என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rescue of a"
- அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு தவறி கழிவுநீர் வடிகாலில் விழுந்து விட்டது.
- இதனை மீட்க முடியாமல் எருமை மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் எப்பொழுதும் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி குளம் போல இருக்கும்.
இந்நிலையில் இன்று காலை அந்த வடிகாலில் அருகே எருமை மாடு, நிறைமாதம் கர்ப்பம் தரித்த கன்றும் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எருமை மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்து விட்டது.
இதனை மீட்க முடியாமல் எருமை மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி எருமை மாட்டை உயிருடன் மீட்டனர். இதனால் அந்தியூர்-பர்கூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.