search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ratha saptami"

    • இன்று மதியம் புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
    • இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா இன்று காலை தொடங்கியது.

    இன்று ஒரேநாளில் ஏழுமலையான் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ரதசப்தமி விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிய தொடங்கினர். இதனால் 4 மாட வீதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன சேவையும், 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன சேவையும் நடந்தது. மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை அங்குள்ள புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடுவார்கள்.

    மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலாவும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா நடக்கிறது.

    ரதசப்தமியொட்டி கோவிலில் இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதியில் நேற்று 59,695 பேர் தரிசனம் செய்தனர். 30,286 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கோவில் வாசலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரதசப்தமி பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு நடந்தது.

    அன்றைய தினம் திருமங்கலகுடியிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் வாசலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. விழாவில் மாங்கல்ய தாரணம், தீபாராதனையை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் திருக்கல்யாண உபயதாரர் திருமங்கலகுடி காளிமுத்து ராஜமுநேந்திரர் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

    • அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும்.
    • ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது.

    சூரிய பாகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, 'ரத சப்தமி' ஆகும். இது 'சூரிய ஜெயந்தி' என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே 'ரத சப்தமி' என்கிறோம்.

    'சப்தம்' என்றால் 'ஏழு' என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும். உத்ராயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே 'ரத சப்தமி' என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் சூாியன் பயணிக்கும் தேரை இழுத்துச் சென்றும், 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகின்றன.

    இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

    7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

    கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

    ரத சப்தமி தினத்தில் மேற்கொள்ளக்கூடிய ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது. தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள்ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும் வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். குளித்து முடித்த பிறகு சூரிய பகவானை வழிபட்டு ஒரு மண் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி சூரிய ஒளி அப்பாலில் விழும் படி சூரியனுக்கு நைவேத்தியம் வைத்து, சூரியனுக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

    கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.

    மிகவும் அற்புதமான இந்த நாளில் தொடங்கும் தொழில், வியாபாரங்கள் பெருகும். பெண்கள் நற்கதியை அடைவார்கள். கணவனை இழந்த பெண்கள் இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன நமது புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்வது ஆன்மீக ரீதியான நற்பலன்களை தரும். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் பெருஞ்செல்வந்தர் ஆக உயர்வார்கள். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியமும், பலன்களும் உண்டு.முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். குல சாபங்கள் நீங்கும்.

    இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஜெ.மாணிக்கம்

    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
    • 29-ந்தேதி கிரிவலம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 28-ந்தேதி மாத சுத்த சப்தமியையொட்டி ரதசப்தமி விழா நடக்கிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி கே.வி.சாகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரதசப்தமியையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் ருத்ர பாதங்கள் அருகில் உள்ள சாயா உஷா தேவி சமேத சூரிய நாராயண சுவாமி சன்னதி அருகில் காலை 6 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மேலும் மூலவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு இரண்டாவது கால அபிஷேகம் நடக்கிறது.

    அதன் பின்னர் காலை 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா நடக்கிறது. இதே போல் 29-ந் தேதி ஆன்மிக சொற்பொழிவாளர் சாகன்ட்டி கோட்டீஸ்வர ராவ் தலைமையில் கிரிவலம் நடக்கிறது.

    ஸ்ரீ காளஹஸ்தி எல்லை பகுதியில் கைலாச கிரி மலைகள் வழியாக இந்த கிரிவலம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
    • அன்று ஒரேநாளில் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    சூரிய ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இது, திருமலையில் நடக்கும் 'மினி பிரம்மோற்சவ' விழா என்றும், 'ஒருநாள் பிரம்மோற்சவம்' என்றும் அழைக்கலாம். அன்று ஒரேநாளில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த வாகனச் சேவையை வழிபடும் பக்தர்களுக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் வாகனச் சேவையை வழிபடும் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    அதன்படி 28-ந்தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதி உலா, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    ரத சப்தமியையொட்டி 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • 24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. விழாவையொட்டி 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். காலை 7 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்திலும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10 மணி முதல் 11 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை கருட வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    அதேபோன்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும், இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கஜ வாகன சேவை நடக்கிறது. முன்னதாக மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி முகமண்டபத்தில் தாயார் உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆர்ஜித கல்யாண உற்சவம், சாமவேத புஷ்பாஞ்சலி, சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

    ரதசப்தமியை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    • சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள்.
    • இதை சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள்.

    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் ரத சப்தமி முக்கியமானது. சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள். சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள். அதன்படி வருகிற 28-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் வைணவ கோவில்களில் ரத சப்தமி விழா நடக்கிறது.

    கோவில்களில் ரத சப்தமிக்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மம் திருப்பதியில் இருந்தபடியே அனைத்துக் கோவில் அதிகாரிகளை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி ஆலோசனை நடத்தினாா்.

    அப்போது இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், நாராயணவனம், நாகலாபுரம், கடப்பா ஆகிய கோவில்களில் ரதசப்தமியை முன்னிட்டு வாகனச் சேவையுடன் மூல மூர்த்தியை முறைப்படி தரிசனம் செய்ய அனைத்து முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். வாகனச் சேவைக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்களை முன்கூட்டியே பரிசோதிக்க வேண்டும்.

    கடப்பாவில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா் கோவிலில் தேரோட்டத்துக்காக தேர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தந்தக் கோவில்களில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்பாடு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    அதேபோல் ஜம்மு, சென்னை, ராமச்சோடவரம், சீ்தம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் மகா கும்பாபிஷேகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தந்தக் கோவில்களுக்கு தேவையான நகைகள், கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள், அர்ச்சகர், ஊழியர்கள், இதர பிரதிநிதிகள், பணியாளர்கள், சுகாதார ஏற்பாடுகள் போன்றவை விவாதிக்கப்பட்டது.

    கோவில்கள் தொடர்பான பணிகள் முன்னேற்றம் குறித்து பொறியியல் துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்குதல், மின் விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோவில் அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலமாக நடந்தது. ஒரேநாளில் 7 வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. அதிகாலை 5.30 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தியை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் கிழக்கு மாட வீதியில் பிரதான நுழைவு வாயில் எதிரே கொண்டு வந்து நிறுத்தினர். சூரியன் உதயமான நேரத்தில் சூரியக்கதிர்கள் உற்சவரின் பாதத்தில் விழுந்தபோது, அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.

    இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா காலை 8 மணிவரை நான்கு மாடவீதிகளில் வலம் வந்தது. வேத பண்டிதர்கள், வேத மந்திரங்களை ஓதினர். வேத மாணவர்கள் சூரியாஷ்டகம் ஷோத்திரத்தைப் பாராயணம் செய்தனர். வாகன வீதிஉலா முன்னால் கோலாட்டம், பஜனை கோஷ்டிகளின் பக்தி பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகனம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகனம் (கருட சேவை), மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை அனுமந்த வாகனம், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி), மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சர்வ பூபால வாகனம், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திரபிரபை வாகனம் நடந்தன.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ரத சப்தமி விழாவால் நேற்று கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், டோலோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை மற்றும் வாரத்தில் ஒருநாள் நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    சுப்ர பாதம், தோமாலா, அர்ச்சனை ஆகியவை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது. நேற்று சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல் இன்றும் (புதன்கிழமை) சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களுக்கு மட்டும் தரிசன அனுமதி வழங்கப்பட்டது. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுப்பப்பட்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்கள் வீதிஉலா நடக்கின்றன.

    அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். எனவே இதுஒரு ‘‘மினி பிரம்மோற்சவ விழா’’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.

    முதலில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதயமாகும் நேரத்தில், ‘‘சூரிய ஜெயந்தி விழா’’ நடக்கிறது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் எதிரே கொண்டு வந்து நிறுத்தப்படுவார்.

    சூரியக்கதிர்கள் உற்சவர் மீது விழும். அந்த நேரத்தில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா நான்கு மாடவீதிகளில் வலம் வரத் தொடங்கும். மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோ‌ஷத்துடன் வழிபடுவர்.

    வாகன வீதிஉலாவை பார்க்க லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் 175 கேலரிகளை சீரமைத்து, தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. கேலரிகளில் அமர்ந்து காலை முதல், இரவு வரை வாகன வீதிஉலாவை பார்த்து வழிபடும் பக்தர்களுக்குச் சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாடவீதிகளில் 55 உணவுக்கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கிருந்து கேலரிகளில் அமர்ந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம், குடிநீர் ஆகியவை வினியோகம் செய்யப்படும். பனி மற்றும் வெயிலுக்காக பக்தர்களின் நலன் கருதி தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் நேரத்தில் பக்தர்கள் மாடவீதிகளில் நடக்கும்போது, தரை சுடாமல் இருக்க, ‘கூல் பெயிண்ட்’ அடிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களை கவரும் வகையில் மாடவீதிகளில் பல்வேறு இடங்களில், ‘ரங்கோலி கோலம்’ வரையப்பட்டுள்ளது. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள் வரிசையாக கொண்டு செல்லப்படும். திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரி‌ஷத் திட்டம் சார்பில் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடக்கின்றன.

    ஐதராபாத் டிரம்ஸ், கேரள செண்டை மேளம் ஆகியவை இசைக்கப்படும். பல்வேறு பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி செல்வார்கள். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்குச் சேவை செய்வார்கள். ரத சப்தமி விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு, பக்தர்களின் வருகைக்காக தயார் நிலையில் உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சூரிய பிரபை வாகனம் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணிவரை, சிறிய சே‌ஷ வாகனம் காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை, கருட வாகனம் பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை, அனுமந்த வாகனம் மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை நடக்கின்றன.

    அதைத்தொடர்ந்து சக்கர ஸ்நானம் மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை, கல்ப விருட்ச வாகனம் மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, சர்வ பூபால வாகனம் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை, சந்திரபிரபை வாகனம் இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை நடக்கின்றன.
    கணவனை இழந்தவர்கள் ரதசப்தமி விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன.
    உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில், மிக முக்கியமானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால், திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    செல்வத்தைப் பெருக்கும் இந்த விரதம் மிகவும் எளிமையானது. ஏழு எருக்கன் இலைகளை, தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் விருத்தியாகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.
    திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறுகிறது.
    திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறுகிறது.

    அன்று ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது. ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசே‌ஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம்.

    இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகன சேவைகள் நடைபெறுகிறது.
    ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்து கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும்.
    மகாபாரத போரில் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் வரம் பெற்று இருந்ததால் அவர் ஜீவன் பிரியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்த வண்ணம் சென்றனர். அப்போது அங்கு வந்த வியாசரிடம் ‘நான் என்ன பாவம் செய்தேன்.

    என் உயிர் போகவில்லையே’ என்று மனம் வருந்தினார். அதற்கு வியாசர் ‘ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை செய்யாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருந்தாலும் பாவம் தான்’ என்றார். உடனே பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை துச்சாதனன் துகில் உரித்த போது அதை தடுக்காமல் இருந்த தவறு நினைவுக்கு வந்தது. ‘இதற்கு விமோசனம் இல்லையா?’ என்று கேட்டார்.

    அதற்கு வியாசர் ‘எப்பொழுது நீ உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டது. இருந்தாலும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது விதி’ என்றார் வியாசர். பின்னர் எருக்க இலை ஒன்றை காட்டி ‘எருக்கஇலை சூரியனுக்கு உகந்தது. சூரியனின் சாரம் உள்ளது. ஆகவே அந்த இலைகளால் உன் அங்கங்களை அலங்கரிக்கிறேன்’ என்று கூறி பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். இதனால் அமைதியாக இருந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசியன்று உயிர் நீத்தார்.

    பீஷ்மருக்கு நீத்தார் கடன் செய்ய யாரும் இல்லாததால் தர்மர் வருத்தப்பட்டார். இது குறித்து அவர் வியாசரிடம் கூற, அதற்கு அவர் ‘சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் நாடு முழுவதும் மக்கள் பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிப்பார்கள். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்து கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். அதனால் தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், எருக்க இலையை உடலில் பல அங்கங்களிலும் வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது.
    ×