என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ration Rice seized"
- 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.
- அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
தருமபுரி:
உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காவேரிப்பட்டணம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர்.
அதில், 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. அதை தொடர்ந்து லாரிக்கு பாதுகாப்பாக கார் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து லாரி, கார்களில் இருந்த விருதுநகர் மாவட்டம், வெள்ளியம்பலத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 48), தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த சேட்டு (28), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சுதாகர் (34), கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நாகராஜ் (58), சேலம் மாவட்டம், ஓமலூர் ராமச்சந்திரன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரேசன் அரிசி, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
- ராஜபாளையம் அருகே 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அடிக்கடி நடந்து வரு கிறது. குறிப்பாக மாவட்ட எல்லை அருகில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் முழுமையான பலன் இல்லை.
இந்த நிலையில் சம்ப வத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது அங்குள்ள தனியார் நிலத்தில் 23 மூடைகளில் 920 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத் திருப்பது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (33), லோடுமேன் கல்யாணசுந்தரம் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ரேசன் அரிசியை ஆலைகளில் பாலீசு செய்து வெளிமார்க்கெட்டுகளில் அதிக விலையில் விற்க பதுக்கி வைத்திருந்தார்களா? அல்லது கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு கடத்திய 35 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக் கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி 35 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது. வேனில் வந்தவர் களை விசாரித்தபோது அவர்கள் கடலாடி தொண்டு நல்லம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது18), மதுரை பெருங்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஜோதிமுத்து (28) என்பது தெரியவந்தது.
மேலும் அருப்புக் கோட்டை அருகே உள்ள கே.எம்.கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேருக்கு சொந்தமான இடத்தில் இருநது மதுரை வில்லா புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டிரைவர், லோடுமேனை கைது செய்தனர்.
மேலும் சந்திரசேகர், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
- அதிகாரிகள் கோழி பண்ணை உரிமையாளர் முருகனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.
இந்த பண்ணையில் இன்று அதிகாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பறக்கும்படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார், வருவாய் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட பறக்கும் படை குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அங்கு உள்ள அரவை மில்லில் மூட்டை மூட்டையாக 2 ஆயிரத்து 400 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் இந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கோழிகளுக்கு தீவனமாக அரைத்து வழங்க ரேசன் அரிசியை முறைகேடாக கொண்டு வந்து பண்ணையில் உள்ள அரவை மில்லில் சேமித்து வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் கோழி பண்ணை உரிமையாளர் முருகனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2½ டன் ரேசன் அரிசியும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்ற போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது
- டிரைவர் மலைச்சாமியை கைது செய்தனர். மேலும் வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியில் உள்ள ரேசன் கடை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கொடைக்கானல் குடிமை பொருள் வட்டாட்சியர் சரவண வாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பள்ளங்கி கோம்பையை சேர்ந்த டிரைவர் மலைச்சாமியை கைது செய்தனர். மேலும் வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அதனை தடுத்து நிறுத்தினர்.
- அரிசி மூடைகளை கடத்தி வந்த வாகனத்தையும் பிடித்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பறக்கும்படை அலுவலர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். கம்பம் மெட்டு அருகே ஒரு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அதனை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் அதி வேகத்தில் சென்றனர். இருந்தபோதும் அதிகாரிகள் துரத்திச் சென்று வாகனத்தை பிடித்தனர். அதில் 2050 கிலோ பொது வினியோக திட்டத்துக்கான ரேசன் அரிசி மூடைகள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த ரேசன் அரிசி மூடைகளை கைப்பற்றினர். மேலும் அரிசி மூடைகளை கடத்தி வந்த வாகனத்தையும் பிடித்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். வாகனத்தில் வந்த 3 பேர் தப்பி ஓடியதால் அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இந்த அரிசி மூடைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ண பிள்ளை என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மோகனூர் ஆலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ண பிள்ளை என்பவரை கைது செய்தனர்.
நாமக்கல்:
தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் படி, தமிழக அரசால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட அரிசி, மண்ணெண்ணெய் கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குதல் தொடர்பாக ஆங்காங்கே வாகன சோதனை மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் மோகனூர் அருகே வளையபட்டி பகுதியில் ஈடுபட்டனர்.
அப்போது பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ண பிள்ளை என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மோகனூர் ஆலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ண பிள்ளை என்பவரை கைது செய்தனர்.
- பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிைடத்தது.
- சோதனையில் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பழனி:
பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிைடத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட போலீசார் பழனி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சிவகிரிப்பட்டி ஊராட்சியில் சேரன் ஜீவா நகரில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி இருப்பதாக தெரிய வந்தது. அங்கு நடத்திய சோதனையில் வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த 1050 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதே போல் நெய்க்காரப்பட்டி சின்னக்கடை வீதியில் ஒரு வீட்டில் இருந்து 1.50 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கியது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்பம், போடி, உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது ெதாடர் கதையாகி வருகிறது.
- சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் கம்பம், போடி, உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது ெதாடர் கதையாகி வருகிறது. அதிகாரிகள் இவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.
மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்பாதுகாப்பு துறையின் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் குழுவினர் தீவிர கண்காணப்பு பணியில் ஈடுபட்டனர்.
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை தியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் டிரைவர் சுல்தான், உரிமையாளர் ராஜாராம் ஆகியோர் சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் உத்தமபாளையம் கிட்ட ங்கியில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.
- தனியாக டிராக்டர் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் டேங்கரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- நூதன முறையில் தண்ணீருக்கு பதிலாக டேங்கர் முழுவதும் ரேசன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி-வத்தலக்குண்டு ரோட்டில் தனியார் மாவுமில் உள்ளது. இங்கு ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் உத்தரவின்படி, வட்டாட்சியர் அறிவுறுத்தலின் கீழ் வட்ட வழங்கல் அலுவலர் பாலகுமாரன், போலீஸ் டி.எஸ்.பி. நல்லு மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது இந்த ரைஸ்மில்லுக்குள் மாவாக அரைக்க 15-க்கும் மேற்பட்ட மூடைகளில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அருகில் தனியாக டிராக்டர் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் டேங்கரில் சோதனை நடத்தினர். அதில் நூதன முறையில் தண்ணீருக்கு பதிலாக டேங்கர் முழுவதும் ரேசன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.
சோதனை நடத்த அதிகாரிகள் வந்ததைத் தொடர்ந்து ரைஸ்மில் உரிமையாளர் கலா (வயது 60), அவரது மகன் பிரசாத் (25) ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து 5 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசி பதுக்கல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் பறக்கும்படை அலுவலர் தலைமையில் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ ரேசன் அரிசியை மடக்கி பிடித்தனர். அந்த அரிசி கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்டது தெரியவந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி, கம்பம், உத்தமபாளையம், கூடலூர் பகுதியிலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அதிகாரிகள் ரோந்து சென்று மடக்கி பிடித்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் பறக்கும்படை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போடி அருகே முந்தல் சோதனைச்சாவடியில் தணிக்கையில் ஈடுபட்டபோது ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ ரேசன் அரிசியை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் அந்த அரிசி கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்டது தெரியவந்தது.
பிடிபட்ட அரிசியை உத்தமபாளையம் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் நடவடிக்கை எடுக்க உணவு கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.
போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருக்கோவிலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் பெரியசேவலை மெயின் ரோட்டில் உள்ள ரகோத்தமன் மகன் முருகன் (வயது 50) என்பவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 1050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் முருகனையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்