என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Remission"

    • அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குத்தகை நிலங்களை அப்பகுதி விவசாயிகள் பரம்பரையாக சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சாகுபடி செய்த பயிர் பாதித்து உரிய குத்தகை செலுத்த முடியாத சூழலில் அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில்,விவசாயிகள் கோவில் நிர்வாகத்திடம் குத்தகை செலுத்தி வரும் நிலையில் திடீரென அறநிலையத்துறை அதிகாரிகள் நவம்பர் 18-ம் தேதி ஏலம் விடப்படுவதாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் செல்வராசு,
    திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டோர் நாகை இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையரை சந்தித்து நேரில் நிலத்தை ஏலம் விடும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் அடங்கிய மனு அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாகை எம்.பி. செல்வராசு கூறுகையில்; குத்தகையை முடிந்த அளவுக்கு கட்டுவதற்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், தற்சமயம் சாகுபடி செய்து வரும் நிலத்தை குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது என்று கூறினார்.

    எனவே, தமிழக அரசு தலையிட்டு ஏலத்தை தடுத்து நிறுத்தி உரிய குத்தகை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நாகை எம்.பி. செல்வராசு கோரிக்கை வைத்துள்ளார்.

    ×