என் மலர்
நீங்கள் தேடியது "Risk chain"
- ரெயில் பெட்டியில் புகை வந்ததால் அச்சம்
- அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை
ஜோலார்பேட்டை:
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை தினசரி சொர்ணா பேசஞ்சர் ரெயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. அதன்படி வழக்கம்போல் நேற்று மாலை 5.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சொர்ணா பேசஞ்சர் ரெயில் புறப்பட்டது.
பங்காரப்பேட்டை, குப்பம் மற்றும் பச்சூர் வழியாக ஜோலார்பேட்டை நோக்கி பக்கிரிதக்கா அருகே நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் சென்றது. அப்போது ரெயில் எஞ்சின் பின்புறம் உள்ள 3-வது பயணிகள் பெட்டியில் திடிரென புகை வந்தது.
இதனை பார்த்து அதிசடைந்த பயணிகள் கூச்சலிட்டபடி ரெயிலை நிறுத்த அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர்.
அதற்குள் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய பிளாட்பாரம் உள்ளே நுழைந்ததால் டிரைவர் மீனா ரெயிலை பிளாட்பாரத்தில் நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரெயில் பெட்டிகள், என்ஜின் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். புகை ஏதும் வராததால் இன்று 4.30 மணியளவில் மீண்டும் ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூர் நோக்கி சொர்ணா பேசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.