search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rts can apply for"

    • கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஆண்டு தோறும் 15 கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.

    18 வயதிற்கு உட்பட்டோ ருக்கு "கலை இளமணி" விருதும், ரூ.4000 காசோலை யும், 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு "கலை வளர்மணி" விருதும், ரூ.6000 காசோலையும், 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு "கலை சுடர்மணி" விருதும், ரூ.10,000 காசோலையும், 51 வயது முதல் 65 வயது பிரிவினர்க்கு "கலை நன்மணி" விருதும், ரூ.15,000 காசோலையும், 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்க்கு "கலை முதுமணி" விருதும், ரூ.20,000 காசோலையும் வழங்கப்பட உள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் இசை, நாட்டியம், ஓவியம், நாட்டுப்புற கலைகள், நாடகம், கருவியிசை, சிற்பிகள், கைவினைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு மாவட்ட கலை ஞர்கள் விருது பெற தங்க ளது சுய விவர குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து உரிய சான்று களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டு த்துறை மண்டல அலுவலகம், செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டி அஞ்சல், கோவை-641050 என்ற முகவரிக்கு வருகின்ற 29-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விவரம் வேண்டுவோர் 0422-261029 0 அல்லது 944221 3864 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ×