என் மலர்
நீங்கள் தேடியது "Rice theft"
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
- காப்பர் ஒயர் 100 கிலோவும் எடுத்து சென்றனர்
ஆரணி:
ஆரணி அடுத்த ராட்டினமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 52). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக அரிசி ஆலை உள்ளது.
இதில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஜெயக்குமார் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல இருந்ததால் அரிசி ஆலையில் உள்ள அனைவருக்கும் அன்று விடுமுறை அளித்துள்ளார்.
பின்னர் அரிசி ஆலை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து அரிசி ஆலை திறந்தார். அப்போது 25 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகள் மற்றும் காப்பர் ஒயர் 100 கிலோ ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொள்ளை போன அரிசி மூட்டைகள் மற்றும் காப்பர் ஒயரின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கொண்ட கும்பல் அரிசி மூட்டைகளை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆரணி சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து மருமகம்பலை தேடி வருகின்றனர்.
அரிசி ஆலையில் மர்ம கும்பல் புகுந்து அரிசி மூட்டைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.