search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "routing"

    • அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
    • கிராமங்களில் காவல் துறையின் அனுமதி யின்றி ஒலிபெருக்கி அமைக்க கூடாது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாளை மறுநாள் 11-ந் தேதி இமானுவேல் சேகரன் நினைஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கமுதி-கோட்டை மேட்டில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் வாடகை வாகனம், ஒலிபெருக்கி உரிமையா ளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், அபுதெல்கா விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வாடகை வாகன உரிமையாளர்கள், ஒலிபெருக்கி, பிளக்ஸ் பேனர் அச்சக உரிமையா ளர்கள், பேன்சி ஸ்டோர் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கமுதியை சுற்றியுள்ள கிராமங்களில் காவல் துறையின் அனுமதி யின்றி ஒலிபெருக்கி அமைக்க கூடாது, சாதி மோதல்களை தூண்டும் வகையில் தலைவர்களின் புகைப்படங்கள், வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை வைக்கக்கூடாது, வாடகை ஆட்டோக்கள் அத்தியா வசிய தேவைகளை தவிர்த்து, நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு இயக்க ஆட்ட உரிமையாளர் களுக்கு அனுமதி இல்லை, இளைஞர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் பேன்சி ஸ்டோர்களில் முகமூடி விற்க கூடாது என அறிவறுத்தப்பட்டது.

    மேலும் அனுமதிக்கப் பட்ட வழித்தடத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும், மேற்கூரைகளில் பயணிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

    ×