என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rashmika Mandanna"
- புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் வெளியான லிரிக் வீடியோ பாடல்களில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்ற சாதனை இப்பாடல் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பீலிங்க்ஸ் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் தொடக்கத்தில் மலையாள வரிகளில் தொடங்குகிறது. இப்பாடலில் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜூன் நடனமாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது.
- புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் வெளியான லிரிக் வீடியோ பாடல்களில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்ற சாதனை இப்பாடல் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பீலிங்க்ஸ் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்பாடலின் தொடக்கத்தில் மலையாள வரிகளில் தொடங்குகிறது. இப்பாடலில் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜூன் நடனாமடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லைகர், தி ஃபேமிலி ஸ்டார் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
- விஜய் தேவரகொண்டா சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார்.
தெலுங்கு திரையுலகில் பிரபல இளம் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா முக்கிய இடத்தில் இருப்பவர். இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
லைகர், தி ஃபேமிலி ஸ்டார் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார். இதுக்குறித்த ப்ரோமோஷன் ஈவண்டில் இவரது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில் அவர் "எனக்கு 35 வயது ஆகிறது, நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? என நகைச்சுவையாக கூறினார். மேலும் என்னுடன் நடித்த சக நடிகையை நான் டேட் செய்துள்ளேன் என ஒப்புக் கொண்டார். எனக்கு காதலிக்கப்படுவது எப்படிப்பட்ட உணர்வு என்று தெரியும், எனக்கு காதல் என்றால் என்னவென்றும் புரியும். என்னுடைய காதல் அன்கண்டிஷனலான காதல் கிடையாது. என்னுடைய காதல் சில கண்டிஷன்களுடன் தான் வரும்." என்றார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து மற்றும் ஒன்றாக டேட் செய்து வருகின்றனர் என்ற தகவல் டியர் காமரேட் திரைப்பட நாட்களில் இருந்தே பரவி வருகின்றன. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பொது இடங்களுக்கு செல்வது, சமீபத்தில் கூட இருவரும் குடும்பத்தினரும் ஒன்றாக தெலுங்கு திரையுலகின் ஆட வடிவமைப்பாளர் திருமணத்தில் ஒன்றாக கலந்துக்கொண்டனர். எனவே இவர்களின் காதல் உறுதியாகவே ரசிகர்கள் மத்தியில்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இருவர் தரப்பினரிடம் இருந்து விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா தற்பொழுது புஷ்பா 2, குபேரா ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குபேரா படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.
- இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
'ராயன்' படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'குபேரா' திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாக உருவாகி வருகிறது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு தரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷ், நாகர்ஜூனா மற்றும் நடிகை ராஷ்மிகா அடங்கிய காட்சிகளின் முன்னோட்டம் போல் க்ளிம்ப்ஸ் வீடியோ உருவாக்கப்பட்டு இருக்கிறது. க்ளிம்ப்ஸ் வீடியோவின் படி இந்தப் படம் ஏழை, பணக்காரன், திருட்டு ஆகியவற்றை சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
- தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
'ராயன்' திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'குபேரா' திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது
- புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. திரைப்படம் உலகமுழுவதும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் புஷ்பா-2 திரைப்படத்தை விளம்பரப்படுத்த Free Fire ஆன்லைன் கேமிங் தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள், ஆயுதங்கள் உள்ளிடவற்றை கேமில் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
ஃப்ரீ ஃபையர் ஆன்லைன் கேம் உலக புகழ்பெற்ற ஷூட்டிங் விளையாட்டாகும். இந்த விளையாட்டு 50 நபர்கள் ஒரு தனி தீவில் இறக்கி விடப்படுவர். 10 நிமிடங்களில் ஒருவரை ஒருவர் அவர்களை தற்காத்துக் கொண்டு கடைசியில் யார் உயிர் பிழைக்கிறார்கள் என்பதே இந்த விளையாட்டின் அம்சமாகும்.
The Biggest Game and the Biggest Movie are coming together for the biggest collaboration ???#FreeFire x #Pushpa2TheRule#PushpalnFFM #FreeFireMAX pic.twitter.com/YPlRv1mwHx
— Mythri Movie Makers (@MythriOfficial) November 10, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உங்களுக்குப் பிடிக்காத பீல்டில் இறங்கி அதைப் பற்றி கவலைப்படாமல், நீங்கள் விரும்பும் வேலையைச் செய்யுங்கள்.
- வாயில்லா பிராணிகளால் நமக்குள் இருக்கும் ஸ்ட்ரெஸ், சோர்வு போய்விடும்.
சென்னை:
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில யோசனைகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது:-
சந்தோஷமாக வாழ நான் சில டெக்னிக்குகளை கடைப்பிடிக்கிறேன். என்னை மாதிரி அழகாக ஆரோக்கியமாக வாழ இதை செய்யுங்கள்.
நல்ல உணவை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழ தரமான தூய்மையான உணவு முக்கியம். இனிப்பு சாப்பிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் வரும். காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதல்ல என்று சிலர் சொல்வார்கள். ஆனால் கொஞ்சமாக காபி அருந்தலாம். அது உற்சாகம் தரும்.
பயணம் செய்வதற்கு வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம். உடலுக்கு தேவையான தூக்கம் அவசியம். இஷ்டமில்லாத பீல்டில் இறங்கி அதற்காக தினமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட மனதுக்கு பிடித்த பணியை செய்யுங்கள்.
மனதார சிரியுங்கள். சிலர் வாழ்க்கையில் சிரிப்பது என்பதையே மறந்து விட்டு எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி செய்யாதீர்கள். வாயில்லா பிராணிகளால் நமக்குள் இருக்கும் ஸ்ட்ரெஸ், சோர்வு போய்விடும். எனக்கு எனது அவுரா நாய் குட்டியுடன் விளையாடுவது சந்தோஷத்தை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது.
- புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் .
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6 ஆம் தேதி-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஃபகத் ஃபாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா திரைப்படத்தில் பன்வர் சிங் ஷேகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போஸ்டரில் லுங்கி அணிந்துக் கொண்டு ஒரு கையில் கோடாரியும் மற்றொரு கையில் துப்பாகியுடன் மிகவும் மாஸான லுக்கில் காணப்படுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷின் கதாப்பாத்திரம் ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் உள்ளது.
- நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியா வரவேற்பை பெற்றது.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியா வரவேற்பை பெற்றது. நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கதாப்பாத்திரங்கள் பணத்தை சார்ந்து இருக்கிறது. ஆனால் தனுஷின் கதாப்பாத்திரமோ ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் உள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு 'குபேரா' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.
இருப்பினும் தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் ராஷ்மிகா நடிப்பில் இந்தியில் வெளியான அனிமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அவர் தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள்ஃப்ரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் தனது கையைத் தொட்டு செல்ஃபிக்கு போஸ் கொடுக்கச் சொன்னதால் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அசவுகரியம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் அமைதியாகவும், பணிவாகவும் அந்த சூழ்நிலையை கையாண்டார்.
இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ காட்சிகளை கண்ட ராஷ்மிகாவின் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா.
- ராஷ்மிகா மந்தன்னாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியிடப்பட்டது.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து நாகர்ஜூனாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியாகியது. படப்பிடிப்பு ஐதராபாத், மும்பை மற்றும் பல இடங்களில் நடைப்பெற்ற வருகிறது. நேற்று ராஷ்மிகா மந்தன்னாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில் ராஷ்மிகா ஓர் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பெட்டியை தோண்டி வெளியே எடுக்கிறாள். அப்பெட்டி முழுவதும் பணம் நிறைந்து கிடக்கிறது. அவள் அந்த பெட்டியை திறந்து சரிபார்த்து விட்டு , சந்தோஷத்துடன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறார்.
நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கதாப்பாத்திரங்கள் பணத்தை சார்ந்து இருக்கிறது. ஆனால் தனுஷின் கதாப்பாத்திரமோ ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் உள்ளது. எம்மாதிரி கதைக்களத்துடன் திரைப்படம் அமைந்துள்ளது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.
- புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.
நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் தொடர்ந்து தள்ளிப் போய் வருவதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் புஷ்பா 2 படக்குழுவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், " எதற்காக புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது. படக்குழு ஜோக் அடிக்கிறதா? நீங்கள் ரசிகர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறீர்கள். புஷ்பா கம்யூனிட்டியை சேர்ந்த நான் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்" என்று மிரட்டியுள்ளார்.