search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramzan special"

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஈரோடு:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு விரதம் இருந்தனர்.

    30 நாட்களாக விரதம் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களது ஒரு வருட சேமிப்பில் இரண்டரை சதவீதம் ஏழை மக்களுக்காக ஜகாத் எனும் இஸ்லாமிய வரியை செலுத்துவார்கள்.

    அதனைத்தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டி கையையொட்டி காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து தொழுவதற்கு முன்பு ஏழை மக்களின் வீட்டிற்கு சென்று ஒரு நபருக்கு 90 ரூபாய் என்ற அடிப்படையில் பித்ரா என்னும் வரியை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ரம்ஜான் சிறப்பு தொழு கையில் பங்கேற்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஈத்கா மைதானங்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 240 -க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று காலை ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமது ஜிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஏராளமான சிறுவர்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதற்காக வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.

    இதேபோல் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது.

    இதில் ஈரோடு பெரியார் நகரில் நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பிரியா ணியை தங்களது உறவினர்க ளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கோபியில் ஈதுஹா பள்ளி வாசலிலும், சாமிநாதபுரம் பள்ளிவாசலி லும் ஊர்வ லமும், சிறப்பு தொழுகையும் நடை பெற்றது. இஸ்லாமி யர்கள் தொழுகை முடிந்தவு டன் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து க்களை பரிமாறிக் கொண்ட னர்.

    அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து அந்தியூர் பெரிய ஏரி சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்திற்கு இஸ்லாமியர்கள் டாக்டர்.சாகுல் ஹமீது தலைமையில், சையத் சையது கவுஸ் இமாம் முன்னிலையில் ஊர்வ லமாக சென்று ரம்ஜான் சிறப்பு தொழுகை செய்த னர்.

    பின்னர் கட்டி தழுவி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் சத்தியமங்கலம் மணி கூண்டு திடலில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்ப ட்டோர் புறப்பட்டு ஊர்வல மாக சென்று பழைய மார்க்கெட் வீதி, கோட்டு வீராம்பாளையம் ஆகிய முக்கிய இடங்களில் ஊர்வல மாக சென்று கோட்டு வீராம்பாளையம் அருகே உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    ×