search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ritika Sajdeh"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரோகித் - ரித்திகா தம்பதி 2015 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், ரோகித் - ரித்திகா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ரோகித்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி இணையத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

    ரித்திகா கர்ப்பமாக இருந்ததால் பார்டர்-கவாஸ்கர் கோப்பை பயிற்சிக்காக ரோகித் ஆஸ்திரேலியா செல்லாமல் தனது மனைவியுடன் இருந்தார். இந்நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது.

    • ரோகித் சர்மா கேப்டன் பதவி பறிபோனதையடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு புகழாரம் சூட்டி ஒரு பதிவு வெளியிட்டது.
    • அந்த பதிவிற்கு ரோகித் மனைவி ரித்திகா சஜ்தே கமெண்ட் செய்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ரோகித் சர்மா. இவர் தலைமையிலான மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

    இதனிடையே, மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்ட்யா 2022-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார். அவரை சமீபத்தில் குஜராத் அணியிடமிருந்து அதிக தொகைக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.

    இந்த சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது. அதேவேளை, கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது மும்பை அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவி பறிபோனதையடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு புகழாரம் சூட்டி ஒரு பதிவு வெளியிட்டது. அந்த பதிவிற்கு ரோகித் மனைவி ரித்திகா சஜ்தே கமெண்ட் செய்துள்ளார். அதில் மஞ்சல் நிற இதய எமொஜியை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    முன்னதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்திரநாத் எக்ஸ் தள பதிவில் ரோகித் சர்மாவை சிஎஸ்கே ஜெர்சியில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் எனவும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று நிறைய வதந்திகள் பரவின.

    இருப்பினும், கேப்டன் பதவியில் இருந்து விலகுவது அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார். கடற்கரையில் அவரது மனைவி ரித்திகா மகள் சமிரா ஆகியோருடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    இதில் சுவாரஸ்யமாக நிகழ்வை ரோகித் சர்மாவின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரோயில் பகிர்ந்துள்ளார். அதில் தனது கைப்பேசி கடலில் விழுந்ததாகவும் அதனை ரோகித் கடலில் குதித்து எடுத்துக் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

    • கையில் போடப்பட்ட தையலோடு, பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.
    • அதிர்ஷ்டவசமாக, எலும்பு முறிவு இல்லை, அதனால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது என்று ரோஹித் கூறினார்.

    இந்தியா -வங்காளதேச அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி சிறப்பாக விளையாடி 271 ரன்கள் எடுத்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்கியது.

    இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தனர். எனவே, வங்காளதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது.

    இந்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார் கேப்டன் ரோகித் சர்மா. இதனால் அவர் பேட்டிங்கின் போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் ஒன்பதாவதாக வீரராக களமிறங்கினார்.

    கையில் போடப்பட்ட தையலோடு, கிளவுஸை வெட்டி பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். ஆனாலும் கடைசி வரை போராடியும் அவரால் இந்திய அணியை வெற்றிப் பெறவைக்க முடியவில்லை. ஆனாலும் அவரின் போராட்ட குணத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

    அந்த வகையில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதில் தோன்றுவதை அப்படியே வெளியே சென்று செய்யும் உனக்குள் இருக்கும் மனிதனை பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

    போட்டிக்கு பின் பேசிய ரோஹித், கட்டை விரலில் இடப்பெயர்ச்சி இருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். ஹிட்மேனால் அவர் எவ்வளவு காலம் வெளியேறுவார் என்பதை தெளிவுபடுத்த முடியாத நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலக்கினார்.

    "இது (கட்டைவிரல் காயம்) பெரிதாக இல்லை. சில இடப்பெயர்வு மற்றும் சில தையல்கள். அதிர்ஷ்டவசமாக, எலும்பு முறிவு இல்லை, அதனால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது என்று ரோஹித் கூறினார். பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் டிராவிட், ரோஹித் தனது கட்டைவிரல் காயத்தை பகுப்பாய்வு செய்ய மும்பைக்கு விமானத்தில் செல்வார் என்று கூறினார். சோதனைக்குப் பிறகுதான் அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

    ×