என் மலர்
நீங்கள் தேடியது "Resigned"
- கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.
- சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.
சென்னை:
பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது. சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.
இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.
- கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன்.
- எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நர்சாபுரம் எம்.பி. யாக இருப்பவர் ரகு ராமகிருஷ்ண ராஜி. இவர் தனது எம்.பி. பதிவையே ராஜினாமா செய்து முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார்.
நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்வதற்காக கஜினி முகமது போன்று பல்வேறு முயற்சிகளை செய்தீர்கள். அந்த முயற்சிகள் எதுவும் உங்களுக்கு பயன் தரவில்லை. என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த நர்சாபுரம் தொகுதிக்காகவும், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் போற்றத்தக்க நேர்மையான செயல்களை செய்து இருக்கிறேன்.
கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன். இவ்வாறு அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பி.க்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சட்டசபை கூட்டத்தொடர் ரத்து.
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பிரேன்சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு கடந்த 2023 மே மாதத்தில் இருந்து மைதி மற்றும் குகி இன மக்கள் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.60 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் தங்களது வீடுகளை விட்டு இடம் பெயர்ந்தனர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
குகி-மைதி இன மக்கள் இடையேயான கலவரத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் தூண்டியதாக குகி இனத்தவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் பேசிய ஒரு ஆடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரேன்சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் நேற்று மாலை பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க இருந்த நிலையில் அவர் பதவி விலகியது மணிப்பூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள், மாநில பா.ஜ.க. தலைவர் ஏ.ஷர்தா ஆகியோருடன் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்கும் வரை பொறுப்பு முதல்-மந்திரியாக நீடிக்குமாறு அவரிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.
இன்று தொடங்க இருந்த சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
பிரேன் சிங் தலைமையின் மீது பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருந்த தாகவும் கூறப்பட்டது.காங்கிரஸ் நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏக்களே அதற்கு ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு எடுத்தார்.
பிரேன்சிங் கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் திரும்பியதுமே அவர் ராஜினாமா செய்தார்.
மணிப்பூர் முதல்-மந்திரி பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளதால் இன்று நடைபெற இருந்த சட்டசபை கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக கவர்னர் அஜய்குமார் பல்லா அறிவித்துள்ளார்.
இந்திய அரசிய லமைப்பின் பிரிவு 174-ன் பிரிவு (1) -ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன் படுத்தி, 12-வது மணிப்பூர் சட்டசபையின் 7-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான முந்தைய உத்தரவு இன்னும் தொடங்கப்படாத நிலையில், உடனடியாக செல்லாது என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்" என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.
அங்கு அனைத்துகளும் அரசி யல் மாற்று வழிகள் ஆய்வு செய்யப்படும். புதிய முதல்-மந்திரிக்கு உரிமை கோர போதுமான அளவு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதன் பிறகும் புதிய அரசு அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படாவிட்டால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா டெல்லிக்கு அவசர மாக செல்கிறார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் டெல்லி செல்கிறார். மணிப்பூரில் சட்டசபை பதவிகாலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
இதற்கிடையே பிரேன்சிங் விலகலால் மணிப்பூரில் மைதி- குகி இன மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.
லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், பிரதமர் பதவியில் நிலைக்க அவர் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரதமர் பதவிக்கு தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என மால்கோல்ம் டர்ன்புல் அறிவித்தார். வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.
அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். இதைதொடர்ந்து, ஆஸ்திரேலியா மக்கள் கடந்த பத்தாண்டுகளில் சந்தித்த ஆறாவது பிரதமராக ஸ்காட் மாரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை ஸ்காட் மாரிசன் பிரதமராக பதவி வகிப்பார் என தெரிகிறது. தனது தலைமையிலான புதிய மந்திரிசபைக்கான பட்டியலை ஸ்காட் மாரிசன் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்காட் மாரிசனை எதிர்த்து போட்டியிட்ட ஜுலி பிஷப் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இன்று தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பாராளுமன்றத்தில் இனி ஆளும்கட்சி வரிசையில் அமரப்போவதில்லை. பின்வரிசையில் அமர்ந்து மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.
இதனால், பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் பெரும்பான்மையுடன் ஊசலாட்டம் போடும் ஆளும் லிபரல் கட்சி- தேசிய கூட்டணி பெரிய பின்னடைவை சந்திக்கலாம் என கருதப்படுகிறது. #JulieBishop
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தற்போது துபாயில் உள்ளார்.
இந்த நிலையில், அவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்த தகவலை வெளியிட்ட அந்தக் கட்சியின் புதிய தலைவர் முகமது அம்ஜத். அரசியலில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்து பெஷாவர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அடுத்து முஷரப் பதவி விலகி உள்ளதாக கூறி இருந்தார். இதையடுத்து முஷரப் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டாரோ என்று யூகங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கிற வகையில் முஷரப், வீடியோவில் செய்தி விடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட திட்டமிட்டேன். ஆனால் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தால் கைது செய்யமாட்டோம், வாழ்நாள் தகுதிநீக்க உத்தரவை விலக்கிக்கொள்வோம், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து (முஷரப்) பெயர் நீக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகளை விரும்பினேன்.
கவாஜா ஆசிப்பின் வாழ்நாள் தகுதி நீக்க உத்தரவு ரத்தாகிறபோது, எனக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக்கூடாது? நவாஸ் ஷெரீப் நாட்டை விட்டு செல்லலாம், திரும்ப வரலாம் என்று இருக்கிறபோது எனக்கு அந்த உரிமை கிடையாதா?
நான் விரும்பிய வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. எனது கட்சிக்காக நான் எதுவும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு நாட்டுக்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்தேன்.
சட்டப்பிரச்சினைகளால்தான் இந்த முடிவை எடுத்தேன். நான் தொடங்கிய கட்சியை ஆதரிப்பேன். எதிர்கால நடவடிக்கை குறித்து பின்னர் நிலைமையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு முழுக்கு போடவில்லை என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளார்.