என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rare plant"

    • அதலைக்காய் கசப்பு தன்மையுடைய, மருத்துவ குணம் உடைய அரிதில் கிடைக்காத ஒரு காய் ஆகும்.
    • வழக்கமாக நவம்பர் மாதம் புதியம்புத்தூர் சந்தைக்கு அதலைக்காய் விற்பனைக்கு வரும்.

    புதியம்புத்தூர்:

    பாகற்காய் போல் ருசி உடைய ஆனால் பாகற்காயை விட சிறிதாக உள்ள அதலைக்காய் கசப்பு தன்மையுடைய, மருத்துவ குணம் உடைய அரிதில் கிடைக்காத ஒரு காய்கறி ஆகும்.

    மழை காலங்களில்

    மற்ற காய்கறிகள் விளைநிலங்களில் விவசாயியால் விளைவித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஆனால் அதலைக்காய் விதைப்பு செய்யாத தரிசு நிலங்களில் மழை காலங்களில் முளைத்து பாகற்காய் போன்று கொடிகளாக வளர்ந்து நிலங்களில் படர்ந்து நின்று பயன் தரும்.

    அதலைக்காய்க்கு மிகுந்த மருத்துவ குணம் உண்டு. இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். குடல்புழு அழிந்து போகும். கல்லீரல் வலுப்படும். மனித உடல் நலத்திற்கு பெரிதும் பயன்படும் என்கிறார்கள். இக்காய்கறி மழை காலங்களில் மட்டும் தான் விளையும்.

    சென்னைக்கு ஏற்றுமதி

    சாலையின் பக்கவாட்டில் கூட இக்கொடி படர்ந்து வளரும். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது அதலைக்காய் புதியம்புத்தூர், தட்டாப்பாறை, கைலாசபுரம், உமரிக்கோட்டை, சிலுக்கன்பட்டி, மடத்துப்பட்டி, சாமிநத்தம், சில்லானத்தம், நயினார்புரம் ஆகிய கிராமங்களில அதிகமாக விளைந்துள்ளது.

    நவம்பர்- டிசம்பர் மாதங்களில் அதலைக்காய் விளைந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும். வழக்கமாக நவம்பர் மாதம் கிராமங்களில் இருந்து புதியம்புத்தூர் சந்தைக்கு அதலைக்காய் விற்பனைக்கு வரும். அளவிற்கு அதிகமாக அதலக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும் போது புதியம்புத்தூரில் இருந்து ஆம்னி பஸ்களில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அதலைக்காய் கொண்டு செல்லப்படும்.

    ×