search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rootworm"

    • அதிகாரிகள் விளக்கம்
    • 5 சதுர அடி விட்டத்திற்கு வேர்ப் பகுதியில் மேற்கண்ட மருந்தினை ஊற்ற வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த கரும்புகளில் வேர் புழு தாக்குதல் காணப்படுகிறது.

    இப்புழு தாக்கப்பட்ட கரும்பு பயிரின் வேர்கள் பாதிப்படைந்து குருத்து மற்றும் கரும்பு தூர்கள் வாடிய தோற்றமளிக்கும். கரும்புகள் ஆங்காங்கே திட்டுதிட்டாக காயந்து காணப்படும்.

    நோய் பாதித்த கரும்பின் தூர்களை பிடுங்கினால் சுலபமாக வேர்களை விட்டு வெளியே வரும். பாதிக்கப்பட்ட பயிரின் அடியில் மண்ணுள் வெண்ணிறமான வளைந்த உடலுடன் இப்புழுக்கள் தென்படும்.

    இதனை கட்டுப்படுத்த இமிடாகுளோர்பிரிட் 17.8 எஸ்.எல். மருந்தினை 1 மில்லி அளவை 1 லிட்டர் நீரில் கலந்து பாதிக்கப்பட்ட கரும்பின் வேர்ப்பகுதியில் நன்கு நனையும் படி ஊற்ற வேண்டும்.

    மேலும் சுற்றியுள்ள வளமான கரும்புகளுக்கும் 5 சதுர அடி விட்டத்திற்கு வேர்ப் பகுதியில் மேற்கண்ட மருந்தினை ஊற்ற வேண்டும்.

    அதுமட்டுமின்றி ஒரு ஏக்கருக்கு பச்சை பூஞ்சானமான மெட்டாரைசியம் 500 மில்லி லிட்டர் மற்றும் வேப்பம்புண்ணாக்கு 20 கிலோ என்ற அளவில் அல்லது 50 கிலோ மக்கியதூள் செய்யப்பட்ட தொழு உரத்துடன் கலந்து வேர்ப்பகுதியில் தூவி நன்றாக தண்ணீர் விட வேண்டும்.

    பாதிக்கப்பட்ட கரும்பின் வேர்ப்பகுதியில் உள்ள வெள்ளைப் புழுக்களை சேகரித்து தீயிட்டு அழிக்க வேண்டும் என செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் காமாட்சி தெரிவித்து உள்ளார்.

    ×