search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravi Shasthri"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.
    • உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை அடுத்து, முன்னணி வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

     


    இது குறித்து பேசிய அவர், "இடைவெளி இருப்பதாக நினைத்தால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு காரணங்களுக்காக விளையாட வேண்டும். ஒன்று நீங்கள் இளம் தலைமுறை வீரர்களுடன் இருக்க முடியும். மற்றொன்று உங்கள் அனுபவங்களை அவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கும் பங்களிப்பை வழங்க முடியும்," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பாக, நீங்கள் விளையாட நினைப்பதை விட அதிகளவு சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியும். இந்திய அணி போட்டிகளை திரும்பி பார்க்கும் போது, பந்து திரும்பக் கூடிய பிட்ச்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதில்லை. எதிரணியில் திறமைமிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தால், அவர்கள் உங்களுக்கு தொல்லை கொடுக்க முடியும். அவர்கள் இந்திய அணிக்கு தொல்லை கொடுத்துள்ளனர்," என்று தெரிவித்தார். 

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியை, காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் விளக்கமளித்துள்ளார். #RaviShasthri #NimratKaur
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும், பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும் காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் பிசியான கால அட்டவணைகள் இருந்தபோதிலும், இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்வதற்கு நேரத்தை செலவழித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

    இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நிம்ரத் கவுர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இது கற்பனையான செய்தி என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த விளக்கமாவது, இந்த செய்தி எங்கிருந்தது வந்தது என்று தெரியவில்லை. என்னை பற்றி வந்தது எல்லாம் கற்பனையானது. அந்த கற்பனை என்னை புண்படுத்தியது என்று கூறி உள்ளார்.

    நிம்ரத் கவுர் தற்போது வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியுடன் ரவி சாஸ்திரி உள்ளார். #RaviShasthri #NimratKaur 

    ×