என் மலர்
நீங்கள் தேடியது "Rescued"
- கடல் சீற்றத்தால் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்தது.
- காணாமல் போன ஒரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
கொச்சி:
கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரே படகில் கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் கடந்த 28ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கடற்சீற்றம் காரணமாக அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்த மீனவர்கள் உதவியை எதிர்பார்த்து உயிருக்கு போராடினர்.
இதனிடையே, அந்த பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று, மீனவர்கள் குறித்த தகவலை கடலோர காவல்படையினருக்கு தெரிவித்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், ரோந்து கப்பல் ஆர்யமான் மூலம் அப்பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து கூட்டு நடவடிக்கை மூலம் 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
எனினும் அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்வதில் தாமதம் ஆனதால், கடலோர காவல்படையின் நவீன ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
அந்த மீனவர்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன மேலும் ஒரு மீனவரை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.
- ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அங்கு பணியாற்றி வந்த 3 குடும்பங்களை சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 6 பேர் அவிநாசிக்கு தப்பி வந்தனர்.
நாம் தமிழர்கட்சியினர், உணவு கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும்திருப்பூர் கலெக்டர் வினீத்தை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர். அப்போது ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில்,கொத்தடிமைகளாக நாங்கள் அங்கு இருந்தோம். வேலையில் சேர்ந்த போது கூறியபடி, தினக்கூலி வழங்கவில்லை.வீட்டை பூட்டி வெளியே நிறுத்தி கொடுமை செய்தனர். மேலும் 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.அவர்களையும் மீட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.
இதனால் அங்கு கரும் புகைமண்டலம் உருவானது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும், அலறிஅடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். இதையடுத்து, தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கி இருந்த 4 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. #Moscow #ApartmentBuildingFire
லிபியாவில் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்து கொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
இதேபோல் வன்முறை, உள்நாட்டுப் போர், வறுமை உள்ளிட்ட காரணங்களால் மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் அகதிகள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு லிபியா ஒரு முக்கிய போக்குவரத்து வழியாக உள்ளது. லிபியாவில் இருந்து அவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு, சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல் மூலம் படகுகளில் செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது பல சமயம் விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் லிபிய கடற்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், லிபியாவின் அல் கோம்ஸ் கடற்பகுதியில் நேற்று ஏராளமான அகதிகள் ஒரு ரப்பர் படகில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் படகு கடலில் தள்ளாடியதைக் கவனித்த லிபிய கடலோர காவல் படையினர், உடனடியாக அங்கு சென்று அனைவரையும் மீட்டனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மீட்கப்பட்ட 84 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 18 குழந்தைகள் என 117 பேருக்கும் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் உள்ள அகதிகள் மையத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். #ImmigrantsRescued #LibyanCoast
கடந்த 15-ந்தேதி, ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளை ‘எல்டாய்’ புயல் தாக்கியது. இதனால், ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன.
மொசாம்பிக் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, இந்தியா தனது 3 கடற்படை கப்பல்களை மொசாம்பிக் நாட்டுக்கு அனுப்பி வைத்துள் ளது. அக்கப்பல்கள் அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 200 பேரை மீட்டுள்ளன. இந்திய கடற்படை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரண பொருட்களுடன் மற்றொரு கப்பலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 12 பள்ளி மாணவிகளை உயிருடன் மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக 5 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தின் கட்டிட பணிகள் முடிவடைந்து கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 19-ந் தேதி அந்த கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது மாடிகளின் கட்டிட பணிகள் நடந்து வந்தன. கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோல் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அங்கிருந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கும் 12 பள்ளிக்கூட மாணவிகள் வந்து பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

தற்போது அவர்கள் சிகிச்சைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த தம்பதி உள்பட 3 பேரும் 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடிபாடுகளுக்குள் 12 பள்ளிக்கூட மாணவிகள் உயிருடன் இருப்பதாக மீட்பு குழுவினருக்கு தெரியவந்துள்ளது. அவர்களை உயிருடன் மீட்க தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் போராடி வருகிறார்கள். #DharwadBulidingCollapse
திருமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீவிர விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை கடத்தி சென்ற பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
இதுபற்றி திருமலை போலீசார், திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண், திருமலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்த துளசி என்பது தெரியவந்தது. அவருடைய சொந்த ஊர், சித்தூர் மாவட்டம் கார்வேட்டி நகரம் ஆகும். அவரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, அது திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதியை காண்பித்தது.
திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதிக்குச்சென்ற திருப்பதி போலீசார், அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரித்தனர். அங்கு, கைக்குழந்தையோடு ஒரு பெண் தங்கியிருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்த ஆண் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பிடிப்பட்ட துளசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
துளசி, போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கும் கார்வேட்டிநகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. எங்களுக்கு தலைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை திடீரென இறந்து விட்டது. 2-வதாக நான் கர்ப்பம் ஆனேன். அந்த குழந்தையும் இறந்து விட்டது. இதனால் என்னை விட்டு, கணவர் பிரிந்தார்.
எனக்கு பெற்றோர் இல்லாததால், திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள என்னுடைய பாட்டி வீட்டில் தங்கி வசித்தேன். அங்கு, எனக்கு தனிமை வாட்டவே, வேலைத்தேடி திருமலைக்கு வந்தேன். அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்தபடி, இரவில் சென்று ஏதேனும் ஒரு குழந்தையை கடத்த திட்டமிட்டேன்.
அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் திருமலையில் உள்ள எஸ்.வி.ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகில் படுத்துத்தூங்கி கொண்டிருந்த ஒரு தம்பதியரிடம் இருந்து ஆண் குழந்தையை கடத்தினேன். என் செல்போன் அழைப்பு மூலமாக 24 மணிநேரத்தில் திருப்பதி போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர்.
மேற்கண்டவாறு போலீசாரிடம் துளசி கூறினார்.
இதையடுத்து துளசியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு, அக்குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் ஒப்படைத்தார்.
அதற்கு அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். #Tirupati #BabyRescued
கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டம், மண்டகாடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினுள் நேற்று கொடிய விஷம் கொண்ட ராஜநாகப் பாம்பு புகுந்துள்ளது. வீட்டிற்குள் இருந்தவர்கள் பாம்பு சீறுவதைப் பார்த்ததும், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பதறியடித்து வெளியேறினர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த வீட்டின் முன் திரண்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிடிபட்ட ராஜ நாகம் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றும் இந்த பாம்பை பிடிப்பது கடினமான பணி என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். #KingCobra
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்த விமானத்தில் முகைதீன் என்பவர் கூடையில் வைத்து சிறுத்தை குட்டி ஒன்றை கடத்தி வந்திருந்தார்.
அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுத்தை குட்டி வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
பிறந்து 1½ மாதமே ஆன அந்த சிறுத்தை குட்டியை பூங்கா ஊழியர்கள் கண்காணித்து பராமரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டியை மீண்டும் பாங்காங்குக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அரசின் வனவிலங்கு மற்றும் விலங்கு பொருட்கள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “தாய்லாந்தில் உள்ள அதிகாரிகளிடம் சிறுத்தை குட்டியை திருப்பி அனுப்புவது குறித்து பேசி உள்ளோம். அவர்கள் சிறுத்தை குட்டியை பெற சம்மதித்துள்ளனர். விரைவில் பாங்காங்கிற்கு சிறுத்தை குட்டி அனுப்பப்படும்” என்றார்.
வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, “மீட்கப்பட்ட சிறுத்தைகுட்டி பூங்காவில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அது நல்ல நிலையில் உள்ளது. உரிய உத்தரவு கிடைத்தவுடன் அந்த சிறுத்தை குட்டியை ஒப்படைப்போம்” என்றார். #Leopardcub #Bangkok
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மல்லஹள்ளி கிராமத்தில் உள்ள செங்கல் சூளைகளில் தமிழகத்தை சேர்ந்த 4 சிறுவர்கள், 5 பெண்கள் உள்பட 24 பேர் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் சக்லேஷ்புரா தாசில்தார் மற்றும் போலீசார் உதவியுடன் அங்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த 24 பேரை மீட்டனர். அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் நடுசாலே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. #Hassan #LaborerRescued
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும் ஒரு ராட்டினத்தில் சிறுவர்கள் உள்பட 8 பேர் ஏறி அமர்ந்தனர். கீழே இருந்து புறப்பட்டு 170 அடி உயரத்துக்கு சென்ற அந்த ராட்டினம் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டு, மேல் பகுதியிலேயே நின்றுவிட்டது.
இதனால் ராட்டினத்தில் இருந்த அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராட்டினத்தில் சிக்கியவர்களை பத்திரமாக கீழே இறக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ராட்டினத்தில் சிக்கிய 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். #Helicopter #Newyear #Rescued #CarnivalRide
மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவர் குடும்பத்துடன் கடந்த 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அப்போது இவருடைய 1½ வயது ஆண் குழந்தை வீரேசை காணவில்லை.

இதுகுறித்து திருப்பதி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது உறுதியானது.
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தனர். இந்தநிலையில் மராட்டிய போலீசாரின் உதவியுடன் திருமலை போலீசார், லத்தூர் பகுதியில் குழந்தையோடு சுற்றித்திரிந்த ஒருவரை விசாரித்தனர். விசாரணையில், அவர் லத்தூர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (57) என்பது தெரியவந்தது. அவர் குழந்தையை கடத்தியதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், குழந்தை வீரேசை பத்திரமாக மீட்டனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.