என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "robbers arrest"
செய்யாறு:
செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்காடு பகுதியிலிருந்து செய்யாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்.
விசாரணையில் அவர்கள் முரண்பட்ட தகவல்களை அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம், பனங்காட்டேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது25), கொத்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் (28), ஆம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (25) என்பது தெரியவந்தது.
இவர்கள் கூட்டாக சேர்ந்து செய்யாறு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளியிலும், அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாராசூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் முகமூடி அணிந்து வந்து காவலரை தாக்கி அலுவலகத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் தங்களை அடையாளம் கண்டுகொள்வதை தவிர்க்க கண்காணிப்பு கேமராகளை உடைத்தும், கேமிரா காட்சிகள் பதிவாகும் கருவியையும் எடுத்துகொண்டு சென்றது தெரிய வந்ததுள்ளது.
இதே போல வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து திருப்பதி, கணேசன் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முகமூடி கொள்ளையர்கள் 4 பேரையும் செய்யாறு போலீசார் தேடி வருகின்றனர்.
வியாசர்பாடி, பெரம்பூர், எம்.கே.பி.நகர், சர்மாநகர், சாஸ்திரிநகர் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
இது குறித்து, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரணுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, எம்.கே. பி.நகர் உதவி கமிஷனர் அழகேசன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இரவில் தனிப்படை போலீசார் முல்லை நகர் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றது. போலீசார் அதை விரட்டிச் சென்று மடக்கினார்கள்.
அதை ஓட்டிச் சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் பெயர் தீபன் ராஜ். வியாசர்பாடி ஜே.ஜே.நகரை சேர்ந்த இவர் தனது நண்பர்கள் அஜய், காமேஷ், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருடியதும், செல்போன்கள் பறித்ததும் தெரிய வந்தது.
அவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்கள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட தீபன்ராஜ், அஜய், காமேஷ், அரவிந்த் ஆகியோரை எம்.கே.பி. நகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை புளியந்தோப்பு துணை கமிஷனர் பாராட்டினார்.
திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவை சேர்ந்தவர் சுவாதி. வங்கி ஊழியரான இவர் வீட்டில் புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் டிவி. உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குபதிவு செய்து திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்த அஜித்குமார் (22), லிங்குசெட்டி தெருவை சேர்ந்த அடில்மாசன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3½ பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு டி.வியும் பறிமுதல் செய்யப்பட்டது.
மாதவரம்:
மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது.
எனவே அதை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அதில் இருந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த பைசல் ரகுமான் (22), அவரது நண்பர் திருவொற்றியூர் ராஜ ராஜன் நகரை சேர்ந்த கார்த்திக் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வழிப்பறி திருடர்கள் என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.1500 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னாள் குற்றவாளிகளான இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.
வடபழனியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர்களான மோகன், மாணிக்கம் ஆகியோர் கடந்த மாதம் 23-ந்தேதி காரில் கடத்தப்பட்டனர்.
2 பேரையும் கத்திமுனையில் மிரட்டி பங்களாவில் அடைத்து வைத்த கும்பல் ரூ.33 லட்சம் பணம் மற்றும் 28 பவுன் நகைகளை பறித்தது.
இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வடபழனி உதவி கமிஷனர் சங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பசுபதி, மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கடத்தல் வழக்கின் குற்றவாளிகளான செல்லப்பாண்டி, சுதீர்குமார், நந்த குமார், சேக்தாவூத், சீனிவாசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன், வினோத் ஆகியோர் சைதாப்பேட்டை கோர்ட்டிலும், சரவணகுமார் அம்பத்தூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.
இவர்கள் 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது 3 பேரிடமிருந்தும் ரூ.28 லட்சம் பணம், 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கத்திகளும் கைப்பற்றப்பட்டன. #Tamilnews
சோழவரத்தை அடுத்த எடப்பாளையம், பழைய விமான நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் சாலையோரத்தில் பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் சென்னையை சேர்ந்த சிவா, தினேஷ், ஆனந்த் குமார், விஜயகுமார், விஜய் என்பது தெரிய வந்தது.
சாலையில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், உருட்டுக் கட்டைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்