என் மலர்
நீங்கள் தேடியது "robbed of his cell phone"
- நள்ளிரவு 4 பேர் கொண்ட கும்பல் பிரவீன் குமார் அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
- இதுகுறித்து பிரவீன் குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரி.
இவரது தோழி கோவை மீனா எஸ்டேட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 4-ந் தேதி தோழிக்கு பிறந்தநாள் என்பதால் பிரவீன் குமார், அவரது அறைக்கு சென்றார். பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் மறுநாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு பிரவீன் குமார் தனது தோழியின் அறையிலேயே தங்கினார்.
நள்ளிரவு 4 பேர் கொண்ட கும்பல் இவர்களது அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்து அங்கு இருந்து தம்பி சென்றனர்.
இதுகுறித்து பிரவீன் குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தைப் படித்து சென்ற தூத்துக்குடியை சேர்ந்த விஸ்வா (19), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீலகண்டன் (19) ஆகியோரை கைது செய்தனர்.
தலை மறைவாக உள்ள கஸ்தூரி ரங்கன், கருப்பு என்கிற தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- தப்பியோடிய 3 பேரை மடக்கி பிடித்த மக்கள்
- 3 பேரையும் போலீசார் கோர்டில் ஆஜர்படுத்து ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை மசக்காளி பாளையம் வி.கே ரோட்டை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 23). இவர் அந்த பகுதியில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் பீளமேடு துளசியம்மாள் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் பாலகுமாரிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி ஓடினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் தப்பியோட முயன்ற 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவர்களை சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நீலிக்கோணாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த காளிதாஸ் (34), மசக்காளிபாளையத்தை சேர்ந்த விமல்ராஜ் (34), ரகு (30) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கோர்டில் ஆஜர்படுத்து ஜெயிலில் அடைத்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65). இவர் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. சம்பவத்தன்று இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கோபாலகிருஷ்ணன் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பிச்சென்றார்.இதுகுறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மனைவி கவிதா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் யாரே, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையிலிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.