என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rolls Royce"
- மேம்பட்ட எஸ்யுவி மாடல் கலினன் சீரிஸ் II என அழைக்கப்படுகிறது.
- இந்த காரில் 6.75 லிட்டர் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கலினன் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 10 கோடியே 50 லட்சம் என துவங்குகிறது. இதே காரின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் விலை ரூ. 12 கோடியே 25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மேம்பட்ட எஸ்யுவி மாடல் கலினன் சீரிஸ் II என அழைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் புதிய ஸ்டைலிங், ரிவைஸ்டு இன்டீரியர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
கலினன் சீரிஸ் II மாடலில் மெல்லிய ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் புதிய தோற்றம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகிறது. இந்த காரின் சக்கரங்களும் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலில் 6.75 இன்ச் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 571 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இதே எஞ்சின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- கார் வாங்க வேண்டும் என்றால் மிட்டுசுபிஷி [Mitsubishi] ஷோரூமுக்கு செல்லுங்கள்
- ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்க வேண்டும் என்று அன்றைய தினம் தீர்மானம் செய்ததாக தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சேர்மேன் ஜோய் ஆலுக்காஸ் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் ஒரு சமயம் துபாயில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமில் கார் வாங்கலாம் என்று சென்றதாகவும் அப்போது அங்குள்ள ஊழியர்கள் தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று தெரிவித்தார்.
நான் கார் பார்க்க வந்தேன் என்று ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த ஊழியர்கள், நீங்கள் கார் வாங்க வேண்டும் என்றால் மிட்டுசுபிஷி [Mitsubishi] ஷோரூமுக்கு செல்லுங்கள் அங்கு [வேண்டுமானால்] நீங்கள் கார் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த ஜோய் ஆலுக்காஸ் தான் அதே ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க வேண்டும் என்று அன்றைய தினம் தீர்மானம் செய்ததாக தெரிவித்தார்.
அதன்படி விலையுயர்ந்த கார் கலெக்ஷன்களை தன்வசம் வைத்துள்ள ஜோய் ஆலுக்காஸ் கடந்த மார்ச் மாதம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் Rolls-Royce Cullinan காரை வாங்கியுள்ளார். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டும் (Rolls Royce Ghost) உள்ளது குறிபிடத்தக்கது. 67 வயதான ஆலுக்காஸ், 4.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 50வது பணக்காரர் ஆக உள்ளார் .
- இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ராம்சரண் ஆடம்பர சொகுசு கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் உள்ளவர். தற்போது அவர் 7.5 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கியுள்ளார்.
கருப்பு நிறத்திலுள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கினார் ராம் சரண். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அண்மையில் தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் சரணிடம் உள்ள சொகுசு கார்கள் :
மெர்சிடிஸ் - மேபேக் ஜிஎல்எஸ் 600 - ரூ. 4 கோடி
ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் வி 8 - ரூ 3.2 கோடி
ஃபெராரி போர்டோஃபினோ - ரூ 3.50 கோடி
ரேஞ்ச் ரோவர் ஆக்டோபயோகிராபி - ரூ 2.75 கோடி
பி.எம்.டபுள்யூ 7 சீரிஸ் - ரூ. 1.75 கோடி
மெர்சிடிஸ் - பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே ரூ.1 கோடி
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த வாகனம் உண்மையில் பிரமன் மோட்டார்ஸின் கப்பற்படையின் ஒரு பகுதியாகும்.
- MBPD ஆட்சேர்ப்புக் குழுவிற்கு இந்த அற்புதமான சேர்க்கையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ரோல்ஸ் ராய்ஸ் கார், விற்பனை சந்தையில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தற்போது பிரமன் மோட்டார்ஸ் உடன் இணைந்து போலீஸ் வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு வகையான போலீஸ் க்ரூஸர் வகை கார். மியாமி பீச் போலீஸ், விளக்குகள் மற்றும் சைரன்களுடன் கூடிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டை வெளியிட்டது.
"பிரமன் மோட்டார்ஸ் உடனான எங்கள் ஒத்துழைப்பின் மூலம் சாத்தியமான புதிய விளம்பர வாகனத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று உயர் காவல் அதிகாரி வெய்ன் ஜோன்ஸ் கூறினார். "இந்த வாகனம் புதுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் எங்கள் சமூகத்திற்கு சேவை செய்ய சிறந்த மற்றும் பிரகாசமான நபர்களை பணியமர்த்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது."
"இந்த வாகனம் உண்மையில் பிரமன் மோட்டார்ஸின் கப்பற்படையின் ஒரு பகுதியாகும், மேலும் இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் அவர்கள் சிட்டி ஆஃப் மியாமி பீச் கொள்கையின்படி நிதியுதவி செய்தனர்."
2023 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இந்திய மதிப்பில் 2 கோடியே 98 லட்சம் முதல்3 கோடியே 40 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இது பற்றி மியாமி பீச் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில்
MBPD மற்றும் தொழில்முறை ஊழியர்கள், நாங்கள் சேவை செய்யும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான எங்கள் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் தரமான காவல் பணியின் மிக உயர்ந்த தரத்தை எடுத்துக்காட்டுகின்றனர். MBPD ஆட்சேர்ப்புக் குழுவிற்கு இந்த அற்புதமான சேர்க்கையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
MBPD and professional staff exemplify the highest standards of dedication and quality policing in our unparalleled commitment to the residents and visitors we serve. We are thrilled to introduce this stunning addition to the MBPD recruitment team—courtesy of @bramanmotors ! pic.twitter.com/I27NUAgsge
— Miami Beach Police (@MiamiBeachPD) May 9, 2024
- மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்த மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கோஸ்ட் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் 120-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் என்று அழைக்கப்படும் இந்த கார் மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது.
புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடலில் ஏராளமான காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் டிரெண்டிங் டிசைன் மற்றும் அழகு சாதன துறையை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் கன்மெட்டல் கிரே நிறம் கொண்டிருக்கிறது.
இதுதவிர புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடல்- ஃபீனிக்ஸ் ரெட், டர்சீஸ், மாண்டரின் மற்றும் ஃபோர்ஜ் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இவை காரின் பம்ப்பர் இன்சர்ட்கள், பிரேக் கேலிப்பர்கள மற்றும் கோச்லைன் உள்ளிட்டவைகளில் இடம்பெற்றுள்ளன. இதன் இன்டீரியர் பற்றிய விவரங்கள் அதிகளவு வெளியாகவில்லை.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 555 ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
- ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இரட்டை மோட்டார்கள் கொண்டுள்ளது.
- ஸ்பெக்டர் மாடலில் 102 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விலை ரூ. 7 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2030 ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளராக மாற ரோல்ஸ் ராய்ஸ் திட்டம் கொண்டிருக்கிறது. டிசைனை பொருத்தவரை ஸ்பெக்டர் மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட பாந்தியன் முன்புற கிரில், ஸ்பிரிட் ஆஃப் எக்டசி, ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், 21 இன்ச் ஏரோ டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.
காரின் உள்புறம் டச் ஸ்கிரீன் கொண்ட அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டோன் பிரீமியம் இன்டீரியர், கதவு மற்றும் டேஷ்போர்டில் இலுமினேட் செய்யப்பட்ட பேனல்கள், இருக்கை மேற்கவர்களுக்கு ஏராளமான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் 3.0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலில் 102 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை 195 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 34 நிமிடங்களே ஆகும். இந்த காரில் இரட்டை மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவை இணைந்து 575 ஹெச்.பி. பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.
- இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வினியோகம் செய்யப்பட்டது.
- சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம்.
பிரிட்டனை சேர்ந்த உலகின் முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ். இதன் முதல் எலெக்ட்ரிக் கார் தான் ஸ்பெக்டர். சர்வதேச சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதன் இந்திய வெளியீடு இதுவரை நடைபெறவில்லை. எனினும், இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வினியோகம் செய்யப்பட்டு விட்டது.
முற்றிலும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் சென்னையில் வினியோகம் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆட்டோமொபிலி ஆர்டென்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. புகைப்படங்களின் படி ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் கனரக வாகனம் ஒன்றில் இருந்து தோட்டத்தில் இறக்கப்படுகிறது.
சென்னையில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் இந்த எலெக்ட்ரிக் ரோல்ஸ் ராய்ஸ் காரை யார் வாங்கியுள்ளார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது. இந்தியாவில் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சென்னையில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இந்திய விலை ரூ. 9 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 577 ஹெச்.பி. வரையிலான திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.
- 2022 அக்டோபர் மாத வாக்கில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஆடம்பர கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கி உள்ளன. இதன் மூலம் பிராண்டு இமேஜ், பிரீமியம் டிரைவிங் அனுபவம், புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மூலம் புதுமை செய்வது, வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது, புதிய புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதில் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள், தானியங்கி டிரைவிங் வசதிகளை வழங்குகின்றன. பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், ஆடம்பர கார் உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கிவிட்டன. இந்த வரிசையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஆட்டோ விழாவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக 2022 அக்டோபர் மாத வாக்கில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 430 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 102 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழுமையாக சார்ஜ் செய்தால் 585 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் காரின் உள்புறத்தில் ஸ்டார்லைட் டோர்கள், ஸ்டேரி ஸ்கை ரூஃப், ரோல்ஸ் ராய்ஸ் லோகோ கொண்ட தலையணைகள் உள்ளன.
புதிய ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் காரின் விலை 5.75 மில்லியன் யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 85 லட்சத்து 95 ஆயிரத்து 085 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் வினியோகம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் துவங்க இருக்கிறது.
- ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்கி இருக்கிறது.
- புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு சீட்களை கொண்டிருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயணத்தை துவங்கி உள்ளது. புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் மாடல் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகளை கொண்டுள்ளது.
புதிய ஸ்பெக்டர் மாடல் பாரம்பரியம் மிக்க பேண்டம் கூப் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய அலுமினியம் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலின் பேட்டரிகள், வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் மாடலை விட 30 சதவீதம் உறுதியானதாக மாற்றி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் வழக்கப்படி ஸ்பெக்டர் மாடல் 700 கிலோ சவுண்ட் டெடனிங் பயன்படுத்துகிறது. இது காரின் தேவையற்ற சத்தத்தை காரினுள் கேட்க விடாமல் தடுக்கும்.
இந்த எலெக்ட்ரிக் காரின் முழுமையான அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகள் அடுத்த ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் 430 கிலோவாட் திறன் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். முழு சார்ஜ் செய்தால் இந்த கார் 520 கிலோமீட்டர் வரை செல்லும். அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விற்பனை சர்வதேச சந்தையில் 2024 வாக்கில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்திய விற்பனை துவங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்