search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rat Bite"

    • மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
    • ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    தெலுங்கானாவில் அரசு விடுதியில் தங்கி படித்து வரும் 10 வகுப்பு மாணவி தொடர்ந்து 15 முறை ஏற்பட்ட எலிக் கடி காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கம்மம், தானவாய்குடத்தில் பி.சி. நல விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவியை, இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.

    ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து எலி கடித்ததால் லட்சுமிக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டுக்கு பின்னர், மாணவி தற்போது மம்தா பொது மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

    லட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடைந்து வரும் நிலையில், நரம்பியல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விடுதிகளில் நிலை குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பிஆர்எஸ் கட்சி விமர்சித்துள்ளது.

    • மாணவிகளுக்கு ராமயம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • எலி தொல்லையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் விடுதியில் 9 மாணவிகளை எலி கடித்தது. அவர்களுக்கு ராமயம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எலி தொல்லையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் விடுதியில் தூய்மை இல்லாதது குறித்து புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு மற்றும் வழக்கு செலவை வழங்கும்படி ரெயில்வே துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Railways
    சேலம்:

    சேலத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரை எலி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர், டிக்கெட் பரிசோதகரிடம் கூறியபோது முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்யவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில்தான் சிகிச்சை பெற முடியும் என்று கூறியிருக்கிறார்.

    கடைசியாக எழும்பூர் ரெயில் நிலையம் வந்ததும், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். முதலில் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேசமயம், எலி கடித்ததால் மனவேதனை அடைந்ததாகவும், இதற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 4 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் இப்போது நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட பயணி வெங்கடாச்சலத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மருத்துவச் செலவிற்கு ரூ.2 ஆயிரம் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.5 ஆயிரம் வழங்கும்படி ரெயில்வே துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தொகையை மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். Railways
    ×