என் மலர்
நீங்கள் தேடியது "Rameshwaram"
- இராமநாதசுவாமி கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.
தல வரலாறு
இராமன் சீதையை மீட்க இராவணனிடம் போர் புரிந்து கொன்றான்.இராவணனை கொன்ற பாவத்தினை நீக்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே இராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு இராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.
கோவில் அமைப்பு
தென்னிந்திய கோவில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3,850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.
திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம்:
வ.எண் தீர்த்தங்கள் விபரம்
1 மகாலட்சுமி தீர்த்தம்
2 சாவித்திரி தீர்த்தம்
3 காயத்திரி தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம்
8 நள தீர்த்தம்
9 நீல தீர்த்தம்
10 கவய தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம்
12 கெந்தமாதன தீர்த்தம்
13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
14 கங்கா தீர்த்தம்
15 யமுனா தீர்த்தம்
16 கயா தீர்த்தம்
17 சர்வ தீர்த்தம்
18 சிவ தீர்த்தம்
19 சாத்யாமமிர்த தீர்த்தம்
20 சூரிய தீர்த்தம்
21 சந்திர தீர்த்தம்
22 கோடி தீர்த்தம்
- ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
- சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்கினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் கவரத்தக்க வகையில் பண்டைகால திராவிட கலாசாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.
ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்த காரணத்தால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி ராமர், ராமேஸ்வரம் வந்து சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குமென்று கூறினார்.
உடனே, ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
அதன்படி ஆஞ்சநேயர் கைலாச பர்வதத்திற்கு சென்றார்.
லிங்கத்தை கொண்டு வர சற்று தாமதமானதும் சீதாபிராட்டி விளையாட்டாக மண்ணை கையில் பிடித்து சிவலிங்கம் ஒன்றை செய்தார்.
குறித்த ஒரு லக்கின நேரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தாமதம் ஆகலாம்.
ஆஞ்சநேயர் வருவதற்குள் செய்ய வேண்டி இருந்த காரணத்தால் சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்க,
அகத்திய முனிவர் குறித்த நல்ல நேரம் முடிவதற்குள் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார்.
பிறகு கொண்டு வந்த ஆஞ்சநேயர் தான் வருவதற்குள் இங்கு மணலால் லிங்கத்தை பூஜை செய்வதைக் கண்ட அவர் கோபமுற்று அது விஷயமாக கேட்க
ஸ்ரீராமபிரானானவர் அந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை வை என்று உத்தரவிட்டார்.
அதைக்கேட்ட அனுமன் தன் வாலினால் சுழற்றி அந்த லிங்கத்தை அகற்ற முயற்சி செய்து, அம்முயற்சியில் தோல்வியுற்று, தன் வால் அறுந்து விழுந்து மயக்கமடைந்தார்.
பின்னர் ராமபிரானாரால் எழுப்பப்பட்டு, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் தாங்கள் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜை நடைபெறும் என்று சொன்னார்.
இவ்வாறு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அன்று முதல் ராமனால் உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் என்ற பொருள் கொண்ட ராமேஸ்வரம் என்ற பெயர் பெற்றது.
- இந்த ஆலயமானது வட மாநில மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
- இது நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இத்தலமானது மூர்த்தி ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி வாய்ந்தது.
இத்தலத்தில் உள்ள சுவாமிகள் ராமேஸ்வரர் ராமலிங்கேசுவரர், ராமநாதர் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயமானது வட மாநில மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
வடநாட்டவர்கள் காசியில் உள்ள விசுவநாதருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து பூஜை செய்து, அங்கிருந்து கங்கை ஜலத்துடன் ராமேஸ்வரம் ராமனாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, தங்கள் யாத்திரையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு செல்ல இருப்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்திற்கு சென்று,
இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதுடன் இங்கிருந்து மணல் எடுத்து அதற்கு பூஜை செய்து அதை எடுத்துக் கொண்டு போய் பிரயாகை திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் போட்டுவிட்டு,
காசி விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து கங்கை ஜலத்தை கொணர்ந்து ராமநாதசுவாமி அபிஷேகம் செய்து வழிபடுவதுடன் தங்களுடைய காசி, ராமேஸ்வரம் யாத்திரையை பூர்த்தி செய்வர்.
இதன்மூலம் இவ்வூரின் பெருமையால், இது அனைத்திந்ததிய மக்களை ஒன்றாக இணைத்து நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி, சர்ப்ப சாந்தி, நாக பிரதிஷ்ட முதலியவை செய்து சுவாமி தரிசனம் செய்தால் மக்கள் செல்வம் ஏற்படும் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் உண்டு.
- சக்தி பீடங்களில் இத்தலம் “சேது பீடம்” ஆகும்.
- விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.
தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.
இந்த அபிஷேகத்திற்கு பின்பே ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.
இந்த அபிஷேகத்தை தரிசக்க கட்டணம் உண்டு.
பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.
சக்தி பீடங்களில் இத்தலம் "சேது பீடம்" ஆகும்.
அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.
விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.
இந்த பாவம் நீங்க விபிஷணன் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி-இந்த லிங்கத்தில் ஐக்கியமானார்.
இதுவே "ஜோதிர்லிங்கம்"ஆயிற்று.
இந்த லிங்கம் சுவாமி சந்நிதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
ஆஞ்சநேயருக்கு தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு "விஸ்வநாதர்" என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.
ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார்.
ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால் தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார்.
அதன்படி இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.
கோவிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே ராமநாதரை தரிசிக்க வேண்டும்.
விசாலாட்சிக்கு தனி சன்னதி இருக்கிறது.
சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சக்ர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.
அம்பாள் சன்னதியில் அஷ்ட லட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
பொதுவாக கோவில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை.
இந்தக் கோவில் எந்தப் பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால் சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.
கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது. வித்தியாசமான அமைப்பு.
- எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.
- உப்பின் சொரசொரப்பினை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
ஒரு சமயம் இக்கோவில் லிங்கம் மணலால் செய்யப்பட்ட தல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர்.
அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.
அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாத போது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.
ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம்.
உப்பின் சொரசொரப்பினை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
பதஞ்சலி முக்தி தலம்
பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்துக்கு நடராஜர் காட்சி தருகிறார்.
இவரது எதிரில் நந்தி இருக்கிறது.
நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு சக்கரம் மட்டும் உள்ளது.
இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நாக வடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொள்ளலாம்.
பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால் நம் கண்களுக்கு தெரிய மாட்டார்.
- ‘படிக லிங்க தரிசனம், கோடி பாப விமோசனம்’.
- ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது.
ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேசுவரம் சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றதாகும்.
இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது.
'படிக லிங்க தரிசனம், கோடி பாப விமோசனம்'.
இந்த படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேசுவரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள அக்னி தலத்தில் நீராடி அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்பதுவும் நம்பிக்கையாக இருக்கிறது.
ராமேசுவரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னதி இருக்கிறது.
இந்த சன்னதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய 'கோடி தீர்த்தம்' அமைந்துள்ளது.
சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.
வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும்.
- அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் சேது என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
- கி.பி. 1520 ல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது.
ராமேசுவரத்தின் வரலாறு ராமநாதசுவாமி கோவிலையும் இலங்கை செல்வதற்கான வாயிலாக இருந்ததையும் மையமாக கொண்டுள்ளது.
சோழ மன்னர் ராசேந்திர சோழன் ஆட்சியில் சிலகாலம் ராமேசுவரம் இருந்து வந்துள்ளது.
1215-1624 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசு கட்டுப்பாட்டில் இத்தீவு இருந்தது.
யாழ்ப்பாண அரசர் சேதுகாவலன் என அழைக்கப்பட்டார்.
இந்து சமய மன்னர்களான அவர்களது ஆட்சியில் கோவிலை வளப்படுத்தினர்.
அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் சேது என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் பாண்டியர்களின் எதிர்ப்பை முறியடித்து இங்கு வந்தடைந்தார்.
இசுலாத்தின் வெற்றியை நினைவு கூறுமுகமாக அலியா அல்-தின் கல்ட்ஜி என்ற மசூதியை நிறுவினார்.
பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் தற்கால ராமநாதபுரம், கமுதி, ராமேசுவரம் பகுதிகள் பாண்டிய ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தன.
கி.பி. 1520 ல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது.
மதுரை நாயக்கர்களிடமிருந்து பிரிந்த சேதுபதிகள் ராமநாதபுரத்தை ஆளத் தொடங்கினர்.
இவர்கள் ராமநாதசுவாமி கோவிலின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவினர்.
முக்கியமாக முத்துக்குமார ரகுநாத சேதுபதியும் முத்து ராமலிங்க சேதுபதியும் கோவிலின் கட்டிட வடிவமைப்பை மிகச்சிறப்பான கட்டிடக்கலையாக அமைத்தனர்.
18வது நூற்றாண்டில் இப்பகுதி அடுத்தடுத்து பலமுறை சந்தா சாகிப் (1740&1754), ஆற்காடு நவாப், மருதநாயகம் (1725&1764) ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது.
கி.பி. 1795&ல் ராமேசுவரம் பிரிட்டனின் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது.
சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947&க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் பகுதியாயிற்று.
- சில நூல்களில் 56 தீர்த்தங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது.
- வடமொழியில் `சேது’ என்றால், `பாலம்‘ என்று பொருள்.
தலப் பெருமையும், மூர்த்தி மகிமையும் கொண்டு விளங்குகின்ற ராமேசுவரத்தலம், தீர்த்த விசேஷத்தையே முதன்மையாகக் கொண்டு விளங்குகின்றது.
இத்தலத்தில் மொத்தம் 64 தீர்த்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
சில நூல்களில் 56 தீர்த்தங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது.
`சேது புராணம்' என்னும் தல புராணமும், `தேவையுலா' என்னும் நூலும் 24 தீர்த்தங்களை மிகச் சிறந்தவையாகக் கூறுகின்றன.
சேது தீர்த்தம்
இத்தீர்த்தம், ராமேசுவரம் தீவின் தென் கிழக்குக் கோடியில் அமைந்துள்ளது.
பாம்பன் சந்திப்பிலிருந்து பிரிந்து செல்லும் ரயில் பாதை வழியே 16 மைல் தூரம் சென்று தனுஷ்கோடி நிலையத்தை அடைந்து, அங்கிருந்து கடற்கரை யோரமாக இரண்டு மைல் தூரம் நடந்து சென்றால் சேது தீர்த்தத்தை அடையலாம்.
இத்தீர்த்தத்தைப் புனித சேது என்றும், புண்ணிய சேது என்றும், ராமசேது என்றும் மக்கள் வழங்குகின்றனர்.
ராமேசுவரத்திற்குப் போவதற்கு முன் சேதுவில் நீராடியே செல்லுதல் வேண்டும்.
வடமொழியில் `சேது' என்றால், `பாலம்' என்று பொருள்.
ராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்கு இவ்விடத்தில் அணை கட்டிச் சென்றதால், `ராமசேது' என்னும் பெயர் உண்டாயிற்று.
வங்காள விரிகுடாவும், இந்து மகா கடலும் சேருமிடத்தில் புண்ணிய சேது தீர்த்தக் கட்டம் அமைந்துள்ளது.
ராமேசுவரம் தீவு, வில் போன்று நீண்டிருக்கின்றது.
இதன் தென் கிழக்கு முனையில் இருப்பதால், `தனுஷ்கோடி' என்னும் பெயர் உண்டாயிற்று.
இதனைக் `கோடி தீர்த்தம்' என்றும் அழைக்கிறார்கள்.
இந்த இடத்தில் ராமபிரான் தம்வில்லின் நுனியால் அணையை உடைத்தார்.
அதனால் இப்பெயர் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.
சேதுவின் ரத்தினாகரத்தில் முதலில் நீராடுவர்.
இப்புண்ணிய தீர்த்தத்தில் 36 நாட்கள் 36 முழுக்குகள் செய்ய வேண்டும் என்பர்.
மக்கள் இங்கே பிதுர்க்கடன்களையும் செய்கின்றனர்.
ஆடி, தை மாத அமாவாசைகளில் இங்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீராடுகின்றனர்.
அர்த்தோதயம், மகோதயம் முதலிய புண்ணிய காலங்களில் ராமநாத சுவாமி இங்குப் பஞ்ச மூர்த்திகளோடு சென்று தீர்த்தம் கொடுத்தருளுகின்றார்.
அப்போது லட்சக் கணக்கான மக்கள் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.
- ஞான சுருதி மன்னன் இத்தீர்த்தங்களில் நீராடி ஞானம் பெற்றான்.
- இத்தீர்த்தங்களில் நீராடியவர்கள் யாக பலன்களையும், செல்வத்தையும்,பெறுவார்கள்.
இத்தீர்த்தம், மேற்கு மூன்றாம் பிரகாரத்தில் சேதுமாதவர் கோயிலுக்குத் தென்புறமுள்ள அழகிய திருக்குளம்.
இத்தீர்த்தத்தில் நீராடியவர்கள் திருமகள் அருளும், சித்த சுத்தியும் பெறுவார்கள்.
ஐந்து தீர்த்தங்கள்
கந்தமாதன தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கவய தீர்த்தம், நளதீர்த்தம், நீல தீர்த்தம் என்னும் ஐந்து தீர்த்தங்களும் சேது மாதவர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.
இத்தீர்த்தங்களில் நீராடியவர்கள் யாக பலன்களையும், வறுமை நீங்கிச் செல்வத்தையும், வீடு பேற்றையும் பெறுவார்கள்.
கங்கை, யமுனை, கயை தீர்த்தங்கள்
இத்தீர்த்தங்களும் வடக்கு உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன.
ஞான சுருதி மன்னன் இத்தீர்த்தங்களில் நீராடி ஞானம் பெற்றான்.
- இத்தீர்த்தம், கிழக்கு இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது.
- சூரியன் இத்தீர்த்தத்தில் நீராடிப் பொற்கை பெற்றான்.
இத்தீர்த்தம், வடக்கு இரண்டாம் பிரகாரத்தில் கருவூலத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
வத்சநாப முனிவர் இத்தீர்த்தத்தில் நீராடி செய்ந்நன்றி மறந்த பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
சக்கர தீர்த்தம்
இத்தீர்த்தம், கிழக்கு இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது.
இத்தீர்த்தத்திற்கு முனி தீர்த்தம் என்னும் பெயரும் உண்டு.
சூரியன் இத்தீர்த்தத்தில் நீராடிப் பொற்கை பெற்றான்.
பிரமஹத்தி விமோசன, சூரிய, சந்திர தீர்த்தங்கள்
இத்தீர்த்தங்கள், வடக்கு உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன.
இத்தீர்த்தங்களில் நீராடினால் கொலைப்பாவம் நீங்கும்; முக்கால ஞானப்பேறு உண்டாகும்.
- இத்தீர்த்தங்களில் நீராடி காசிபர் சாபம் நீங்கப் பெற்றார்.
- பைரவர் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தி பாவத்தை நீக்கிக் கொண்டார்.
சிவ தீர்த்தம்
இத்தீர்த்தம், சுவாமி சந்நிதிக்கும் அம்பிகை சந்நிதிக்கும் இடையே அமைந்த அழகிய திருக்குளம்.
பைரவர் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தி பாவத்தை நீக்கிக் கொண்டார்.
இதற்கு சிவகங்கைத் தீர்த்தம் என்னும் பெயரும் உண்டு.
சாத்தியாமிருத தீர்த்தம்
இத்தீர்த்தம், அம்பிகை திருச்சன்னதியில் சுக்கிரவார மண்டபத்திற்குத் தென்கிழக்கில் உள்ள கிணறு.
புரூரவச் சக்கரவர்த்தி இத்தீர்த்தத்தில் நீராடி தும்புரு சாபத்தைப் போக்கிக் கொண்டார்.
மூன்று தீர்த்தங்கள்
காயத்திரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரசுவதி தீர்த்தம் என்னும் மூன்று தீர்த்தங்களும், கிழக்குக் கோபுரத்துக்கு வடக்கே மூன்று கிணறுகளாக அமைந்துள்ளன.
இத்தீர்த்தங்களில் நீராடி காசிபர் சாபம் நீங்கப் பெற்றார்.
- இத்தீர்த்தம், வடக்கு முதல் பிரகாரத்தில் விசாலாட்சியம்மை சன்னதிக்கு அருகில் உள்ளது.
- இதில் நீராடியவர் இட்ட சித்தியும், ஞான முத்தியும் பெறுவர்.
இத்தீர்த்தம், வடக்கு முதல் பிரகாரத்தில் விசாலாட்சியம்மை சன்னதிக்கு அருகில் உள்ள கிணறு.
இதில் எவரும் தாமே நீர் எடுத்து முழுக முடியாது.
அதற்கென உள்ள பிராமணர் நீர் முகந்து ஊற்றியே பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
இத்தீர்த்தம் பிற தீர்த்தங்கள் அனைத்தையும் விட மேலானது.
இத்தீர்த்தத்தில் நீராடிய பிறகு ராமேசுவரத்தில் தங்கியிருத்தல் கூடாது என்பது ஐதிகம்.
அதனாலேயே இதற்குக் கோடி தீர்த்தம் என்னும் பெயர் உண்டாயிற்று.
இத்தீர்த்தத்து நீரையே மக்கள் கலசங்களில் கொண்டு செல்வது வழக்கம்.
எக்காலத்தும் இந்நீர் கெடுவதில்லை.
கிருஷ்ண பகவான் இத்தீர்த்தத்தில் நீராடி கம்சனைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
இதில் நீராடியவர் இட்ட சித்தியும், ஞான முத்தியும் பெறுவர்.