search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rescue of boys and girls"

    • 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • போலீசார் அவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த கண்டரகோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுதிருவிழா நேற்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதி களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் தீர்த்தவாரிக்காக வந்து சென்றன. ஆயிரக்க ணக்கான கடைகள் அமைக்கப் பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையிலும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத விதத்திலும் பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், சீனிவாசன், பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    இந்த திருவிழா கூட்ட நெரிசலில் 5, 6 வயதிற்குட்ட 17 இளம் சிறுவர், சிறுமிகள் மாயமானார்கள். இதுபற்றி அங்கிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டு அவர்களது புகைப்படங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டி ருந்த போலீசாருக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்து, அங்கிருந்த ஒலி பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டு சில மணி நேரத்திற்குள் போலீசார் அவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். போலீ சாரின் மனிதநேயமிக்க சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

    ×