என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![உலகக் கோப்பையை வீட்டிற்கு எடுத்து செல்வோம்- இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு அஸ்வின் பாராட்டு உலகக் கோப்பையை வீட்டிற்கு எடுத்து செல்வோம்- இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு அஸ்வின் பாராட்டு](https://media.maalaimalar.com/h-upload/2023/09/05/1944843-ashwin.webp)
X
உலகக் கோப்பையை வீட்டிற்கு எடுத்து செல்வோம்- இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு அஸ்வின் பாராட்டு
By
மாலை மலர்5 Sept 2023 4:44 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.
- தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த அணியில் முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.
தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு தமிழக வீரர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உள்ளூரில் உலகக்கோப்பை நடப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. கோப்பையை நாம் அனைவரும் வீட்டிற்கு கொண்டு வருவோம் என கூறினார்.
Next Story
×
X