search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rested"

    • கம்ப்யூட்டர் என்ஜினீயரின் காரை திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
    • திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது.

    மதுரை

    மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த லோகநாதன் (33) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார்.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. லோகநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர் கூறுகையில், நான் பெங்களூருவில் கம்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தேன். மதுபான கடைக்குச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினேன். அதன் பிறகு காரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு, அங்கு படுத்து தூங்கினேன். அங்கு வந்த வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டு காரை கடத்திச் சென்று விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

    திருடுபோன அந்த காரில் ஜி.பி.எஸ் கருவிகள் இருந்தது. போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் தேடிப் பார்த்தனர். அந்த கார், ஒத்தக்கடை நோக்கி செல்வது தெரியவந்தது. போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று காரை மடக்கிப்பிடித்தனர்.

    காரில் இருந்த வாலிபரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு கூட்டிச்சென்று விசாரித்தனர். அவர் ஒத்தக்கடையை சேர்ந்த ரமேஷ்(30), கார் மெக்கானிக் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை ‘ஏ’ அணியில் இருந்து விடுவித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #RohitSharma
    மும்பை:

    ரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் இந்திய ‘ஏ’ அணியுடன் இணைந்து 16-ந்தேதி மவுன்ட் மாங்கானுவில் தொடங்கும் முதலாவது 4 நாள் போட்டியில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அறிவுறுத்தியது. இதை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ‘ஏ’ அணியில் இருந்து நேற்று விடுவித்தது.

    20 ஓவர் போட்டித் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி நாளை மறுதினம் மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அந்த அணியுடன் இணைந்து ரோகித் சர்மாவும் கிளம்புவார்.
    ×