என் மலர்
நீங்கள் தேடியது "Ronaldo"
- ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் புகார் அளித்துள்ளார்.
- இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் ரவுண்ட் ஆன் 16 எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் ஆன் 16-க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று தென் கொரிய அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது. எனினும் தரவரிசையில் போர்ச்சுக்கல் முதலிடத்தையும், தென்கொரிய அடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். ரொனால்டோவை பார்த்து அந்த வீரர் 'சீக்கிரம் போ' என கத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ "நான் அவரை அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை' என கூறியுள்ளார்.
- லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன்.
- 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.
தோகா:
பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. இப்போது பிரேசில் வெளியேறி விட்டது. இனி பிரான்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது.
தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்' என்றார்.
லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல' என்றும் குறிப்பிட்டார். 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.
- ஏழைகளுக்காக, கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார்.
- விளையாட்டில் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க முடியாது
பீலேவின் மறைவுக்கு பிரேசில் முன்னணி வீரர் நெய்மார் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், 'பீலேவுக்கு முன் கால்பந்து ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்தது. பீலே அனைத்தையும் மாற்றினார். கால்பந்தை கலையாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றினார். ஏழைகளுக்காக, கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார். அவரால் கால்பந்தும், பிரேசிலும் மேம்பட்டன. அவர் மறைந்து விட்டார். ஆனால் அவரது 'மேஜிக்' எப்போதும் நிலைத்து நிற்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பீலேவை, 'கால்பந்து விளையாட்டின் ராஜா' என்று வர்ணித்துள்ள பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, 'விளையாட்டில் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க முடியாது' என்றார்.
போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கூறும் போது, 'மறைவில்லா கால்பந்து மன்னர் பீலேவுக்கு சாதாரணமாக 'குட்பை' சொல்வது, கால்பந்து உலகம் முழுவதையும் தற்போது சூழ்ந்திருக்கும் வலியை வெளிப்படுத்த போதுமானதாக இருக்காது. என்றென்றும் பல மில்லியன் மக்களுக்கு அவர் உந்துசக்தியாக இருப்பார். கால்பந்தை நேசிக்கும் நம் ஒவ்வொருவரிடமும் அவரது நினைவுகள் நிலைத்து நிற்கும்' என்றார். அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, தன்னுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். உலகத் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
- போர்த்துக்கல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்தார்.
யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி லியச்ட்டேன்ஸ்டீன் அணியை எதிர்கொண்டது. போர்த்துக்கலின் கேன்சலோபெர்னாடோ சில்வா தலா ஒரு கோலும், ரொனால்டோ மிரட்டலாக இரண்டு கோல்களும் அடித்தனர்.
லியச்ட்டேன்ஸ்டீன் அணியால் பதிலுக்கு ஒரு கோல் அடிக்க முடியாததால், போர்த்துக்கல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ புதிய வரலாற்று சாதனையைப் படைத்தார்.
அதாவது, ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து வரலாற்றில் 100 போட்டியில் கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ ஆவார்.
முன்னதாக, கத்தார் உலகக்கோப்பையில் கோல் அடித்ததன் மூலம் ஐந்து உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்திருந்தார்.
- ஆட்டத்தில் மெஸ்சி 26-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
- மெஸ்சி 841 போட்டிகளில் 702 கோல்களை அடித்துள்ளார்.
பாரீஸ்:
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா கேப்டனான அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கிளப்புக்காக விளையாடி வருகிறார்.
பிரான்சு கால்பந்து 'லீக்' போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பி.எஸ்.ஜி-நைஸ் அணிகள் மோதின. இதில் பி.எஸ்.ஜி. 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மெஸ்சி 26-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் ஐரோப்பிய கிளப் கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை மெஸ்சி பிடித்தார். அவர் ரொனால்டோவை முந்தி புதிய சாதனை புரிந்தார்.
மெஸ்சி 841 போட்டிகளில் 702 கோல்களை அடித்துள்ளார். கிறிஸ்டியானா ரொனால்டோ 949 போட்டிகளில் 701 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் விளையாடி மெஸ்சி அதிக கோல்களை அடித்துள்ளார்.
- குத்துச்சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக சல்மான் கான் மற்றும் ரொனால்டோ பங்கேற்றனர்.
- சல்மான்கானை கண்டுகொள்ளாமல் ரொனால்டோ செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் சல்மான்கானும் கால்பந்து வீரர் ரொனால்டோவும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் சல்மான்கானை கண்டு கொள்ளாமல் ரொனால்டோ செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

சல்மான்கான் -ரொனால்டோ
அதில், நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் தனது மனைவியுடன் உள்ளே நுழையும் ரொனால்டோ, அங்கு நின்று கொண்டு இருந்த சல்மான்கானை கண்டு கொள்ளாமல் செல்வார். இந்த வீடியோ வைரலானது. இதற்கு சல்மான்கானை ரொனால்டோ அவமதித்து விட்டதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சல்மான்கானுடன் ரொனால்டோ சிரித்து பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Salman bhai ignoring Ronaldo. Major flex. Tiger Zinda etc. pic.twitter.com/e7PUVcKFZ4
— Gabbar (@GabbbarSingh) October 30, 2023
- இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை.
- ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது.
இணைய தளத்தில் மிகப்பெரிய தேடும் மையமாக கூகுள் அமைந்துள்ளது. கூகுள் பக்கத்தில் தேடினால், கிடைக்காதது ஏதும் கிடையாது எனலாம். இணைய தளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதாக கூகுள்தான்.
இவ்வளவு புகழ் வாய்ந்த கூகுள் நிறுவனம், தங்களது தேடும் பக்கத்தில் கடந்த 25 வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர், விளையாட்டு வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளத.
இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களை பட்டியல் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சர்வதேச சதங்கள் (50) அடித்த விராட் கோலிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.
விராட் கோலி இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார். கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை. இருந்த போதிலும் கூகுளில் தேடும் நபர்களில் நம்பர் ஒன்னாக திகழ்கிறார். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பத்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆனால் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நகர் கிளப்பில் விளையாடி வருகிறார். 38 வயது ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. ரொனல்டோ ரியால் மாட்ரிக் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய காலம் கால்பந்து விளையாட்டின் பொற்காலம் எனலாம்.
ரொனால்டோ மாஸ்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிக் அணிகளுக்காக விளையாடிய 15 வருட காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.
- அபா அணிக்கு எதிராக ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.
- இந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து போட்டியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். ஐந்து முறை பலோன்-டி'ஆர் விருதை வென்றுள்ள அவர், தற்போது சவுதி ப்ரோ லீக்கில் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல்-நசர் அபா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். மேலும் இரண்டு கோல் அடிப்பதற்கு உதவி புரிந்தார். இதனால் அல்-நசர் 8-0 என வெற்றி பெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்-தாய் அணிக்கு எதிராக ஏற்கனவே ஹாட்ரிக் அடித்திருந்தார். இந்த போட்டியில் அல்-நசர் அணி 5-1 என வெற்றி பெற்றிருந்தது. ரொனால்டோ இந்த சீசனில் மொத்தம் 29 கோல் அடித்துள்ளார்.
இந்த சீசனில் அல்-நசர் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அல்-ஹிலால் முதல் இடம் பிடித்துள்ளது. இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணியின் அலேக்சாண்டர் மிட்ரோவிக் 22 கோல்கள் உடன் 2-வது இடத்தில் உள்ளார்.
- கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி.
- 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது.
கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர். இந்நிலையில் ரொனால்டோவின் வருமானம் மெஸ்ஸியை விட 2 அதிகம் என்று தெரியவந்துள்ளது.

பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 260 மில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்பெயின் கோல்ப் வீரர் ஜான் ரஹம் சவுதி இரண்டாம் இடத்தில் உள்ளார். பட்டியலில் லியோனல் மெஸ்ஸி 135 மில்லியன் டாலர் வருவாயுடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்
39 வயதான ரொனால்டோவின் மொத்த வருவாயான 260 மில்லியன் டாலர்கள் பிராந்தியத்தில் இதுவரை ஒரு கால்பந்து வீரர் ஈட்டும் உட்சபட்ச வருவாயாகும். 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது.
- ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தார்.
- எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அண்மையில் ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தது உலக அளவில் பேசுபொருளானது.
இது தொடர்பாக எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு ரொனால்டோ பதிவிட்ட கமெண்ட், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கமெண்ட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
அந்த கமெண்டிற்கு 38 லட்சத்திற்கு மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது.
- குரூப் F பிரிவில் துருக்கி, போர்ச்சுக்கல் அணிகள் நேற்று இரவு மோதின.
- துருக்கி வீரர் சமேத் அகாய்டின் ஓன் கோல் அடித்து போர்ச்சுக்கல் அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
குரூப் F பிரிவில் துருக்கி, போர்ச்சுக்கல் அணிகள் நேற்று இரவு மோதின. ஆட்டத்தின் 21 ஆம் நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி வீரர் பெர்னார்டோ முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 28 ஆம் நிமிடத்தில் துருக்கி வீரர் சமேத் அகாய்டின் ஓன் கோல் அடித்து போர்ச்சுக்கல் அணியின் வெற்றிக்கு உதவினார்.
பின்னர் ஆட்டத்தின் 55 ஆம் நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் புருனோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் அபார வெற்றி பெற்றது.
- ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார்.
- ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது இந்த போட்டியில் தனது முதலாவது கோலை அடிக்க முயன்ற போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார். கோலை மிஸ் செய்த அதிர்ச்சியில் ரொனால்டோவின் கணகளில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.
ஆனால் அதன்பின்னர் சுதாரித்த ரொனால்டோ போட்டியின் அடுத்த பாதியில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை ஸ்கோர் செய்து தொடர்ந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் தனது முதல் கோலை மிஸ் செய்ததால் ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

சமீபத்தில் சவுதி யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தனது அல்- நாசர் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ மைத்தனத்தில் கதறி அழுத்து குறிப்பிடத்தக்கது.