என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Real Madrid"
- ஏசி மிலன் அணி 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
- நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் 2024-25 போட்டியின் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன் அணிகள் மோதின. இந்த போட்டி ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள சாண்டியாகோ பெர்னாபியூவில் நடைபெற்றது.
பரபரப்பான இந்த போட்டியில் ஏசி மிலன் அணி 12-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி 23-வது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது.
இதனையடுத்து 39-வது நிமிடத்திலும் 73-வது நிமிடத்திலும் மிலன் அணி கோல் அடித்து அசத்தியது. இறுதியில் ஏசி மிலன் அணி 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் மாட்ரிட் அணி நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் கூறினார்.
- இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் வினிசியஸ் கூறினார்.
பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் 77-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இளம் வீரர் லமின் யமால் ஒரு கோல் அடித்தார். கோல் அடித்த உற்சாகத்தில் அதனை கொண்டாடும் விதமாக ஜெர்சியில் இருக்கும் அவரது பெயரை சுட்டிக் காட்டி கொண்டாடினார். உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவர் மீது இனவெறி முழக்கங்களை எழுப்பினர். 17-வது வயதான வீரருக்கு எதிராக ரசிகர்கள் இனவெறி முழுக்கம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பார்சிலோனா அணி வீரர் லமின் யமால் மீது இனவெறி முழக்கங்கள் எழுப்பிய மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
Hoy, el futbolista Lamine Yamal ha recibido insultos racistas en el Bernabéu. El Real Madrid de Florentino Pérez sigue protegiendo a ultraderechistas, mientras los medios de comunicación te venden que son abanderados contra el racismo. pic.twitter.com/Jt7bk1XRQX
— Fonsi Loaiza (@FonsiLoaiza) October 26, 2024
- பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிய நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.
- இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.
பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் எம்பாப்பே. இவர் உலகின் தலைசிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, ப்ரீடிரான்ஸ்ஃபர் மூலமாக உலகின் முன்னணி கால்பந்து அணியான ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக UEFA சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அட்லாண்டா அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுதான் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாப்பே களம் இறங்கிய முதல் போட்டியாகும். இந்த போட்டியில் எம்பாப்பே ஒரு கோல் அடித்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது லா லிகா கால்பந்து லீக் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ரியல் மாட்ரிட் ரியல் பெட்டிஸ் அணியை எதிர்கொண்டது.
இதற்கு முன்னதாக மூன்று போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக எம்பாப்பே களம் இறங்கி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக விமர்சனம் எழும்பியது.
இந்த நிலையில் ரியல் பெட்டிஸ் அணிக்கெதிராக எம்பாப்பே லா லீகாவில் முதல் கோலை பதிவு செய்தார். 67-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடித்தார். அத்துடன் 75-வது நிமிடத்தில் பொனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. இதையும் சரியான பயன்படுததி கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது. ரியல் மாட்ரிட் 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் டிராவுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடம் வகிக்கிறது.
- இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது.
- முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான்.
பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே. இவர் பாரீஸ் சூப்பர் ஜெய்ன்ட் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியில் இருந்து ப்ரீ டிரான்ஸ்பராக ரியல் மாட்ரிட் அணிக்கு வந்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியுடன் ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முதல்முறையாக சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக அட்லாண்டா அணியை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் 2-0 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2-வது கோலை எம்பாப்வே அடித்தார். இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்காக அடித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் எம்பாப்பே "நாங்கள் ரியல் மாட்ரிட். எங்களுக்கு எல்லை கிடையாது. எனக்கும் இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது. என்னால் 50 கோல்கள் அடிக்க முடியும் என்றால், அது 50 ஆக இருக்கும். ஆனால், முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான். ஏனென்றால் நாங்கள் ஒரு அணியாக வெற்றிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய இந்த இரவு (நேற்றிரவு இறுதிப்போட்டி) சிறந்த இரவாக அமைந்தது. ரியல் மாட்ரிட்டி ஜெர்சி அணிந்து விளையாடுவதற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு சிறந்த தருணம்" என்றார்.
- பிரான்ஸ் கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.
- அந்த அணியில் எம்பாப்பேவுக்கு 9-ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே. கிளப் போட்டிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்தார்.
இதையடுத்து, அவர் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பிரான்சின் பிரபல கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைந்ததாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிளப் தலைவர் புளோரெண்டினோ பெரெஸ் முன்னிலையில் அவர் அணியில் இணைந்தார்.
ரியல் மாட்ரிட் அணியின் பிரபல வீரரான லூகா மோட்ரிக்கிற்கு 10-வது நம்பர் ஜெர்சி எண்ணாக இருப்பதால், எம்பாப்பேவுக்கு 9-ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.
- இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
- டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது.
UEFA சாம்பியன் ஷிப் லீக் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து 69 வது சீசன் போட்டிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் சாம்பியன் லீக் பட்டத்தை வெல்வதற்காக இறுதிப்போட்டியானது நேற்று (ஜூன் 1) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைத்தனத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இந்த லீக் தொடர் முழுவதிலும் இரண்டாவது சிறந்த அணியாக விளங்கிய டொர்முண்ட் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் வாய்ப்பு கிடைத்தும் 3 கோல்களை தவறவிட்டது.
டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து ரியல் மத்ரித் வீரர் வினீசியஸ் ஜூனியர், 9 நிமிட இடைவெளியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியை வீழ்த்தி ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஷிப் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஐரோப்பிய லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வெல்வது இது 15 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளா
- ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்வே. 25 வயதான இவர் பிரான்ஸ் நாட்டின் லீக்-1ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக தொடர்ந்து யூகச் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் பிஎஸ்ஜி அணிக்காகவே விளையாடி வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுவது பிஎஸ்ஜி அணிக்காக தனது கடைசி ஆட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளார். 2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்கள் அடித்தார். ஆனால், போட்டி டிரா ஆகி பெனால்டி ஷூட்அவுட்டில் அர்ஜென்டினா கோப்பையை வென்றன. 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
எம்பாப்வே 2015 முதல் 2018 வரை மொராக்கோ அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 41 கோல் அடித்துள்ளார். 2017-18-ல் லோன் மூலம் பிஎஸ்ஜி அணியில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து தற்போது வரை பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.
- ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பாரீஸ்:
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடந்த அரையிறுதியின் 2-வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என பின்தங்கியிருந்த நிலையில் 88', 90+1' ஆகிய கடைசி நிமிடங்களில் ஜோஸ்லு அடித்த கோல்களால் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் தரப்பில் ஜோசலு வெற்றிக்குரிய 2 கோல்களையும் அடித்தார். பேயர்ட் முனிச் தரப்பில் அல்போன்சோ டேவிஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
அரையிறுதியின் முதல் டெக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரியல் மாட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்டனர்.
- தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
- சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்
பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.
மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.
இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.
இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.
இதனால் ரியல் மாட்ரிட் 14 வீரர்களை வெளியேற்ற இருப்பதாக தகவல் வெளியானது, இதில் டோனி குரூஸ் பெயரும் இருந்தது. இந்நிலையில் குரூஸ் ரில் மாட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்.
பேயர்ன் முனிச் அணியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். இதுவரை 233 போட்டிகளில் விளையாடி 11 கோப்பைகளை முத்தமிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்