search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.33.60 lakhs loan"

    • ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள கிராமங்களை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வண்ணமாக பல்வேறு திட்டங்களை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் சின்னத்துரை செயல்படுத்தி வருகிறார்.
    • உழவர் கடன் அட்டை காசுகடன் 2 பேருக்கு ரூ.6 லட்சம் என மொத்தம் 62 பேருக்கு ரூ.39.60 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, மாரமங்கலம், செல்வநாயகபுரம், லெட்சுமி புரம், சூளை வாய்க்கால், இடையர்காடு, தளவாய்புரம், சம்படி ஆகிய கிராமங்களை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வண்ணமாக பல்வேறு திட்டங்களை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் சின்னத்துரை செயல்படுத்தி வருகிறார்.

    கறவை மாடுகள்

    அதன்படி கறவை மாடுகள் பராமரிப்பதற்கு குறுகிய கால கடனாக 60 உறுப்பினர்களுக்கு ரூ.33.60 லட்சம் மற்றும் உழவர் கடன் அட்டை காசுகடன் 2 பேருக்கு ரூ.6 லட்சம் என மொத்தம் 62 பேருக்கு ரூ.39.60 லட்சம் கடன் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 390 உறுப்பினர்களுக்கு பயிர்கடன் மற்றும் நகைக்கடனாக ரூ.268.20 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தில் மொத்த கடன் நிலுவை உழவர் கடன் அட்டை காசுக்கடன் 35 உறுப்பினர்களுக்கு ரூ.55.40 லட்சமும், விவசாய நகைக்கடன் 116 உறுப்பினர்களுக்கு ரூ.254.26 லட்சம், வேளாண்கூட்டு பொறுப்புக்குழு கடன் 166 உறுப்பினர்களுக்கு ரூ.160.90 லட்சம், பொது நகைக்கடனாக 368 உறுப்பினர்களுக்கு ரூ.188.07 லட்சம், குறுகிய கால கடனாக ரூ.33.60 லட்சம், மகளிர் சுய உதவி குழு கடன் விடிவெள்ளி இலக்கு மகளிர் சுய உதவி குழு கரையடியூர் ரூ.2.91 லட்சம், இதர கடனாக 84 உறுப்பினர்களுக்கு ரூ.10.31 லட்சம் என மொத்தம் 911 உறுப்பினர்களுக்கு ரூ.7 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் நிலுவையில் உள்ளது.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஸ்ரீவைகுண்டம் சரக மேற்பார்வையாளர் மதியழகன், செயலாளர் அய்யம்பாண்டி, மேலாளர் முத்துகிருஷ்ணகுமார், முதுநிலை எழுத்தர் ஆனந்தராமன்,வக்கீல் சரவணன், சங்க பணியா ளர்கள் செந்தூர்பாண்டி, கதிர்வேல், கொடியரசி, விஜய லெட்சுமி, மரிய செல்வி, செந்தி, பெருமாள், அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×