என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ranchi"
- ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார்.
- பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தோனி தனது பெட்டியை மேல் உள்ள ரேக்கில் வைத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது. சக பயணிகள் டோனியை தங்கள் போன் கேமராக்களில் படம்பிடித்து அவரின் எளிமையை கைதட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் டோனியின் எளிமையை மெச்சி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆர்சிபி உடனான ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் ஆர்சிபி அணியினருக்கு டோனி கை கொடுக்காமல் மைத்தனத்தில் இருந்து சென்றது சர்ச்சையான நிலையில் அந்த களங்கத்தைப் போக்கும் வகையில் இந்த வீடியோவைப் பகிர்ந்து டோனியின் நற்பண்புகளை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் 6 ஆம் கட்ட தேர்தலான இன்று ( மே 250 பீகார் மாநிலம் ராஞ்சியில் டோனி வாக்களித்து குறிப்பிடத்தக்கது.
- ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- ராஞ்சியில் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார்.
டேராடூன்:
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6வது கட்ட தேர்தலில் ராஞ்சி தொகுதியும் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், ராஞ்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு சென்றார். அப்போது அவர் ஜார்க்கண்ட் பெண்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
#WATCH | Congress General Secretary Priyanka Gandhi Vadra performs a traditional dance with locals in Ranchi, Jharkhand.
— ANI (@ANI) May 22, 2024
Source: Congress pic.twitter.com/FIlNWNUMcF
- பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
- ராஞ்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்.
நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
"ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது டெல்லியில் இருந்து புறப்படும் நிலையில் இல்லை. சாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஞ்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்," என்று ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- ராஞ்சியில் உள்ளது ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் எனும் பொதுத்துறை நிறுவனம்
- இட்லி விற்று கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் நடத்துகிறார்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது.
சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன. அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது.
பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் 18-மாத காலமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்கள் உட்பட தனது 2800 ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலவில்லை.
இந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் ஒரு தொழில்நுட்ப பணியாளர், மத்திய பிரதேச ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா. இவருக்கு மனைவியும், பள்ளிக்கு செல்லும் 2 மகள்களும் உள்ளனர்.
இவரும் ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஆனால், ஹெச்.இ.சி. சம்பளம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்ததால், நிதி நெருக்கடி அதிகரித்தது. பள்ளியில் மகள்களுக்கு மாதாந்திர கட்டணம் கூட செலுத்த முடியாததால், பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்தது. இதனால் மகள்கள் இருவரும் வீட்டிற்கு அழுது கொண்டே வருவார்கள்.
நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டித்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார். காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.
இந்தியர்கள் நிலவை தொட்டதாக பெருமைப்பட்டு கொள்ளும் அதே வேளையில் அதற்காக பாடுபட்டவர்கள் சாலையோரம் வந்து விட்ட பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் அர்சாண்டே. இந்த கிராமத்தில் வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூக்கிட்டு இறந்ததாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து காலை 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.
அந்த குடும்பத்தினர் வறுமையில் வாடியதாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வறுமையின் காரணமாக 2 கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Ranchi #Jharkhand #Sucide
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்