search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.73 lakhs"

    • புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
    • மாட்டுச்சந்தையில் கால்நடைகள் ரூ.73 லட்சத்திற்கு விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.

    இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று போன்ற கால்நடைகள் ரூ.73 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை நடைபெற்றது.
    • 259 விவசாயிகள் தங்களுடைய 2,572 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 73 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 259 விவசாயிகள் தங்களுடைய 2,572 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 854 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 13 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 7,550 முதல் ரூ. 9,819 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,880. கடந்த வார சராசரி விலை ரூ. 8,950. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 73 லட்சம்.

    விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    ×