என் மலர்
நீங்கள் தேடியது "Rishabh Pant"
- ரிஷப் பண்ட் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
- அப்போது தான் அவரால் இறுதிவரை களத்தில் இருந்து இன்னிங்ஸை முடித்துக் கொடுக்க முடியும்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக அந்த அணி வீரர்களும் தீவிரமாக தாயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் 4-ம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்த ஐபிஎல் சீசன் ரிஷப் பண்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது கேப்டன்சியைப் பார்த்தால், அவர் மிகவும் மகிழ்ச்சியானவர் மற்றும் மிகவும் புதுமையானவர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு அந்த அமைதியும், சாதுர்யமான தலைமையும் இருக்கிறது. அவர் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்களது அணியைப் பார்க்கும்போது, பூரன், டேவிட் மில்லர் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோர் உள்ளனர்.
இதன் காரணமாக அவர் இத்தொடரில் 4-வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அப்போது அவர்களின் பேட்டிங் வரிசையில் நிறைய ஆழம் இருக்கும். எனவே அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போது தான் அவரால் இறுதிவரை களத்தில் இருந்து இன்னிங்ஸை முடித்துக் கொடுக்க முடியும். ஆனால் இந்த ஐபிஎல் அவரது அதிர்ஷ்டத்தை மாற்றும் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறினார்.
- ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது.
- ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உபி முதல் மந்திரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
லக்னோ:
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அணி வீரர்கள் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் லக்னோ அணி வீரர்கள் கையெழுத்திட்ட மினி பேட்டை யோகி ஆதித்யநாத்திற்கு பரிசாக லக்னோ அணி உரிமையாளரும் கேப்டன் ரிஷப் பண்டும் இணைந்து வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்தது அவுட்டானார்.
- அப்போது நேரலையில் இருந்த சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என திட்டினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தோனியையே மிஞ்சி சதத்தை அடித்துள்ள அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2024- 25 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ரிஷப் பண்ட் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது அவர் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்தது அவுட்டானார். அதைப் பார்த்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்று நேரலையில் கடுமையாக விமர்சித்தார்.
இந்திய அணி தடுமாறும் போது இப்படி விக்கெட்டை பரிசளித்தது உங்களுடைய இயற்கையான ஆட்டம் கிடையாது என்று அவர் ரிஷப் பண்ட்டை சாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலனாதையும் மறக்க முடியாது.
இந்நிலையில் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்று கவாஸ்கர் தம்மை திட்டியதையே கலாய்த்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார். விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடருக்காக அவர் ஏதோ ஒரு விளம்பரத்தில் நடிப்பதாக தெரிகிறது. அந்த விளம்பரத்தில் கவாஸ்கர் தம்மை திட்டிய ஸ்டுப்பிட் எனும் வார்த்தைகளை சிரித்த முகத்துடன் ரிஷப் பண்ட் மாற்றி ஜாலியாக பேசியுள்ளார்.
சொல்லப்போனால் கவாஸ்கர் போலவே பேசுவதற்காக அவர் 2 - 3 முறை "ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்" வெவ்வேறு ஸ்டைல்களில் பேசியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரிஷப்பண்டின் தங்கை சாக்ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார்.
- திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார்.
டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்டின் தங்கை சாக்ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார். இவர்களது திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.

இதையொட்டி திருமண சடங்குகள் நேற்று தொடங்கியது. திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார். இதே போல் சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தோனி, சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் குத்தாட்டம் போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ரிஷப் பண்டின் தங்கை திருமணத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்.
- சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.
சிட்னி:
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்னும் 4 லீக் ஆட்டங்களே உள்ளன. இந்நிலையில் இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்திய அணி தனது கடசி லீக் ஆட்டத்டில் ஜிம்பாப்வே அணியை எதிர் கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி ( பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம் ) , 1 தோல்வி ( தென் ஆப்பிரிக்கா) எடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என இயன் சேப்பல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டிம் டேவிட் சர்வதேச அளவில் என்ன செய்து விட்டார்? சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்தியா, அவர்கள் ரிஷப் பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை பிளேயிங் லெவனில் தேர்வு செய்கின்றனர். இது பெரிய முட்டாள்தனம், நான் என்ன சொல்கிறேன் என்றால் ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்.
மேலும், அந்தப் பேட்டியில் டிம் டேவிட்டை பற்றி கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டில் தனியார் லீக்குகளில் மணிக்கு 120 கிமீ வேகம் வீசும் பவுலர்களை விளாசுவதை வைத்து சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்தால் அங்கு மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை எப்படி அடிக்க முடியும்.
அதனால் தான் சில சர்வதேசப் போட்டிகளையாவது ஆடவிட்டு பிறகு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும். மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை இஷ்டத்துக்கு விளாசுவதெல்லாம் சுலபமானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும்.
- ஹர்திக்கை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவாரா? அல்லது ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழஙகப்படுமா? என்ற விவாதம் சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என இருவரையும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும். 2 சுழற்பந்து வீரர்கள் விளையாட வேண்டுமா? அல்லது ஒரு சுழற்பந்து வீரருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாமா என்று முடிவு செய்ய வேண்டும்.
ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இணைந்து விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். இப்படி நடந்தால் சூர்யகுமார் யாதவ் 4-வது வரிசையிலும், ரிஷப் பண்ட் 5-வது வரிசையிலும் ஹர்திக் பாண்ட்யா 6-வது வரிசையிலும், தினேஷ் கார்த்திக் 7-வது வரிசையிலும் விளையாடலாம். பேட்டிங் வரிசையும் வலுவாக இருக்கும்.
ஹர்திக் பாண்ட்யா தற்போது நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். இதனால் அவரை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- சிறிது காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தால் நல்லது.
- அடுத்து வரும் போட்டிகளில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கிப் பார்ப்பதை விட, தற்போதே ஓய்வு வழங்கிவிடலாம்.
ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த கூறியுள்ளார். சென்னை, நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இவ்விரு தொடர்களுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடரில் 2 போட்டியில் 17 ரன் மட்டும் எடுத்த இவர், 2 ஒருநாள் போட்டியில் 15 ரன் மட்டும் எடுத்துள்ளார்.
தவிர இவர், நடப்பு ஆண்டில் இதுவரை விளையாடிய 11 ஒருநாள் போட்டியில், 326 ரன் (சராசரி 40.75, ஸ்டிரைக் ரேட் 98.19) மட்டும் எடுத்துள்ளார். ஆனால், மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இவர், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 10 ஒருநாள் போட்டியில், 284 ரன் (சராசரி 71.00, ஸ்டிரைக் ரேட்105.57) எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 36 ரன் (38 பந்து) விளாசினார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
ரிஷப் பண்ட், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே நிறைய பேர், பண்ட் சொதப்புகிறார் என பேசத் துவங்கிவிட்டனர். இதற்கேற்ப இவர், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல செயல்படுகிறார்.
தனக்குத் தானே நெருக்கடி ஏற்படுத்திக் கொள்கிறார். இழந்த பார்மை மீட்டு, எழுச்சி பெறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக இவர், சிறிது காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தால் நல்லது. தேர்வுக்குழுவினர், அடுத்து வரும் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கிப் பார்ப்பதை விட, தற்போதே ஓய்வு வழங்கிவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது.
- ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.
நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.
அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் சுமாராக செயல்படாத ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதில்லை. இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சொதப்பலாகவே செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், ரிஷப் பந்திடம் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சில கேள்விகளை கேட்டார்.
Rishabh Pant interview with Harsha Bhogle before 3rd ODI against NZ talking about rain, batting position, stats and scrutiny over T20i performance & WK drills. #NZvINDonPrime pic.twitter.com/TjOUdnPTCz
— S H I V A M 🇧🇷 (@shivammalik_) November 30, 2022
ஹர்ஷா போக்லே கேள்வி: வீரேந்தர் சேவாக் டெஸ்டில் அதிரடி காட்டி டி20, ஒருநாள் போட்டிகளில் சொதப்பியபோது, அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார். உங்களிடமும் இதே கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
ரிஷப் பந்த் பதில்: சார், ரெக்கார்ட் என்பது வெறும் எண்கள்தான். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.
ஹர்ஷா போக்லே கேள்வி: நான் உங்களது ஒருநாள், டி20 ரெக்கார்ட் சரியில்லை எனக் கூறவில்லை. உங்களது டெஸ்ட் ரெக்கார்ட்டைவிட, ஒருநாள், டி20 ரெக்கார்ட் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறேன்.
ரிஷப் பந்த்: ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது. இப்போதே சேவாக் உடனும், எனது டெஸ்ட், ஒருநாள் ரெக்கார்ட்டை எப்படி ஒப்படுருகிறீர்கள். இப்போதே ஒப்பிடுவது சரியான கேள்வி தானா? 30-32 வயதாகட்டும். அதன்பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.
இப்படி இருவருக்கும் இடையிலான உரையாடல் அனல் பறந்தது.
- ரிஷப் பண்ட் இந்தியாவின் முக்கியமான வீரர்.
- டி20 கிரிக்கெட் பேட்ஸ்மன்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
கிறிஸ்ட்சர்ச்:
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்று தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டுள்ள ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மண்களில் சதம் விளாசி பெரிய சாதனை படைத்திருக்கிறார். எனினும் ரிஷப் பண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை, ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஏற்படுத்த முடியவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் 6, 11, 15, 10 ஆகிய ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் ரெக்கார்ட் மோசமாக உள்ளது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக மூன்று ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் ஆறு ரன்கள் மட்டுமே ரிஷப் பண்ட் அடித்திருக்கிறார்.
இது குறித்து பயிற்சியாளர் லட்சுமணன் கூறியதாவது:-
நாங்கள் அனைத்து தரப்பு வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறோம் .அதே சமயம் யாரெல்லாம் அணியில் தேர்வு செய்யப்படவில்லையோ அதற்கான காரணத்தையும் கூறி விடுகிறோம். மிகவும் முக்கியம் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் விளாசி ரொம்ப நாள் கூட ஆகவில்லை. எனவே அவருக்குப் போதிய ஆதரவு வழங்குவது மிகவும் முக்கியம். ரிஷப் பண்ட் இந்தியாவில் முக்கியமான வீரர். ஒவ்வொரு போட்டியிலும் எத்தனை பேட்ஸ்மேன்கள் வேண்டும் எத்தனை பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று யுத்திகளுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து அணியை களம் இருக்கிறோம்.
இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பார்த்தாலே உங்களுக்கு அது புரியும். இதேபோன்று டி20 கிரிக்கெட் பேட்ஸ்மன்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பெரிய ஷாட்கள் அடித்து ரன்கள் குவிக்க முடியும். பயிற்சியாளராக நான் திருப்திகரமாக செயல்படுகிறேன் என்று நினைக்கிறேன்.
ஆனால் நியூசிலாந்து தொடர் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஏனென்றால் வானிலை காரணமாக எங்களுக்கு முழு போட்டியும் கிடைக்கவில்லை. மழை நிற்பதும் தொடங்குவதும் என போட்டி சென்றது. இளம் வீரர்களுடன் பயிற்சியாளராக செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
- ரிஷப் பண்ட் -ன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை தான். இது துரதிஷ்டவசமானது.
- பண்ட் மீது கேப்டனாக இருந்த விராட் கோலி எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மும்பை:
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என வெற்றி பெற்ற போதும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என தோல்வியை தழுவியது. இந்திய அணியின் மோசமான தோல்வியை கூட கண்டுக்கொள்ளாத ரசிகர்களுக்கு, ரிஷப் பண்ட் மீது அணி நிர்வாகம் காட்டும் பாரபட்சம் தான் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டிலுமே அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் இந்த சுற்றுப்பயணத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்றார். அதிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். ஆனால் ரிஷப் பண்ட் மோசமாக விளையாடினாலும் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது. வங்கதேச தொடரிலும் அவர் தான் விளையாடப்போகிறார். இதனால் அவரை நீக்க வேண்டும் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இது குறித்து விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா கூறியதாவது:-
ரிஷப் பண்ட் -ன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை தான். இது துரதிஷ்டவசமானது. இந்திய அணி நிர்வாகம் அவரை நீண்ட காலத்திற்கு உதவுவார் என நம்பியது. பண்ட் மீது கேப்டனாக இருந்த விராட் கோலி எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சொதப்பிய போதெல்லாம் தொடர்ச்சியாக வாய்ப்பை கொடுத்துக்கொண்டே இருந்தார். உள்நாட்டு தொடர்கள் டெஸ்ட் போட்டிகளில் முதலில் பண்ட் சொதப்பினார். எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அதன்பின்னர் சிறப்பாக ஆடினார்.
அதே போல தான் தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் சொதப்புகிறார். உள்நாட்டு போட்டிகளுக்கு திரும்புவதில் எந்த இழிவும் இல்லை. ஃபார்மில் இல்லாத போது, உள்ளூர் போட்டிகளுக்கு சென்று தயாராகி வரலாம். அங்கிருந்து மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பிடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
என ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.
- ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
- டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா:
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், விளையாடிய கடைசி 10 போட்டியில் ஒரு முறை கூட 30 ரன்களை தொடவில்லை. இதில் 5 போட்டியில் ரிஷப் பண்ட் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும் ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், பிசிசிஐக்கு எதிராக டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில், வங்கதேச தொடரிலிருந்து ரிஷப் பண்ட் அதிரயாக நீக்கப்பட்டுள்ளார். பிளேயிங் லெவனில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்யும் பொறுப்பை கேஎல் ராகுல் பார்த்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பிசிசிஐ, ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாடி வருவதால், மருத்துவக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இதே போன்று, டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். பிசிசிஐ காசில் ரிஷப் பண்ட்க்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளனர். இதே போன்று மற்றொரு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல், முதல் ஒருநாள் போட்டியில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள பிசிசிஐ, அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
- சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.
- 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
சட்டோகிராம்:
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இந்திய அணி. சுப்மான் கில் 20 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்களிலும், விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 41 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காத இந்திய அணி, 48 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய பண்ட், தனது வழக்கமான அதிரடியை காட்டினார். டி20, ஒருநாள் போட்டியில் வேண்டுமானாலும் அவர் தடுமாறலாம். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் டாப் வீரர் என்பதை நிரூபித்தார்.
இதனால் சரிவிலிருந்த இந்திய அணி, அடுத்த சில ஓவர்களில் மீண்டது இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது,இந்திய அணி 85 ரன்களை எட்டியது. 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 இன்னிங்சில் 50 சிக்சர்களை விளாசிய 2-வது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.