என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rice truck"
- விழுப்புரம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதியது டிரைவர் கவலைக்கிடமாக உள்ளார்.
- இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன் பகுதி முழுவதும் சேதமானது.
விழுப்புரம்:
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரிசிலோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அது விழுப்புரம் அய்யலூர் அகரம் மேம்பாலம் அருகே வந்தபோது லாரியின் பின்னால் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வந்தது. சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த இந்த பஸ்சை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஆம்னி பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன் பகுதி முழுவதும் சேதமானது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலத்த படுகாயங்களுடன் கிடந்த டிரைவர் முனுசாமி மற்றும் காயமடைந்த 4 பயணிகளையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் லாரி மற்றும் ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக ஆம்னி பஸ்சில் இருந்த சகபயணிகள் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில் தற்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் இருக்கும் கரும்பு ஆலைக்கு கரும்புகள் ஏற்றி லாரிகள் தினமும் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வருகின்றது.
இதில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் நேற்று இரவு 8 மணியளவில் கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது. பின்னர் அருகே இருக்கும் வாகனங்களை விரட்ட ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் யானை ரோட்டின் நடுவே நீண்ட நேரம் நின்று விட்டது. பிறகு மெல்ல, மெல்ல யானை நகர்ந்து காட்டிற்குள் சென்றதால் வாகனங்கள் நகர ஆரம்பித்தன.
இதனால் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை அடர்ந்த வனப்ப–குதிக்குள் எங்கேயும் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்