என் மலர்
நீங்கள் தேடியது "Restroom"
- ரூ.31.28 லட்சம் மதிப்பில் நவீன பொது சுகாதார குளியலறை, கழிவறை கட்டப்பட்டன.
- தூய்மை பணியாளர் மட்டுமின்றி அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி வார்டு 10 கும்பகோணத்தார் தெரு வடவாற்றங்கரையில் தஞ்சை மாநகராட்சி, தூய்மை பாரத இயக்கம் 2.00 திட்டம் சார்பில் ரூ.31.28 லட்சம் மதிப்பில் நவீன பொது சுகாதாரப் பொது குளியலறை, கழிவறை கட்டப்பட்டன. இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பகுதி 1 மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு நவீன சுகாதார பொது குளியலறை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கழிவறையை மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர் ஆட்சி பொன்னு என்பவரை கொண்டு திறந்து வைக்க செய்தார். மேயரின் இந்த செயலால் அந்த தூய்மை பணியாளர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்து பாராட்டினர்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ( பொறுப்பு ) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா சரவணன், கவுன்சிலர் செந்தமிழ் செல்வன், தி.மு.க.பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகரப் பிரதிநிதி பத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.