search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramkumar Ramanathan"

    • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது.
    • இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.

    புதுடெல்லி:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் முதல் சுற்றில் 6-2, 6-1 என வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-0, 6-2 என வென்றார்.

    இதன்மூலம் டோகோ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இல்க்லி ஏடிபி சேலங்சர் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றோடு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெளியேறினார்.
    இல்க்லி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் கலந்து கொண்டார். இவர் முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் செபஸ்டியான் ஆஃப்னெரை எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் செபஸ்டியானுக்கு ஈடுகொடுத்து விளையாடினார் ராம்குமார். என்றாலும் 5-7 என முதல் செட்டை இழந்தார். 2-வது செட்டை 3-6 என எளிதில் இழந்தார். 64-வது நிமிடங்கள் மட்டுமே ராம்குமாரால் தாக்குப்பிடிக்க முடிந்தது.



    ஆஃப்னெருடன் ராம்குமார் ராமநாதன் ஐந்து முறை மோதியுள்ளார். முதல் மூன்று ஆட்டங்களில் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார். கடைசி இரண்டில் தோல்வியை சந்தித்துள்ளார்.

    ×