என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravichandran Aswin"

    • இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
    • 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

    அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களை எட்டிப்பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    • இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து ரவிசந்திரன் அஷ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்றும், உலக அளவில் இரண்டாவது அதிவேகமாக 500 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது அவருக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தன்னுடைய சாதனை குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் " இது ஒரு மிக நீண்ட பயணம். இந்த சாதனையை நான் என் தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் விளையாடுவதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம். அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கலாம். அவர் எனக்கு எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லாமும் ஆக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    • 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் பேட் கம்மின்ஸ் சாதனையை அஸ்வின் முறியடிப்பார்.
    • 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வால்ஷ் சாதனையை முறியடிப்பார்.

    இந்தியா வந்துள்ள வங்கதேச அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தொடரில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை படைவிருக்கிறார். இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் முதலிடத்தில் உள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இதுவரை 43 போட்டியில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது 174 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்தில் அஸ்வின் இருக்கிறார். 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கம்மின்சை பின்னுதள்ளி விடுவார்.

    மேலும் 14 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார். அதோடு மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தும் வாய்ப்புள்ளது.

    இந்தியாவில் 126 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 455 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். அவர் வங்கதேச தொடரை 22 விக்கெட்டுகளுடன் முடித்தால், இந்திய மண்ணில் விளையாடிய போட்டிகளில் 476 சர்வதேச விக்கெட்டுகள் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார்.

    இதை தவிர, 4 மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்தினால், டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கர்ட்னி வால்ஷ் (519), ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் (530) ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார். மேலும் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஷேன் வார்னேவின் (37 முறை) 5 விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார். 5 விக்கெட்டுகள் அதிக முறை எடுத்தவர்கள் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67) முதல் இடத்தில் உள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2023-25-ல் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த தொடரில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினால் WTC-l அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை அஸ்வின் பெறுவார்.

    • சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் விளையாட அஷ்வின் தேவை.
    • விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்க மாட்டார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தவுடன் இந்திய வீரரான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது இந்திய வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இவரது ஓவ்யு குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அணி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

    அஸ்வின் ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- 

    விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்க மாட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் ஓய்வை குறித்து பேசுங்கள் என கோலி நிச்சயம் கூறி இருப்பார்.

    ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் விளையாட அஷ்வின் தேவை. ராகுல் டிராவிட் அல்லது ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருந்திருந்தாலும் இந்த நேரத்தில் அவரை விலக அனுமதித்து இருக்க மாட்டார்கள் என பாசித் அலி கூறினார்.

    • அஸ்வின் ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
    • அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.

    பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

    அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது பேட்டி அளித்த ஜடேஜா முழுவதுமாக ஹிந்தியில் பேசியுள்ளார். இதனையடுத்து ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து உள்ளனர்.

    இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மட்டுமே. இதனால் ஜடேஜா இந்தியில் பேசினார்.

    ஆஸ்திரேலிய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை கிளப்பவே எப்போதும் முயற்சி செய்கின்றன என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய செய்தியாளர் சுபயன் சக்ரவர்த்தி கூறினார்.

    அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×