் பாண்டிச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டை நோக்கி சென்ற சரக்கு வேனையும் போலீசார் சோதனையிட்டனர். அதில் 15 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
அதனையும், வேனையும் பறிமுதல் செய்த போலீசார் வேனில் வந்த பேச்சிமுத்து (20), முருகன் (30), தென்காசி விவேகானந்தன்(22) ஆகியோரை கைது செய்தனர்.
மது கடத்தல் குறித்து மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.