என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RS Bharati"

    • தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாட்டு விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
    • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், அரசியலில் தங்களது எதிரிகள் யார் என்பதை தெளிவுப்படுத்தினார். மேலும், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

    இது தொடர்பான உரையில், "நாட்டை பாழ்ப்படுத்துகிற, பிளவுவாத அரசியல் செய்கிறவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமுதற் ஒரே கொள்கை எதிரி, அடுத்து திராவிட மாடல் என்று சொல்லி கொண்டும், பெரியர், அண்ணா பெயரை சொல்லி கொண்டும் தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற ஒரு குடும்பம் நமது எதிரி," என்று விஜய் பேசினார்.

    த.வெ.க. மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசும் போது, "தி.மு.க. ஆலமரம் போன்றது. காய்ந்த மரம் தான் கல்லடி படும். யார் கல்லெறிந்தாலும் தாங்கிக் கொள்ளும் சக்தி தி.மு.க.-வுக்கு உள்ளது," என்று தெரிவித்தார்.

    • நேற்று முளைத்தவர் எல்லாம் தி.மு.க.வுக்கு சவால் விடுகிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசுகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர தி.மு.க.வுக்கு உட்பட்ட பாளை பகுதி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பாளை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இதில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகளில் 40 ஆண்டுகால சாதனையை செய்து முடித்துள்ளார். மகளிருக்கு உரிமைத் தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

    நேற்று முளைத்தவர் எல்லாம் தி.மு.க.வுக்கு சவால் விடுகிறார்கள். அவரது அப்பாவையும் நாங்கள் தான் அறிமுகம் செய்தோம். நாடாகமாடுவதில் தி.மு.க. கை தேர்ந்தவர்கள் என நேற்று முளைத்தவரெல்லாம் சொல்கிறார். அவரும் ஒரு நடிகர் என்பதை மறக்க கூடாது.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சமாதி கட்டி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை மறக்ககூடாது. வாரம் ஒரு முறை தமிழகத்தின் ஊர் ஊராக வந்து மோடி பொய்யாக பேசி சென்றார். அனைத்தையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு மகளிர் தான் காரணம். எம்.ஜி.ஆருக்கு ஏஜெண்டாக தேர்தலில் செயல்பட்டவன் நான்.

    எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்கு சாலையில் சென்றால் கூட்டம் புற்றீசல் போல் சாரை சாரையாக வந்துவிடும். எம்.ஜி.ஆருக்கு வந்தது போல் இப்போது மு.க. ஸ்டாலினுக்கு கூட்டம் அதிகமாக வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் ஆண்கள் வாக்குகளை விட பெண்கள் வாக்குகள் தான் அதிகமாக தி.மு.க.வுக்கு வந்தது. பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் 100-க்கு 90 வாக்கு தி.மு.க.வுக்கு கிடைத்தது. மக்களுக்கான ஆதரவை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசுகிறார்.

    தமிழகத்தின் இளைஞர்களை சீமான் ஏமாற்றுகிறார். சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது. நான் நீதிமன்றத்தை நாடினால் அந்த பெயரையே இனி சீமான் பயன்படுத்த முடியாது.

    பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து சீமான் போர்ஜரி செய்து வருகிறார். விடுதலை புலிகள் பிரபாகரன் சீடர்கள் 48 பேர் ஜாமீன் மீதான வழக்கில் நான் ஆஜராகி காப்பாற்றிய கட்சி தி.மு.க. என்பதை சீமான் மறக்க கூடாது.

    பிரபாகரனையும், விடுதலை புலிகளையும் காப்பாற்றியது தி.மு.க. மற்ற கட்சிகள் எல்லாம் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் ஒரு நடிகர் நேற்று நாடகம் ஒன்றை ஆடினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டுக்காகவா விமான நிலையம் கேட்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தை மதுரைக்கு நிகராக கனிமொழி எம்.பி. முயற்சியால் மாற்றியுள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். விமான நிலைய பிரச்சினை குறித்து முன் பின் விசாரிக்காமல் விஜய் பேசுகிறார். பரந்தூரில் விஜய் வியாபாரம் செய்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பரந்தூர் பகுதியில் 443 பேர் வாக்களித்ததில் 51 சதவீதம் தி.மு.க.வுக்கு தான் விழுந்துள்ளது. இதில் தி.மு.க.வை அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அர்த்தம். பரந்தூர் பகுதி வாக்குசாவடியில் அனைத்து கட்சிகளைவிட தி.மு.க.விற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான்.
    • பெரியார் கவுன்சிலருக்கு நின்றாரா? எம்.எல்.ஏ.விற்கு நின்றாரா?

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஒரு தாடி வைத்த கிழவன் இந்த நாட்டில் தோன்றாமல் இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் பிச்சைக்காரர்களாக இருந்திருப்போம். நாங்கள் இன்று மேடை போட்டு உட்கார முடியுமா? பெண்கள் நார்காலியில் அமரமுடியுமா?

    பெரியார் கவுன்சிலருக்கு நின்றாரா? எம்.எல்.ஏ.விற்கு நின்றாரா? எம்.பி.க்கு நின்றாரா? முதலமைச்சர் ஆகா வேண்டும் என்று ஆசைபட்டாரா?

    நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான். ஆனால் ஒரு சமுதாயத்திற்கே தலைவராக இருந்த பெரியார் கவுன்சிலராக கூட ஆசைப்படவில்லை" என்று தெரிவித்தார்.

    • அறிவாலயத்தை புடுங்குவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தூள் தூளாகிவிட்டனர்.
    • தொண்டர்களுக்கு எழுச்சியும், உணர்ச்சியும் ஏற்படுமே தவிர சோர்வடையமாட்டார்கள்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும் போது, கவர்னரும், அண்ணாமலையும் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் பேசி வருவது ஆணவத்தின் உச்சம். நான் இங்கேயே தான் இருப்பேன். அறிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இருப்பேன் என்று பேசினார்.

    அண்ணாமலையின் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக பதில் தெரிவித்துள்ளார்.

    அறிவாலயத்தை புடுங்குவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தூள் தூளாகிவிட்டனர். காணாமல் போய் விட்டார்கள். எனவே அண்ணாமலையும் அந்த வரிசையில் இடம் பெற போகிறார். அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது.

    தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் மொத்த பேரும் அழிந்து போயிருக்கிறார்கள். இதுதான் வரலாறு. இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை.

    இந்த மாதிரி அண்ணாமலை பேசுவதால் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுச்சியும், உணர்ச்சியும் தான் ஏற்படுமே தவிர யாரும் சோர்வடையமாட்டார்கள்.

    அதுமட்டுமல்ல 2026-ல் ஊழல் பெருச்சாளிகள் சிறைக்கு செல்வதை பார்க்கும் வரை இருப்பேன் என்கிறார். 2026 அல்ல 3026-ல் கூட அது நடக்காது.

    இப்படியே அவர் பேசுவது நல்லதுதான். தி.மு.க.வுக்கு ஒரு சோதனை என்றால் தலைவர் கலைஞர் சொல்வார் தூங்கினால் என் தொண்டன் கும்பகர்ணன். எழுந்திரிச்சி நின்றால் இந்திரஜித். அந்த வகையிலே இந்த மாதிரி பேசினால், தி.மு.க. காரர்கள் அத்தனை பேரும் இந்திரஜித் ஆவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×