search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Renault Kwid"

    • ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் லிமிடெட் எடிஷன் கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய லிமிடெட் எடிஷன் மாடல் RxZ வேரியண்டை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவனம் கைகர், டிரைபர் மற்றும் க்விட் மாடல்களின் லிமிடெட் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தை ஒட்டி புதிய லிமிடெட் எடிஷன் மாடல்கள் அறிமுகமாகி உள்ளன. லிமிடெட் எடிஷன் கைகர், மற்றும் டிரைபர் மாடல்கள் RxZ வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன. க்விட் லிமிடெட் எடிஷன் மாடல் கிளைம்பர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ரெனால்ட் லிமிடெட் எடிஷன் கார்களின் முன்பதிவு இன்று (செப்டம்பர் 2) துவங்கியது. லிமிடெட் எடிஷன் விலைகளும் டாப் எண்ட் மாடல்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. லிமிடெட் எடிஷன் மாடல்களில் காண்டிராஸ்ட் பிளாக் நிற ரூஃப் வழங்கப்பட்டு இறுக்கிறது. மூன்று மாடல்களிலும் கிரில், ஹெட்லேம்ப் மற்றும் பக்கவாட்டுகளில் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.


    டிரைபர் மற்றும் க்விட் மாடல்களில் பிளாக் பினிஷ் செய்யப்பட்ட வீல் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. கைகர் லிமிடெட் எடிஷனில் ஸ்டாண்டர்டு எடிஷனில் உள்ளதை போன்ற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பிரேக் கேலிப்பர்கள் ரெட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. தோற்றம் தவிர கார்களின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய லிமிடெட் எடிஷன் மாடலை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் வாங்கிட முடியும்.

    ரெனால்ட் க்விட் கிளைம்பர் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 54 ஆயிரம் என துவங்குகிறது. டிரைபர் RxZ விலை ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் என்றும் கைகர் RxZ விலை ரூ. 8 லட்சத்து 39 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் எடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ரெனால்ட் நிறுவன விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து உள்ளனர்.
    • இவை இம்மமாத இறுதி வரை வழங்கப்பட உள்ளன.

    இந்தியாவில் இயங்கி வரும் தேர்வு செய்யப்பட்ட ரெனால்ட் டீலர்ஷிப்களில் அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் வடிவில் இவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.


    அதன்படி ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் ரூ. 44 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 55 ஆயிரம் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே காரின் 1.0 லிட்டர் வேரியண்டிற்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் 4 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் க்விட் மாடல் ரெனால்ட் நிறுவன விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் 2021 க்விட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரெனால்ட் க்விட் விலை ரூ. 4.11 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5.56 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ரெனால்ட் க்விட்

    ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 53 பி.ஹெச்.பி. திறன், 72 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 67 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 91 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டேட்சன் ரெடி-கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரின் விலை மாற்ற இருக்கிறது. #RenaultKwid



    ரெனால்ட் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலான க்விட் காரின் இந்திய விலையை அதிகரிக்க இருக்கிறது.

    அந்த வகையில் இந்தியாவில் ரெனால்ட் க்விட் கார் விலை ஏப்ரல் 2019 முதல் தற்சமயம் இருப்பதில் இருந்து சுமார் 3 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக க்விட் இருக்கிறது.

    சமீபத்தில் ரெனால்ட் தனது மேம்பட்ட 2019 க்விட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட 2019 ரெனால்ட் க்விச் காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு கூடுதல் அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், க்விட் காரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.



    இந்தியாவில் மேம்பட்ட ரெனால்ட் க்விட் பேஸ் வேரியண்ட் விலை ரூ.2.66 லட்சம் என்றும் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.4.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 க்விட் மாடல் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய விலை மாற்றத்தின் படி ரெனால்ட் க்வ்ட் ஹேட்ச்பேக் காரின் பேஸ் வேரியண்ட் விலையில் ரூ.9000 மற்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.12,000 வரை அதிகமாகும். ஏப்ரல் 2019 முதல் புதிய விலை அமலாகிறது. அந்த வகையில் புதிய க்விட் பேஸ் வேரியண்ட் ரூ.2.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கும் எம்.பி.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #Renault



    ரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி. (என்ட்ரி லெவல் க்விட் சார்ந்த மாடல்) கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. புதிய க்விட் சார்ந்த எம்.பி.வி. ஆர்.பி.சி. என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    ரெனால்ட் ஆர்.பி.சி. எம்.பி.வி. கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதால் காரின் சில விவரங்கள் மட்டும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய ரெனால்ட் க்விட் சி.எம்.எஃப்-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. அந்த வகையில் புதிய காரில் அதிக வீல்பேஸ் இடம்பெற்றுள்ளது.


    புகைப்படம் நன்றி: Aravind Siddaarth T K

    காரின் முன்பக்கம் தவிர மற்ற அம்சங்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஒரேமாதிரியாக காட்சியளிக்கிறது. எனினும், காரின் உள்புறம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. உபகரணங்களின் படி தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் எம்.பி.வி. மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (க்விட் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று) வழங்கப்படலாம். இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்கியூ, 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் வின்டோக்கள், டூயல்-சோன் ஏ.சி. கன்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம். புதிய ரெனால்ட் எம்.பி.வி. மாடலின் விலை இந்தியாவில் ரூ.7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    2018 பாரிஸ் மோட்டார் விழாவில் ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #RenaultKZE



    பிரான்ஸ் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் க்விட் ஹேட்ச்பேக் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய க்விட் எலெக்ட்ரிக் மாடல் ரெனால்ட் K-ZE என பெயரிடப்பட்டுள்ளது.

    வடிவமைப்பை பொருத்த வரை எலெக்ட்ரிக் வெர்ஷன் பார்க்க கிட்டத்தட்ட க்விட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. ரெனால்ட் K-ZE கான்செப்ட் மாடலில் ஸ்லீக் ஹெட்லேம்ப்கள், புதிய வடிவமைப்பு கொண்ட கிரில், மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், ஸ்கஃப் பிளேட் மற்றும் பெரிய ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கிறது.



    இத்துடன் புதிய K-ZE மாடலில் பெரிய சக்கரங்கள் மற்றும் கார் முழுக்க நீல நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளது. K-ZE தொழில்நுட்ப அம்சங்களை அறிவிக்காத ரெனால்ட், இந்த கான்செப்ட் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது என அறிவித்துள்ளது.

    எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலில் டூயவ் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதால், வணிகம் மற்றும் வீட்டில் உள்ள வழக்கமான சார்ஜிங் போர்ட்களிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ரெனால்ட் K-ZE கான்செப்ட் சீன சந்தைக்கென வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சீனாவில் இதன் விற்பனை 2019-ம் ஆண்டில் துவங்க இருக்கிறது.
    ×