என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rowdy death"
பெரம்பூர்:
வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (28). பிரபல ரவுடியான இவர்மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவருடைய நண்பரான ரவுடி பழனி 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய நினைவு தினத்தில் கார்த்திக்கும் அவருடைய நண்பர்களும் பழனி பேனருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலாபிஷேகம் செய்து கலாட்டாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ரவுடித்தனமும் செய்து வந்தனர். வழிபறியிலும் ஈடுபட்டனர்.வருகிற 29-ந்தேதி பழனி நினைவு நாளில் இவர்கள் கலாட்டாவில் ஈடுபடலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அண்ணாநகரில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கார்த்திக் அவருடைய நண்பர்கள் அன்வர் பாட்சா, ராஜ்குமார், அருண் பாண்டியன் ஆகியோரை நேற்று முன்தினம் எம்.கே.பி. நகர் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அனைவரும் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குடிபோதையில் இருந்த கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கார்த்திக் நேற்று மதியம் மயங்கி விழுந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருடைய உடல்நிலை மோசமானதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவலை அறிந்ததும், பக்தவத்சலம் காலனியில் உள்ள கார்த்திக் உறவினர்கள், நேற்று இரவு வியாசர்பாடி அம்பேக்தர் கல்லூரி அருகே மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு சென்று அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
இறந்த ரவுடி கார்த்திக் குடியிருந்த வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு பதட்டம் நிலவியது. இன்றும் கார்த்திக் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கார்த்திக் நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மாஜிஸ்ரேட்டு நேரில் விசாரணை நடத்துகிறார். இதனால் அங்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரவுடிகளை மடக்கி பிடித்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்கள் இந்த பகுதியில் அடிக்கடி ரவுடி தனத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடந்த வழப்பறியிலும் இவர்களுக்கு தொடர்பு உண்டு. எனவே, அனைவரையும் தேடி வந்தோம். தப்பி ஓடிய அவர்களை செல்போன் மூலம் கண்டுபிடித்தோம். அதிக போதை காரணமாக கார்த்திக் இறந்திருக்கலாம். மாஜிஸ்திரேட் விசாரணை நடை பெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சந்தோஷ்குமார் ஸ்டான்லி மருத்துவமனை சென்று கார்த்திக் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
உடல் பரிசோதனைக்கு பிறகு கார்த்திக் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதையொட்டி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொன்னேரி:
திருவொற்றியூர், பூங்கா புரத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், பிரபல ரவுடி. கடந்த 30-ந் தேதி பொன்னேரி பகுதியில் கொள்ளையில் ஈடுபட பதுங்கி இருந்ததாக போலீசார் அவரை கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
நேற்று காலை சிறையில் இருந்த அடைக்கலராஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சிறை அதிகாரிகள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடைக்கலராஜ் இறந்தார்.
அடைக்கலராஜின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி ருக்மணி சந்தேகம் எழுப்பி இருந்தார். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அடைக்கல ராஜின் மரணம் குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி மணி உத்தரவின் பேரில் பொன்னேரி மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். ஜெயில் அதிகாரிகள் மற்றும் அடைக்கலராஜின் உறவினர்கள், டாக்டரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் இன்று அடைக்கலராஜின் உடல் வீடியோ பதிவுடன் பிரேத விசாரணை செய்யப்படுகிறது. இன்று பிற்பகல் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்