என் மலர்
நீங்கள் தேடியது "Ravichandran Ashwin"
- சர்வதேச அளவில் 17-வது பந்துவீச்சாளர் ஆவார்.
- சுழற்பந்து வீரர்களில் 9-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.
மும்பை:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 36 வயதான அவர் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
மும்பை வான்சுடே மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்றது.
இந்த ஆட்டத்தில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 27 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் அனைத்துவிதமான 20 ஓவர் போட்டிகளும் சேர்ந்து 300 விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை புரிந்தார். 300 விக்கெட் எடுத்த 2-வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார்.
ராஜஸ்தான் அணியின் சக வீரரான யசுவேந்திர சாஹல் ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 300 விக்கெட்டை தொட்டார். தற்போது அஸ்வினும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
சர்வதேச அளவில் 17-வது பந்துவீச்சாளர் ஆவார். சுழற்பந்து வீரர்களில் 9-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.
அஸ்வின் ஐ.பி.எல். போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ளார். மலிங்கா, அமித் மிஸ்ரா, பியூஸ்சாவ்லா ஆகியோருடன் அஸ்வின் இணைந்தார்.
பிராவோ 183 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், சாஹல் 178 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
- ஒருமுறை அவர் என்னை ஒரு கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்து சென்றார்.
- நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கை கையாளும் போது மீண்டும் அவரை சந்தித்தேன்.
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.
அஸ்வின் தனது தோழியான பிரீத்தியை காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே அஸ்வின் மனைவி பிரீத்தி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். இதை சானியா மிர்சா, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது பிரீத்தியிடம், காதல் வாழ்க்கை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
நானும், அஸ்வினும் ஒரே பள்ளியில் படித்தோம். அன்றிலிருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். அதன்பின் நாங்கள் வளர்ந்து மீண்டும் பெரியவர்களாக சந்தித்தோம். நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அஸ்வினுக்கு என் மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது.
அது முழு பள்ளிக்கும் தெரியும். அவர் கிரிக்கெட்டை தொடர பள்ளிகளை மாற்றினார். அதே வேளையில் நாங்கள் தொடர்பில் இருந்தோம். பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சந்தித்தோம்.
நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கை கையாளும் போது மீண்டும் அவரை சந்தித்தேன். திடீரென்று அவரை ஆறு அடி உயரத்தில் பார்த்தேன்.
ஒருமுறை அவர் என்னை ஒரு கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்து சென்றார். அவர் எதையும் நேரடியாக சொல்பவர். அவர் என்னிடம், என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை மிகவும் விரும்பினேன். அது 10 ஆண்டுகளாக மாறவில்லை என்றார்.
- நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார்.
- ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடியதால், அவர் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பின்தங்கினார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 4வது இடத்திலும் உள்ளனர். டாப்-10 பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார். இந்திய வீரர் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 12வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 8வது மற்றும் 9வது இடங்களில் நீடிக்கின்றனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 2வது இடத்திலும், அக்சர் பட்டேல் 4வது இடத்திலும் உள்ளனர்.
- உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.
- தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த அணியில் முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.
தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு தமிழக வீரர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உள்ளூரில் உலகக்கோப்பை நடப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. கோப்பையை நாம் அனைவரும் வீட்டிற்கு கொண்டு வருவோம் என கூறினார்.
- இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகல்.
- ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் களமிறங்கி இருக்கிறார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து பலர் ஏமாற்றம் தெரிவித்து இருந்தனர்.
தற்போது இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருப்பது அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2011, 2015 என இரு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் விளையாடி இருக்கும் நிலையில், தற்போது 2023 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவதன் மூலம், மூன்றாவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் விளையாட இருக்கிறார்.
- அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 முதல் 8 விக்கெட்டுகள் வரை எடுத்தால் 5 சாதனைகளை படைப்பார். அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நாளை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரரான பகவத் சந்திரசேகரின் (95 விக்கெட்டுகள்) சாதனையை அஸ்வின் (93 விக்கெட்டுகள்) முறியடிப்பார்.
4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 97 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார். முன்னதாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கடந்த 2006 -ம் ஆண்டு கைப்பற்றினார்.
அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டால் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்துவார்.
இதேபோன்று இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை அஸ்வின் (தற்போது வரை 34 முறை) கைப்பற்றினால் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே (35 முறை) சாதனை தகர்ப்பார்.
7 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2-வது வீரர் அஸ்வின்(93) ஆவார். முதல் இடத்தில் ஆண்டர்சன் (139 விக்கெட்டுகள்) உள்ளார்.
8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்த கும்ப்ளேவை (350) பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை அஸ்வின்(343) பிடிப்பார்.
- அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
- டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ராஜ்கோட்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
இந்திய அணியின் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
- இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார்.
- பி.சி.சி.ஐ., அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியில் இருந்து விலகுவதாக ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை பி.சி.சி.ஐ. நேற்றிரவு அறிவித்தது. குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.
திடீரென அணியில் இருந்து விலகியுள்ள அஸ்வினுக்கு தேவையான உதவிகளை செய்ய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பி.சி.சி.ஐ. மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது," என குறிப்பிட்டுள்ளது.
"ரவிசந்திரன் அஸ்வினின் தாயார் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். தனது தாயாருடன் இருப்பதற்காக அவர் ராஸ்கோட் டெஸ்ட்-இல் இருந்து விலகி அவசர அவசரமாக சென்னை விரைந்துள்ளார்," என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
- ராஜ்கோட்டில் டெஸ்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றினார்.
- குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகினார்.
ராஜ்கோட்:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. தாயாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இந்திய அணியில் இருந்து விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். இது தொடர்பான தகவலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.
திடீரென அணியில் இருந்து விலகியுள்ள அஸ்வினுக்கு தேவையான உதவிகளை செய்ய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராஜ்கோட்டில் நடைபெறும் 3வத் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மீண்டும் இணைகிறார் என பிசிசிஐ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
- இதன் மூலம் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
- முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் இந்த போட்டி 100-வது போட்டியாகும்.

இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி வீரர்கள் 100-வது போட்டியில் விளையாடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டைர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடி இருந்தனர்.
- இந்திய தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இங்கிலாந்து அணியின் கிராலி அதிகபட்சமாக 79 ரன்கள் சேர்த்தார்.
தர்மசாலா:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று காலை தொடங்கியது.
இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது. 4 போட்டி முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் 5-வது டெஸ்ட் தொடங்கியது.
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆகாஷ் தீப்புக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்றார். தேவ்தத் படிக்கல் டெஸ்டில் அறிமுகமானார். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் 5-வது இந்திய வீரர் ஆவார். ஏற்கனவே ரஜத் படிதார் துருவ் ஜூரல், சர்பிராஸ்கான், ஆகாஸ் தீப் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். காயம் அடைந்த ரஜத் படிதார் இடத்தில் படிக்கல் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு மார்க்வுட் இடம் பெற்றார்.
இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோக்கும் இன்று 100-வது டெஸ்டில் விளையாடினார்கள். 100-வது டெஸ்டில் இதுவரை 76 வீரர்கள் விளையாடி உள்ளனர்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கிராவ்லி யும், பென் டக்கெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 14.2 ஓவர்களில் 50 ரன்னை தொட்டது.
இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பென்டக்கெட் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அப்போது ஸ்கோர் 64 ஆக இருந்தது. அடுத்து ஆலி போப் களம் வந்தார். மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் கிராவ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரியில் 50 ரன்னை தொட்டார். அவரது 14-வது அரை சதமாகும்.
2-வது விக்கெட் ஜோடியையும் குல்தீப் யாதவே பிரித்தார். போப் 11 ரன்னில் அவுட் ஆனார். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து இருந்தது. கிராவ்லி 61 ரன்னில் களத்தில் இருந்தார்.
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய குல்தீப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிராலி 79 ரன்னிலும் பேர்ஸ்டோவ் 29 ரன்னிலும் ஸ்டோக்ஸ் 0 ரன்னிலும் குல்தீப் ஓவரில் வெளியேறினார்.
இதனையடுத்து அஸ்வினுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அஸ்வினும் அவர் பங்குக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 57.4 ஓவரில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டும் அஸ்வின் 4 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.